ஜோதிர்லதா கிரிஜா 1. ஊர்மிளா ஊருக்குப் போனதிலிருந்து சேதுரத்தினம் தானே சமைத்துச் சாப்பிட்டு வருகிறான். இன்று சமையல் செய்வதற்குக் காத்திருக்க இயலாத அகோரப் பசியுடன் அவன் அந்த ஓட்டலுக்குள் நுழைந்தான். சின்ன வயசிலிருந்தே சமையல் செய்து அவனுக்குப் பழக்கமாகி யிருந்ததால், அதில் அவனுக்குச் சிரமம் ஏதும் தெரிவதில்லை. ஒரு வகையில் உற்சாகமாய்க் கூட இருந்தது. ஊர்மிளாவுக்கும் அதில் மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு சமயம், போது என்றால் நெருக்கடியைச் சமாளிக்க அவனுக்குத் தெரிந்திருந்ததால், தனது சுமை குறைந்ததை எண்ணித்தான்! […]
புதியமாதவி மிகக் குறுகிய காலத்தில் திராவிட இயக்கம் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அந்த வெற்றிக்குப் பின் என்ன ஏற்பட்டது. சரிவை நோக்கி இந்த இயக்கம் போனது அல்லது போய்க்கொண்டிருக்கிறது. எப்படி இது ஏற்பட்டது? காரணங்கள் என்ன? திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்புகள் இரண்டு : ஒன்று நாடகத்துறை , இன்னொன்று பத்திரிகைதுறை. திராவிட இயக்க நாடகங்கள் என்ற கட்டுரையில் வெளி. ரங்கராஜன் அவர்கள் சில கருத்துகளை முன்வைக்கிறார். அதை அப்படியே கொடுத்திருக்கிறேன். […]
சுப்ரபாரதிமணியன் கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக் கதையைப் படைத்திருக்கிறார். சரித்திரக் கதைகள் என்றால் கொங்கு வேம்பாக தூரம் போகும் நான் கொங்கு நாட்டு வாழ்க்கை எனும் விதத்தில் நாவல் குமாரகேசனை கவனமாய் படிக்க வேண்டியிருந்தது. நுணுக்கமான வாசிப்பைக் கோரும் நுணுக்கமான விவரிப்புகள் கொண்ட நாவல். கொங்கு பேச்சு மொழியிலேயே […]
அன்புடையீர், இவ்வருட மே தின விடுமுறை தினத்தில் “மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10ம் ஆண்டு கலை இலக்கிய விழா” நடைபெற உள்ளது. தங்களுக்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்புட்டுள்ளது அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் நாள் : 1-5-14 வியாழன் நேரம் : மாலை 6 மணி இடம்: சிரங்கூன் சாலை – சிரங்கூன் பிளாசா எதிரில் உள்ள திறந்த வெளி அரங்கம். இனிய விழாவுக்கு வாருங்கள்…உங்களை நட்புக்கும்,உறவுக்கும் விழாப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.. என்றும் அன்புடன் உங்கள் வீ . ராமசாமி., தலைவர் , மக்கள் கவிஞர் மன்றம் தொலைபேசி;94994328 MKM Vizha […]
ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (The Base of All Metaphysics) தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தோழர்களே ! கேளுங்கள் இப்போது: நினைவில் வைக்கவும் மனதில் பதியவும் வாசகம் ஒன்று சொல்வேன். தத்துவ அறிவுக் கெல்லாம் மூலம், முடிவும் போல மாணவ ருக்கும், முடித்த பாட வகுப்பு முதிய பேராசிரி யருக்கும். பூர்வ, புதிய கிரேக்க, ஜெர்மானிய ஏற்பாடுகளை […]
