சுப்ரபாரதி மணியனின் வேட்டை சாய நகரத்தில் மனிதர்கள் வேட்டையாடப்படுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் இவரது கதைகளில் திருப்பூர் சம்பந்தப்பட்ட பின்னலாடைத் தொழிலும் தொழிலாளிகளும் அவர்களின் வாழ்வியல் அவலமும் சுட்டப்படும். இந்த நூலிலும் அப்படித்தான். ஊர் விட்டு ஓடிவந்து சினிமாவுக்கு நடிக்கப் போகும் பெண்கள் பற்றிப் படித்திருக்கிறோம். இதில் வேலைக்காக ஊரைவிட்டு வந்த பஞ்சவர்ணம் தன் முன்னிற்கும் மூன்று விதமுடிவுகளில் எதற்கு இரையாகப் போகிறாள் என்ற பதட்டத்தை உண்டாக்குகிறது வேட்டை. மலையாளிகள் பற்றி எனக்கும் […]
இந்த நெய்வேலி ரமணி கிருஷ்ணனை புரசைவாக்கம் சாலை குமுதம் பத்திரிகை அலுவல வாயிலில் வைத்து பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவனை நான் கடைசியாய்ப்பார்த்தது அவன் சென்னைக்கு மாற்றலாகிச்சென்ற அந்த சமயம்தான்.நானும் அவனும் திருமுதுகுன்றத்தில் அந்தக்காலத்தில் ( மொபைல் வராக்காலம்) தொலைபேசி இயக்குனர்களாக ‘நம்பர் ப்ளீஸ்’ சொல்லி கருப்பு மொத்தை டெலிபோனில் டிங்க் டிங்க் மணி அடிக்க, கைப்பிடி ஒன்று சுழற்றி சுழற்றி வேலை பார்த்தவர்கள். ஆப்ரேடரை இயக்குனர் என்று யார் முதன் முதலில் மொழி பெயர்த்துச்சொன்னார்களோ […]
தயரதன் மதலையாய் மண்ணுலகில் வந்து தோன்றிய இராமன் தந்தையின் ஆணை என்று தாய் சொன்ன வார்த்தை கேட்டு தரணி தன்னைத் தீவினை என்று நீக்கி வனம் புகுந்தான். அங்கே மாயமானைப் போகச் செய்து இலங்கை வேந்தன் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். மாயமானை வதம் செய்து விட்டு வந்த இராமன் இலக்குவனுடன் சேர்ந்து பிராட்டியைத் தேடும் போது வழியில் ஜடாயுவின் மூலம் நடந்தவை அறிந்தான் அனுமனின் வழியாய் சுக்ரீவனின் நட்பைப் பெற்று வாலியை வதம் செய்து […]
ரஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத் தோன்றியது. தனது ஒவ்வொரு பதில் கண்டும் ஊடகவியலாளர் தொடர் கேள்வி கேட்கத் தயங்குவதிலிருந்து அது புரிந்தது. ஒன்றிலிருந்து ஒன்று பிறப்பதாகத்தான் பேட்டி அமைய வேண்டும். அதுதான் உண்மையான பேட்டிக்கு அழகு. அம்மாதிரியான கேள்விகளைக் கேட்பதும், அதற்கான தகுதியோடிருப்பதும் பேட்டியாளரின் சாமர்த்தியம். அதற்கு […]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குழந்தைகளின் அழுகுரல் கேட்கிறதா ? என்னரும் சகோ தரரே ! வயதாகும் முன் துயர் மேவிடும் ! தம்தம் அன்னையர் மீதவர் பிஞ்சுத் தலைகள் சாய்ந்துள ! சிறுவரின் கண்ணீர்ப் பொழிவுகள், ஆயினும் நிறுத்தம் ஆக வில்லை ! குட்டி ஆடுகள் கதறு கின்றன பசும்புல் வெளிகளில்; பறவைக் குஞ்சுகள் கிறீச்சொலி எழுப்பும் மரக் கூடுகளில்; இளமான்கள் விளையாடும் தம்தம் நிழல்க […]
இடம்: ரங்கையர் வீடு நேரம்: காலை மணி எட்டு. உறுப்பினர்: (ஜமுனா, ரங்கையர், கிலாஃபத் கிருஷ்ணய்யா) (சூழ்நிலை: ரங்கையர் வீட்டினுள் அமர்ந்து கணீரென்ற குரலில் ஒரு ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கிறார். வெளியே அமர்ந்து ஜமுனா பூக்கட்டிக் கொண்டிருக்கிறாள்) ரங்கையர்: வேதாந்த கீதம் புருஷம் பஜேஹம் ஆத்மானம் ஆனந்த கனம் ஹ்ருதிஸ்தம் கஜானனம் யம்-மகசா ஜனனாம் மாகந்தகாரோ விலயம் பிரயாதி (ஸ்லோகம் சொல்வதைச் சற்று நிறுத்துகிறார்) ஜமுனா: என்னப்பா? ரங்கையர்: இது எதிலே வர்றது சொல்லு பார்ப்பம்! ஜமுனா: […]
” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது டெக்னாலஜி மூளையும் வேணும் “ கண்களை இடுக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி பிரேமை மூக்கிலிருந்து தற்காத்துக் கொண்டார் மணியன். .தனலட்சுமி பூச்சி பூச்சியாய் நெளியும் கணினி எழுத்துக்களைப் பார்த்து நகர்ந்து விட்டாள்..அவளுக்கும் மூக்குக்கண்ணாடிதான் தெளிவு தரும். “ அதிகாரம் இருந்துச்சு திருடின்னீங்க.. இதிலே முடியுமா.. “ “ என்ன பெரிய அதிகாரம் போ… இப்போ இங்க […]
தமிழாய்வுத் துறைத்தலைவர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்கோட்டை-1 மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியல் என்னும் அக இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களையும் மொழியின் சொல்லையும் சொற்றொடர்களையும் வழங்கி வந்த முறைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவு, தெளிவு ஆகியவை வழுவாதவாறு அமைத்துக் காக்கின்ற இலக்கணமாகத் தொல்காப்பியம் ஆக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற இயல்கள் முதலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையடுத்துக் […]
அன்புடையீர்! வணக்கம். ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் தியேட்டர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள் அசோகமித்திரன், பி.ஏ.கிருஷ்னன், பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஓவியர் ஷண்முகவேல் மற்றும் திரைத் துறைச் சாதனையாளர்கள் கமல்ஹாசன், இளையராஜா ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் […]