சி. ஜெயபாரதன், கனடா புலியோடு வசிப்ப தென்று இறுதியில் உலக ஞானிகள் உறுதி கொடுத்தார் ! வீட்டுக் குள்ளே புலியா ? ஒரு சில மாதங்கள் உலகத்தார் கிலியோடு புலியோடு தூங்குவார் ! மீளாத் தூக்கம் சிலர் பெறுவார் ! நரக புரி இன்னும் சொர்க்க புரி ஆகவில்லை ! புலிக்குப் பசித்தால் புல்லைத் தின்னா தென்பது எல்லாரும் அறிவர் ! கிலி பிடித்து மாந்தர் நித்தம் நித்தம் சித்தம் கலங்கி, பித்துப் பிடித்து தூங்காமல் தூங்கி […]
ஈடுபடும் இறைமகள் பொறாமைகொல் இதுபொறாமை கொல்! இறைவர் தம் காடுபடு சடை ஊடும் உருவு கரந்து வருவது கங்கையே. [61] [ஈடு=ஒப்பு; இறைமகள்=பார்வதி; பொறாமை=எரிச்சல்; பொறாமை=தாங்க முடியாமை; காடுபடு=காடுபோன்ற; ஊடு=உள்ளே; உருவு கரந்து=ஒளிந்துகொண்டு; கங்கை=நதிப்பெண்] பார்வதியின் மீது கொண்ட பொறாமையால் எரிச்சலடைந்து கங்கையானவள் சிவபெருமானின் காடு போன்ற சடையில் ஒளிந்து வாழ்வதாகச் சொல்கிறார்காள். இல்லை. அது காரணம் இல்லை. கங்கை இப்பாலையின் வெப்பத்துக்கு அஞ்சித்தான் சிவனின் தலையில் […]
முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. Mail id: periyaswamydeva@gmail.com Cell: 9345315385 முன்னுரை ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியே சிறந்த அறிவாற்றலை அளிக்கவல்லது. அக்கல்வியே சான்றோரிடத்தும் நம்மைக் கொண்டு செல்லும் இயல்புடையது. ஒரு பிறவியில் தான் கற்ற கல்வியானது ஏழுபிறவிக்கும் வந்து நன்மைசெய்யும் என்கிறார் வள்ளுவர். இவ்வாறான பல்வேறு ஆற்றல்களையுடைய கல்வியியல் சிந்தனைகள் எவ்வாறு திருக்குறளில் திறம்பட எடுத்தியம்பப்பட்டுள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கல்வியின் சிறப்பு கல்வியே அனைத்து செல்வங்களிலும் உயர்வானது […]
அன்புள்ள நண்பருக்கு, வணக்கம். நலம்தானே? நீங்களும் என்னைப் போலவே இந்த வீடடங்கு தினங்களில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். என்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகக் கிடைக்கின்றன. வாய்ப்பிருந்தால், வாசித்து விட்டு அபிப்ராயத்தைப் பகிருங்கள். 1. வாசிப்பது எப்படி? – https://www.amazon.in/dp/B086HPBW13 2. பாலை நிலப் பயணம் –https://www.amazon.in/dp/B0855GH66F 3. நகுமோ லேய் பயலே – https://www.amazon.in/dp/B086YNSY89 4. உறைப்புளி – https://www.amazon.in/dp/B087PKBZ9T உலகைச் சூழ்ந்திருக்கும் இருள் விலக என் பிரார்த்தனைகள். விரைவில் மீள்வோம். மிக்க அன்புடன், செல்வேந்திரன்
ரேவதிசோமு 2020 புதுவருடம் பிறந்ததும் உலகில் உள்ள அனைத்து தொழிற்ச்சாலைகளும் மூடப்படும் என்று அவளிடம் யாராவது சொல்லியிருந்தால், அதை அவள் தன்னை கேலிசெய்கிறார்கள் என்றே நினைத்திருப்பாள். கிரேட்டா தன்பர்க் மற்க்கமுடியாத பெயர். அவளது வார்த்தைகளுக்கு மனிதர்கள் யாரும் செவிசாய்க்கவில்லை. ஆனால், உலகம் அவளது குரலைக்கேட்டது. இயற்க்கை அவளது குரலுக்கு மனமிறங்கியது. உலகின் தற்ப்போதயநிலை ! அடடா! காற்று சுத்தமானது! நீர் சுத்தமானது! ஏன், ஓசோன் படலத்தின் ஓட்டை கூட அடைபட்டிருக்கும் இன்னேரம். கழிவுகள் அனைத்தும் தற்க்காலிகமாக நிறுத்தி […]