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) கடவுச்சீட்டு குடிநுழைவுஅனுமதி ஏதுமில்லாமல் விமானம் ஏறாமல் எங்களூர் ஏரிக்கு வந்திருக்கும் பன்னாட்டுக் கவிஞர்களே உங்களைப்பார்க்க ஒரு சோகம் விளைகிறது உங்களோடு ஒரு கவியரங்கம் நடத்தமுடியவில்லையே! வேதனை வருத்துகிறது உங்கள் பயணம் எவ்வளவுத் துயரம்! உங்கள் மனசில் எத்துணைப் பாரம்! செலவுக்கு ஏதுமில்லாமல் எவ்வளவுத்தூரம் செலவு செய்திருக்கிறீர்கள்! பகிர்ந்துகொள்ள பொது மெடையில்லையே! பொது மொழியில்லையே! துயரம் சுரக்கிறது! உங்கள் அமைதியின் அழகை அழகின் அமைதியை பார்க்கப் பார்க்க பருகப் பருக பரவசம் பிறக்கிறது ஐப்பசி கார்த்திகை […]
( முன்னுரை: இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க எனது நாட்குறிப்பிலிருந்து அப்படியே ஒரு வரிகூட மாற்றாமல் தரப்பட்டுள்ளது. இதை நான் எழுதியபோது எனக்கு வயது பதினைந்துதான்! ) அவள் எழுதியிருந்த அந்த ஆங்கில வாசகங்களைப் பற்றி அன்றிரவு பலவாறு எண்ணலானேன். முன்பே அவளுடன் கூடி இருந்த காலத்தைவிட பிரிந்து இருக்கும் இப்போது அவள் மீது இனம் தெரியாத அன்பும் ஆசையும் பிறக்கக் கண்டேன். இதுநாள்வரை நாங்கள் சாதாரண கடிதங்களைத்தான் பரிமாறிக் கொண்டிருந்தோம். இப்போது என் காதலை அவளுக்குத் […]
இவள் பாரதி திசைக்கொன்றாய் சுமத்தப்படும் என் மீதான பழிகளைத் துடைத்தெறியவும் துயரம் பீறிடவும் தளர்ந்த கால்களுடன் நடக்கும் என் இரவுகளின் மீது ஊர்ந்து வருகிறது சிறு குழந்தை குழந்தையின் மென்தொடுதலில் என் பழிகள் ஒவ்வொன்றாய் பலவீனமடைய விடியலில் பரிசுத்தமடைந்திருந்தேன் என்னருகில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது உதட்டோரம் இன்னும்காயாத துளிபாலுடன் ———— அலுவலகம் கிளம்பும்போதெல்லாம் அழுது அடம்பிடிக்கும் குழந்தை பீறிட்டழும்போது உள்ளபடியே கலங்கிப்போகுமென் மனம் வரும் வழியெங்கும் அழுதமுகமே நினைவிலிருக்க வேலையும் ஓடாது மீண்டும் கூட்டையடைந்து அறைக்கதவை திறந்து […]
வில்லவன் கோதை வர்த்தகநோக்கத்தோடு இந்த மண்ணில் ஊடுருவிய வெள்ளையர்களிடம் இந்த மண்ணையே ஆளுகின்ற பெரும்பொறுப்பை அவர்கள் காலடியில் சமர்ப்பித்தோம். அன்று நம்மிடையே நிலவிய ஒற்றுமையின்மை இந்த அறியவாய்ப்பை அவர்களுக்கு நல்கிற்று.. அவர்களுடைய வருகை இந்தமண்ணின் வளங்களையெல்லாம் சுரண்டிக்கொழுப்பதாய் இருந்தாலும் அவர்கள் தங்கள் சொகுசான வாழ்க்கைக்கேற்ப அவ்வப்போது இந்த மண்ணை வடிவமைப்பதிலும் கவனம் செலுத்தினார்கள் கல்விக்கூடங்கள் முதல் காப்பீடு நிறுவனங்கள் வரை அவர்கள் வசதிக்காகவே இந்த நாட்டில் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டன. அவர்கள் இந்த மண்ணைவிட்டு அகன்று ஆண்டுகள் அறுபதைக்கடந்தபோதும் […]
சத்யானந்தன் ஜனவரி 6 2005 இதழ்: மக்கள் தெய்வங்களின் கதைகள்-16 – அ.கா.பெருமாள்-ஆந்திரமுடையார் கதை படைப்பு சுனாமிப் பேரழிவும் அரசியலும் : அனுபவக் குறிப்புகள்-ஜெயமோகன்- ஜெயமோகன் பயணக் கட்டுரைகள் கூட எழுதுவார் – ஆனால் ஒரு ரிப்போர்ட்டராக ஒரு முக்கியமான சம்பவப் பின்னணியில் ஒரு கள விவரமான கட்டுரை எழுதுவது அபூர்வம். சுனாமி பற்றிய அவரது கட்டுரை இது. ஆர் எஸ் எஸ் மற்றும் தமுமுக இரண்டு இயக்கங்களின் தொண்டுப்பணிகள் ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப் பட்டன, கொச்சைப்படுத்தப் […]