மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24

This entry is part 30 of 40 in the series 6 மே 2012

26 – எனது புத்திரனை கணத்தில் பார்க்கவேணும். – நேரம் காலம் கூடிவரவேணாமா? அந்தரப்பட்டாலெப்படி? அரசாங்க மனுஷர்களிடத்தில் அனுசரணையாக நடந்துகொள்ள தெரியவேணும். உனக்கிங்கே என்ன குறை வைத்திருக்கிறோம்? நீ கேட்டதுபோல எல்லாம் நடக்கிறது. கமலக்கண்ணியென்று நம்பி உனது விண்ணப்பங்களை தங்குதடையின்றி பூர்த்திசெய்யவேணுமாய் மஹாராயர் ஆக்கினைபண்ணியிருக்கிறார். அதைக் கெடுத்துக்கொள்ளாதே. நாளையே உன்னை சிரசாக்கினைசெய்யவோ மரணக்கிணற்றில் தள்ளிப்போடவோ¡ எமக்கு எத்தனை நாழிகை ஆகும்?. கண்விழித்தபோது பகலுக்கு முதுமை தட்டியிருந்தது வெகுதூரத்தில் யாரோ இருவர் உரையாடுவதைபோலக் கேட்ட குரல்கள் இப்போது அண்மையில் […]

சாயப்பட்டறை

This entry is part 29 of 40 in the series 6 மே 2012

தெற்குச் சீமையின் வற்றிப் போன மாரை சப்பிச் சுவைத்து கடித்து சுரக்கும் எச்சிலில் பசியைத் தணித்துக் கொண்ட வரலாற்றை முதுகில் சுமந்து கொண்டு அகதியாய் புலம் பெயர்ந்த நகரமிது. கால்கடுக்க நின்று பட்டன் தைக்கும் பணியாளாக-நிறைமாத கர்ப்பிணி மனைவியை அனுப்பி வைத்தும் வயதிற்கு வந்தத் தங்கையைக் கம்பெனி வேனில் ஏற்றி விட்டு போனவள் போனவளாகத் திரும்ப வேண்டுமெனும் வயிற்று நெருப்பை அணைக்க வழியில்லாதும் சாவை பார்த்துக் கிடக்கும் சீக்காளி அம்மாவிற்கு மருந்து வாங்கக் காசில்லாதும் வாழ வந்த […]

இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது

This entry is part 28 of 40 in the series 6 மே 2012

(1) இது இறந்தவர்கள் பற்றிய க(வி)தை . அதனால் மர்மங்கள் இருக்கும். இறந்தவர்கள் மர்மமானவர்கள் அல்ல. இருப்பவர்களுக்கு சாவு பயமானதால் இறந்தவர்கள் மர்மமானவர்கள் இருப்பவர்களுக்கு இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இருப்பவர்களின் சாவை இறந்தவர்கள் நினைவுபடுத்துகிறார்கள். (2) இரண்டாம் எண் அலுவலக அறையில் இருந்தவர் ’ரெக்டம்’ கான்சரில் செத்துப் போனார். இரண்டாம் எண் அறைக்குப் புதிதாய் வந்தவரும் இரண்டே மாதங்களில் ’லங்’ கான்சரென்று செத்துப் போனார். முதல் அறையில் இருந்தவர் சுகமில்லையென்று மாற்றலாகிப் போய் விட்டார். […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்

This entry is part 27 of 40 in the series 6 மே 2012

1927 மார்ச் 13 அக்ஷய மாசி 29 ஞாயிற்றுக்கிழமை சட்டென்று பக்கத்து முடுக்குச் சந்துக்கு நேராக மட்ட மல்லாக்காகத் திறந்து வச்சிருந்த மரக் கதவு கண்ணில் பட்டது. அதுக்கு அண்டக் கொடுத்துத்தான் என் மூட்டை முடிச்செல்லாம் வச்சது. அந்தத் திட்டி வாசல் வழியாக தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம் என்று ஒரே ஓட்டமாக ஓடின போது காலில் இடறிய மூட்டைகளைக் கையில் தூக்கிக் கொண்டேன். ஆயுசு முழுக்க சம்பாதிச்சதும், விற்று வரச் சொல்லி துரை கொடுத்ததும், உடுதுணியும் […]

