This entry is part 37 of 37 in the series 27 நவம்பர் 2011
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வீட்டை இடிப்பதற்குக் கூலி விலை மதிப்பற்ற புதையல் தான் ! கோடரியும் மண் வெட்டியும் வேலை செய்யும் ! பொறுத் திருந்து நிகழ்வதைப் பார்த்தால் பதறிப் போவாய் நினைத்தது போல் இங்கு நிகழ வில்லை என வருத்தம் அடைவாய் ! வாடகை வீடிது உனக்குச் சொந்தப் பத்திர மில்லை ! ஒத்திக்கு எடுத்த இல்லத்தில் ஒட்டிய ஒரு கடை ! கிழிந்த ஆடையில் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நேற்று என் செயலுக்கு வருந்தினேன்; இன்று தவறை உணர்ந்து என் வில்லை முறித்து நடுக்கத்தை ஒழித்த போது நான் என்மீது ஏற்றிக் கொண்ட தீங்குகளைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டேன்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ அறிவும். பகுத்தாய்வு நெறியும் உன்னோடு உன் பகுத்தாய்வு வழி முறை உரையாடும் போது என்ன சொல்லுது உன்னிடம் என்று கூர்ந்து கேட்பாய் ! அப்போது நீ […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் பழைய நினைவுகளின் அலைப்புரட்டலோடு நான் அல்ராய் கியருக்காகக் காத்திருக்கிறேன். பிற்பாடு அந்த எட்வர்ட் திரிஃபீல்ட் தொட்ட சிகரம் என்ன, அப்போது அந்தக் காலத்தில் பெற்ற சிறுமை என்ன… என நினைக்கப் புன்னகை வந்தது. ஒருவேளை என்னைச் சுற்றியிருக்கிற மக்களும், நானுமே கூட அவரது அருமையைப் போற்றத் தெரியாதவர்களாக எளிய நிலையில் இருந்தோமோ என்னவோ. அப்போது நானே பள்ளிப்பருவத்து சிறுவன்தானே, எனக்கும் என்ன தெரியும்? காலப்போக்கில் அவரது எழுத்துக்கள் அபாரமாய் உய்த்துணரப்பட்டு பெரும் கிரீடத்தை […]
ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 – ம் திகதி (11 – 12 – 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் (50இ Pடயஉந னந வுழசஉலஇ 75018 Pயசளை – ஆéவசழ: ஆயசஒ னுழசஅழல) நடைபெறவுள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் […]
தனது பணி ஓய்வை இந்த ஊருக்கும் உலகத்திற்கும் யார் டமாரம் போட்டுச் சொன்னார்கள் என்று சபேசனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. எப்படி இது எல்லாருக்கும் தெரிந்தது? அப்படி அப்படியே பேச்சோடு பேச்சாகப் பரவி விடுமோ? யாரேனும் ஒருவர் சொல்ல, அவர் இன்னொருத்தருக்குச் சொல்ல…அவர் வேறொருவருக்கு என்று பரவியிருக்குமோ? ஒரு மனிதன் ஓய்வு பெறுவதில்தான் இந்த மக்களுக்கு எத்தனை மகிழ்ச்சி? நானே தேவையில்லாமல் மற்றவர்களிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றி அடக்கி வாசிக்கிறேன். ஆனாலும் ஏனோ அது வெளிவந்து […]
யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. எதைச் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். சொல்லப்படும் விஷயம் மட்டுமே கவனிக்கப்படவேண்டும். சொல்லுகிற நபரல்ல. நல்லது எங்கிருந்து வந்தாலும், எவரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். நியாயம் நியாயம்தானே? யார் சொன்னால் என்ன? எவர் வாயிலிருந்து வந்தால் என்ன? அவன் உயர்ந்தவன், தாழ்ந்தவன், மேல், கீழ் என்ற பிரிவினைப் பார்வையெல்லாம் எதற்கு? இப்படியே ஒவ்வொன்றையும் இடக்கு மடக்காகப் பார்த்துப் பார்த்துத்தானே எல்லாமும் கெட்டுச் சீரழிந்து பாழாய்ப் போய்க் கிடக்கிறது? எல்லோரும் ஓரினம், […]
எனக்கு தமிழ் நாவல்களே அதிக அறிமுகம். அதற்காக சோமர்செட் மாமையும் அயன் ராண்டையும் படிப்பவனல்ல நான். இன்·பாக்ட் அயன்ராண்டை என்னால் நூறு பக்கங்கள் கூட தள்ள முடியவில்லை. நமக்கு ஏற்றதெல்லாம் லை ·பிக்ஷன். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், அலிஸ்டர் மெக்லீன், சிட்னி ஷெல்டன், ஜெ·ப்ரீ ஆர்ச்சர் இப்படி. ஏதோ ஒரு கொல்கத்தா புத்தகச்சந்தையில் எனக்குப் பிடித்த ஜெ·ப்ரீ ஆர்ச்சரின் ‘ஒன்லி டைம் வில் டெல் ‘ முதல் பாகத்தை வாங்கி வந்தாள் என் மகள். கூடவே அவள் […]
ஒரு இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் திருப்பூர் கிருஷ்ணன் தான் சொன்னார். ‘ வல்லிக்கண்ணனை ஒல்லிக்கண்ணன் என்றே சொல்லலாம்.. அவ்வளவு மெலிசாக இருப்பார். ‘ பல கூட்டங்களில் வல்லிக்கண்ணனைப் பற்றித் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. மணிக்கொடி காலத்து எழுத்தாளர், சிற்றிதழ்களின் பேராதரவாளர் என்றெல்லாம். ராயப்பேட்டை பகுதியில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இலக்கிய ஆர்வலர், எனது மேலதிகாரி என்னிடம் சொன்னார்.. ‘ வல்லிக்கண்ணன் இங்கேதான் இருக்கார்.. லாயிட்ஸ் சாலை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எண் […]