கோ. மன்றவாணன் கொரோனா நோய்நுண்ணியின் கோரத் தாண்டவத்தில் மிதிபட்டு நசுங்குகிறது இந்த உலகப் பந்து. இந்த நோய்பரவும் காலக் கட்டத்தில் Quarantine, Isolation போன்ற சொற்கள் ஊடகங்களில் அடிக்கடி ஒலிக்கின்றன. இந்தப் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொற்கள் என்ன என என்னிடம் கேட்டார் தோழி ஒருவர். தமிழ் ஊடகங்களில் அச்சொற்களுக்குத் தனிமைப்படுத்தல் என்று தமிழ்படுத்தி உள்ளனர். இது போதுமான பொருளைத் தருகிறது. என்றாலும் தனிமைப்படுத்தல் என்ற சொல் வேறு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுத் தனிமை என்பதில் […]
கொரானா காலத்தில் மதுவகைகளும் இரண்டு, மூன்று மடங்கு அதிகவிலையில் சுலபமாகக் கிடைக்கின்றன, அதிக விலை கொடுக்க முடியாதவர்கள் ஷேவ் லோசன், கள்ளச்சாரயம் என்று குடித்துச் சாகிறார்கள்.சில குடிகார நண்பர்கள் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத கஷ்ட காலத்தில் தூக்க மாத்திரை விலை குறைவு என்று ஒன்றைப்போட்டு நித்திரை தேவியை சுலபமாக அணைத்துத் தூங்கப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். லோகேஸ்வரி இறந்த போது அவளின் அப்பாவுக்கு பலநாட்கள் கவலையை மறக்க யாராவது சிறு சிறு அனுதாபத்தொகையைக் கொடுத்து மதுபானம் […]
மரத்தின் வாழ்க்கை மகத்தானது ஊன்றிய இடமே உலகம் உலகம் அங்கு ஒடுங்கும் கொடியையும் தாங்கும் இடியையும் தாங்கும் மண்ணும் மழையும் காற்றும் கதிரவனும் கைகட்டி நிற்கும் அளந்து பெறாது அளந்து தராது கேட்டுப் பெறாது கேட்டுத் தராது விடியலை இருளை தளிரால் வாழ்த்தும் சருகால் வணங்கும் பறவைகள் பூச்சிகள் தான் பெற்ற பிள்ளைகள் கனிகள் தந்து குலத்தினைக் காக்கும் நிழல் தரும் மழை தரும் மனிதனுக்காக உயிரையே தரும் மரம் மனிதனுக்குச் சொல்கிறது ‘என்னைப் போல் இடப்பெயர்ச்சி […]
நண்பர் திரு.பா. சேதுமாதவன் கவிதை , சிறுகதை ஆகிய வடிவங்களைக் கையாண்டு வருகிறார். இவர்வரலாறு தொடர்பான நூலொன்று ம் எழுதியுள்ளார். ‘ சொற்குவியம் ‘ என்ற இந்நூல் ஆசிரியரின் ஒன்பதாவது நூலாகும். இதில் கட்டுரைகள் , உரைகள் , மதிப்புரைகள் , நூல் அணிந்துரைகள் , நேர்காணல்கள் என்னும் ஐந்து பகுதிகள் காணப்படுகின்றன. பசுவய்யா, விக்ரமாதித்யன், சுப்ரமணிய ராஜு, கல்யாண்ஜி, இங்குலாப், வாலி, பாலகுமாரன், த. பழமலய், சுயம்புலிங்கம், மனுஷ்யபுத்திரன், அனார், ஆகியவர்களின் கவிதைகளிலிருந்து […]
ப.ஜீவகாருண்யன் கைபேசி ஒலித்தது. ஆற்காட்டிலிருந்து தங்கை கெளரி தழுதழுத்துப் பேசினாள். “அண்ணா, ஒன்பது மணிக்கு வேன் காஞ்சிபுரம் வந்துடும். நீயும் அண்ணியும் தாயாரா இருங்க. பதினோரு மணிக்கு மகாபலிபுரம் போய்டலாம்.” தயக்கத்துடன் சம்மதம் தெரிவித்தேன். தங்கைக்குப் பேரிழப்பு ஏற்பட்டு விட்டது. வேலூர் கல்லூரி ஒன்றில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த தங்கை மகன் பாஸ்கர் இருசக்கர வாகன விபத்தில் இருபது நாட்களுக்கு முன்பு உற்றாரைப் பெற்றாரை நிலைகுலைத்து இறந்து விட்டான். மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் […]