மகன்

This entry is part 25 of 40 in the series 6 மே 2012

மகனின் வாழ்க்கையில் மறக்க முடியாச் சம்பவங்கள் 3 சம்பவம் 1 முப்பது நாட்களுக்குள் முப்பத்தையாயிரம் வெள்ளி வீடு வாங்கக் கெடு வீவக விதித்தது நெருங்கியது நாள் உலையானது தலையணை இடியானது இதயத் துடிப்பு மகன் வென்றானா? அன்றி வீழ்ந்தானா? சம்பவம் 2 இருதயத் துவாரங்களில் துருவாக அடைப்பாம் சட்டைப் பை தூரத்தில் மரணமாம் அன்றே தேவை அறுவை சிகிச்சை மகன் வென்றானா? அன்றி வீழ்ந்தானா? சம்பவம் 3 மகனின் மகளுக்குத் திருமணம் இரண்டு வாரங்களுக்குள் இருபதாயிரம் தேவை […]

கால இயந்திரம்

This entry is part 24 of 40 in the series 6 மே 2012

“கி.பி.2012 .05.01” – நேரம் நான்கு மணி – அழகான பொன்வெயில் நேரம் – புறப்படுகிறாள் அவள் கால இயந்திரத்தில் ஏறி… “கி.பி.1512.05.01” காலையில் வந்து சேர்கிறாள் திரும்பி…!! வீடதன் பக்கம் செல்கிறாள்… வீடெங்கே தேடுகிறாள்… தாய்தந்தை எங்கேயெங்கே… ஆளரவம் எதுவுமில்லை… ஆலமரம் மட்டும் சின்னதாய் சிரித்துக் கொண்டு…! அயல் வீடுகளும் காணவில்லை… பக்கத்து தெருவையும் காணவில்லை… அவள் வளர்த்த கிளிகளையும் காணவில்லை கூண்டுடனே…! அவள் வீட்டு முற்றத்திலே நாட்டி வைத்த ரோஜா எங்கே ஆவலுடன் தேடுகிறாள் […]

விதை நெல்

This entry is part 23 of 40 in the series 6 மே 2012

பூமிபாலகன் திண்ணையில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு, முறத்திலிருந்த கம்பில் கல் பார்த்துக் கொண்டிருந்தாள் கிழவி. சந்தைக்குப் போய்விட்டு வந்த தன் மகனை ஏறிட்டுப் பார்த்தாள். பையைத் திண்ணையில் வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்று கை, கால்களை அலம்பிக்கொண்டு உட்கார்ந்தான் மகன். அவன் மனைவி சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அதை வாங்கிக் குடித்தான். “ ஏண்டா முத்து, வித்துட்டியா? “ என்றாள் கிழவி. “ ஆமாம்மா.” வைகாசி மாசம் முழுக்க […]

பாரதிதாசனின் குடும்பவிளக்கு

This entry is part 22 of 40 in the series 6 மே 2012

கவிஞர் கனகசுப்புரத்தினம் என்கிற பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார். அதில் எனக்கு எவ்விதமான கருத்து வேறுபாடும் இல்லைதான். பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவரல் முயற்கொம்பே (சஞ்.ப.சா. தொ.1) மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே! (பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி) என்றெல்லாம் பெண் விடுதலையைப் பேசியவர்தான் பாரதிதாசன். ஆனால் அது என்னவொ தெரியவில்லை, . பாரதிதாசனின் குடும்பவிளக்கு கவிதை வரிகளை வாசித்தப் பின் முதல் முதலாக எனக்கு ஏற்பட்ட […]

ஈரக் கனாக்கள்

This entry is part 21 of 40 in the series 6 மே 2012

ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும் நீர்ப்பாம்புகளசையும் தூறல் மழையிரவில் நிலவு ஒரு பாடலைத் தேடும் வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில் மூங்கில்கள் இசையமைக்கும் அப் பாடலின் வரிகளை முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும் ஆல விருட்சத்தின் பரந்த கிளைக் கூடுகளுக்குள் எந்தப் பட்சிகளின் உறக்கமோ கூரையின் விரிசல்கள் வழியே ஒழுகி வழிகின்றன கனாக்கள் நீர்ப்பாம்புகள் வௌவால்கள் இன்னபிறவற்றை வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள் தூறல் மழையாகிச் சிதறுகின்றன ஆவியாகி பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில் வெளியெங்கும் – எம்.ரிஷான் ஷெரீப்