தெலுங்கில் :பி.சத்யவதி தமிழாக்கம் :கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com வீட்டு வேலைகள் எல்லாம் எப்போதும்போல் இயந்திரகதியில், நேரத்திற்கு ஏற்ப, கணினியில் புரோக்ராம் செய்து வைத்தது போல் நடந்தேறிக் கொண்டிருந்தன ரொம்ப நாளாகவே. அதனால் யோசிப்பதற்கோ, புதிதாக எதையாவது செய்வதற்கோ சாரதாவுக்கு எதுவும் எஞ்சி இருக்காது. காலை எழுந்தது முதல் ஹார்மோனியம் வாசிப்பது போல் வரிசையாய் அந்தந்த கட்டையை அழுத்திக் கொண்டு போக வேண்டியதுதான். இன்று காலை அழுத்த வேண்டிய கடைசி கட்டை கணவனை, மகளை அவரவர்களின் பணிகளுக்கு அனுப்பி […]
வெடிக்க வெடிக்க வீழ்ந்தார்கள் வீழுந்து துடிப்பவர்களைத் தொட்டுத்தூக்க ஓடினார்கள் கேட்பாரற்றவர்களை காப்பாற்ற வருபவர்களென்று காத்திருந்து காத்திருந்து வெடிக்கிறது வெடிக்கிறது வெடித்ததே வெடிக்கிறது குருதியில் சதசதக்க சதை சகதியில் கொத்தணிக்குண்டு விதை விதைக்கயிலேயே அறுவடை உயிர் உயிராய் அறுவடைக்குப் பின்னும் அறுவடை அந்த கொத்துக்குண்டின் மிச்சம் தன் கூட்டத்தை இழந்த ஒரு குழ்ந்தையை கொன்றுப்போட்டிருகிறது இன்று. இருந்தவரை கொன்று இடம் பிடிக்க நாளை விதைத்தவனுக்கா அறுவடை? எவரும் வெடிக்க வெடிக்க விழ வேண்டம். போருக்கு பின் அமைதியில் சத்தமாய் […]
++++++++++++++++++++++++++++++ உன்னை யாருக்கு ஒப்பிடலாம் ? ++++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில […]
சித்திரை மாதம் ஆரம்பித்து விட்டாலே……அனைத்துக் கோவிலுக்கும் கொண்டாட்டம் தான்…அதுவும் தேர் திருவிழா வந்தால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு களை கட்டும்….எத்தனை சின்னக் கோயிலாக இருந்தாலும்…சித்திரைத் தேர் அந்த ஊரை ஒரே ஒரு தரம் வலம் வந்த பிறகு தகரக் கூடுக்குள் அடைந்து விட்டால் அந்த ஊரில் இருக்கும் அனைவருக்கும் பரம சந்தோஷம்…நிம்மதி…இனி அடுத்த வருஷம் தான்….அது வரும்போது வரட்டும் என்று அதுவரை அக்கடான்னு இருப்பார்கள்.பிறகு தேரைப் பற்றி யாரும் கவலைப் படுவதும் கிடையாது. பராமரிப்பதும் […]
பாரத நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தாகிலும் இணையத்தின் வழியாக NEFT மூலம் புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு: நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட தமிழ் நூல்களையும் இதழ்களையும், சில முக்கிய ஆங்கில நூல்கள், இதழ்கலையுங்கூடச் சேமித்து வைத்து, ஆய்வாளர்களுக்குப் பேருதவி புரிந்து வரும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் மேலும் சிறப்பாகப் பயன்படும் பொருட்டு இணையத்தின் வழியாகவே NFET மூலம் நிதி உதவி வழங்க விரும்புவோர் பின்வரும் விவரங்களைக் குறித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்: Account Holder: […]
அது ஒரு நீண்ட மினி ஹால் மாதிரியான அறை.. உள்ளே நுழைந்தவுடன் ஜிவ்வென்று கவ்வும் ஏ.ஸி.யின் குளிர்…அதையுந்தாண்டி மூக்கில் உறைக்கும் சேவ்லான் நெடி.வரிசையாய் கட்டில்களில் பல நிலைகளில் அபாய கட்டங்களில் நோயாளிகள். சிலர் ஆக்ஸிஜன் மாஸ்க் வைத்த பின்பும் மூச்சுத் திணறலுடன் கிடந்தார்கள்.அதில் சிலருக்கு கோமா மயக்க நிலை. சொல்லி வைத்தாற்போல அல்லது யூனிஃபார்ம் போல எல்லாருக்கும் தலையில் பெரிய கட்டு. இதுதான் சென்னை பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை.யின் ஐ.ஸி..யூ. இண்டென்சிவ் கேர் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா இந்த உலகில் நாம் பாதுகாக்கப் பட வேண்டிய மனித ஆத்மாக்கள் மிகையாக உள்ளன. அவரை உய்விக்கச் செய்யும் நமது பணிகள் ஒருபோதும் ஓயமாட்டா ! நமது ஆயுளுக்குப் பிறகு நமது சந்ததிகள் அப்பணியைத் தொடரும். பட்டினி உடம்பில் ஒட்டி இருக்கும் பலவீன ஆத்மாக்கள் பாதுகாக்கப் பட வேண்டிய தில்லை ! முதலில் அவரது பசிப் பிரச்சனை நிரந்தரமாய்த் தீர வேண்டும். […]
முன்பு ஒரு சமயம் அன்னப்பறவை, கொக்கு, குயில், மயில், சாதகப் பறவை, ஆந்தை, மாடப்புறா, புறா, நீலக்குயில், கழுகு, வானம்பாடி, நாரை, மைனா, மரங்கொத்திப் பறவை, இன்னும் பல பறவைகள் எல்லாம் ஒன்றுகூடி யோசனை செய்யத் தொடங்கின. ‘’நமக்குக் கருடன் தான் ராஜா. ஆனால் அவரோ மகாவிஷ்ணுவுக்குப் பணிவிடை செய்து வருகிறார். நம்மைக் கவனிப்ப தில்லை. ஆகவே அப்படிப்பட்ட போலி ராஜாவால் நமக்கு என்ன லாபம்? வலையில் சிக்கிவிடுவது போன்ற துக்கங்கள் நமக்கு ஏற்படும்போது அது நம்மைக் […]
கார்த்திக் பைன் ஆர்ட்சின் கோடை நாடகவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (22.4.2011) அன்று அரங்கேறிய நாடகம் “ அச்சு அசல்.” முதலில் ஒரு விசயத்திற்கு அகஸ்டோவைப் பாராட்டியாக வேண்டும். தொழில் ரீதியாக மூக்குக் கண்ணாடிக் கடை வைத்திருப்பவர் அவர். ஆனால் இலக்கிய ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள, அவர் எடுத்துக் கொள்ளும் அக்கறை, அலாதியானது. நாடகம் கொஞ்சம் சமூக நீதிக் கதை கொண்டதுதான். அதைத் தன் பாணியில் ஒரு திரில்லராகப் படைக்கும் வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அகஸ்டோ. வெற்றி […]
( ஆண்கள் படிக்க வேண்டிய கதை.) மாதவ் ராவ், சென்னைவாசியாக இருந்தாலும், தஞ்சாவூர் ஞாகபமாகவே இருப்பார். அவர், சக்கா நாய்க்கன் தெருவில் சுற்றியதும், திரு.வி.க. பள்ளியில் படித்ததையும், நீடா மங்கலத்தில், பெண் பார்த்து, ஜமுனா பாயை கட்டியதையும், பெண் வீட்டில், மாமியார் செய்து போட்ட* கோளா குழம்பைப் பற்றியும்தான் அவர் வேலை செய்யும் இடத்தில் பேசிக் கொண்டே யிருப்பார். அவரின் மகன், சுப்புராவ், பீஇ படித்துவிட்டு, தற்போது, ஒரு சாப்ட்வேர் வேலையாக இருப்பதிலும் அவருக்கு பெருமை. […]