திருச்சி வாசகர் அரங்கின் முதல் கூட்டம் தொடங்கி இன்று வரை தொடரும் நட்பின் இழை. சாம் மறைவு மனதைக் கடக்க வைக்கிறது. வாழ்வைக் கொண்டாட்டமாய் எடுத்துக் கொண்டு உரையாடுவத அவருக்குக் கைவந்த கலை. திருச்சி வாசகர் அரங்கு, திருச்சி நாடகச் சங்கம் என்று அவர் இணைந்திராத கலாசார நிகழ்வு திருச்சியில் இல்லை. அவர் சென்ற இடமெல்லாம் இலக்கியம், நாடகம், சினிமா என்று பிறரை ஈடுபடுத்தி இயக்குவதில் அவருக்கு நிகர் அவரே. அதன் காரணமாக அவர் பெற்ற […]
தமிழ் மாநிலத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எத்தனை முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதன் சாதனை என்ன என்று கணக்குப்போட்டுப்பார்த்து இருக்கிறோமா ? நமது. அரசுத்துறை தமிழ் வளர்ச்சியில் சாதித்தது என்ன என்று கணக்குக்கொடுக்கமுடியுமா ? அரசு நூலத்துறைக்கு புது ப்புத்தகங்கள் வாங்குவதை ஆராய்ந்து பார்த்தது உண்டா என்ன ? சம்பந்தப்பட்டவர்கள் தம் மனசாட்சியைத் தொட்டு நூலகத்திற்குப்புத்தகங்கள் வாங்குவதில் எத்தனை நேர்மையாக அவர்கள் நடந்துகொண்டார்கள் என்பதை வெளியில் சொல்ல வாய்க்குமா ? அப்படி இப்படி சில நூல்கள் அரசு நூலகத்துக்குத் […]
மதுராந்தகன் 1. கரவொலி பெறுவதற்காகவே கத்திப் பேசினார் பேச்சாளர். எனக்குள் இருக்கும் சொற்களை வார்த்தையாகினால் உறவுகள் கூட மதிக்காது தலைவலி என்று மருத்துவமனை சென்று நீண்ட பரிசோதனைக்குப் பின் இது மூளை வளர்ச்சி உடனடியாக ஆபரேஷன் பண்ணுங்கள் இல்லையென்றால் மிகவும் துன்பப்படுவாய் என்றார் மருத்துவர். நீ எல்லாம் மனுஷனா என்றாள் மனைவி. “ ஏண்டி உனக்கு இந்தச் சந்தேகம் “ பக்கத்து வீட்டுக்காரன் செய்யற வேலையிலெ பாதியாவது நீ செய்யறையா என்றாள் மனைவி . 2. ஆளுங்கட்சியை எதிர்க்கட்சி விமர்சித்து மக்கள் […]
(ஜீவா முழக்கம் இதழின் சுதந்திரப் பொன் விழா மலரில் – 1997 இல் – வெளிவந்த சிறுகதை. ‘வாழ்வே தவமாக’ எனும் தலைப்பில் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.) சென்னைப் பட்டினம் மாரப்பனுக்கு அறவே அந்நியம். மல்லணம்பட்டிக்கு அப்பால் அவன் கால் பதித்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், மிகச் சில கல் தொலைவில் உள்ள வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு ஆகிய ஊர்களுக்குப் போயிருந்தான். அவனுடைய தம்பி பெண் எடுத்திருந்த திண்டுக்கல்லுக்குப் […]
குணா பெற்ற மகன், ஐ.ஐ.டி யில் படித்து அமெரிக்கா சென்று மேல் படிப்பு முடித்து முனைவர் பட்டமும் பெற்று, பிறந்த மண்ணில் வேலை செய்ய வந்த போது, பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி. பையன் கூடவே இருப்பானென்று. ஊர்ப் பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்து, மணம் முடித்து, பேரப் பிள்ளைகள் பார்த்து பங்களூருவில் சந்தோஷமாயிருந்தனர். வந்த மகனுக்கு அதிர்ச்சி. சொல்லிக் கேட்டதுண்டு, இங்கு அயல் நாட்டு படிப்பிற்கு மதிப்பில்லை, அதிகம் படித்தவனுக்கு மதிப்பில்லை என்று. அதை பொருட்படுத்தாமல் வந்தவன் கொஞ்சம் […]
எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனம் செய்ததால் இத்தலம் திருவாலி ஆயிற்று. திவ்யதேசக் கணக்கில் ஒன்றாக இருந்தாலும் இது இரு தனி ஊர்களாகவே உள்ளது. திரு வாலியில் நரசிம்மர் சந்நிதியும் அதற்கு 3 கி.மீ தொலைவில் திரு நகரியில் வயலாளி மணவாளன், திருமங்கை ஆழ்வார் சன்னிதி களும் உள்ளன. திருநகரிக்கு ஒருகி.மீ தூரத்தில் உள்ள ஒரு மைதானத்தில் பங்குனி உத்திரத்தன்று திருமங்கை ஆழ்வார் எம் பெருமானை வழிமறித்த வேடுபறி உற்சவம் நடைபெறுகிறது. இயற்கைவளம். அணியாலியில் அசோகமரத்தின் […]
அழகர்சாமி சக்திவேல் கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம்சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்,மலை கெழு நாட மா வண் பாரி,கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,ஒருங்கு வரல் விடாஅது ‘ஒழிக’ எனக் கூறி,இனையை ஆதலின் நினக்கு மற்று யான்மேயினேன் அன்மையானே, ஆயினும்,இம்மை போலக் காட்டி, உம்மை இடை இல் காட்சி நின்னோடுஉடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே. (புறநானூறு 236) லண்டனில் […]
தண்ணார் மதியக் கவிகைச்செழியன் தனிமந்திரிகாள்! முனிபுங்கவர் ஓர் எண்ணாயிர வர்க்கும் விடாத வெதுப்பு இவனால்விடும் என்பது இழிதகவே. [191] [தண்ணார்மதியம்=குளிர்ச்சியான முழுநிலவு; கவிகை=குடை; விடாத=விலகாத; வெதுப்பு=சூடு; விடும்=நீங்கிவிடும்; இழிதகவு=அறியாமை] ”முழுநிலவின் குளிர்ச்சி போல வெண்கொற்றக் குடை கொண்ட, பாண்டிய மன்னனின் பெருமை உடைய அமைச்சர்களே! சமண முனிவர்கள் எட்டாயிரம் பேர்க்கும் விலகாத இந்த வெப்பநோய் இந்தச் சிறுவனாகிய சம்பந்தனால் நீங்கிவிடும் என்பது அறியாமையே ஆகும்.” ===================================================================================== என்றார்;அவர் என்றலுமே […]
எனக்கு ஏழு வயதாகும் போதே அப்பா என்னை மலேயாவுக்கு கூட்டி வந்துவிட்டார். கோலாலம்பூரில் பெடாலிங் ஜெயாவுக்குப் பக்கத்தில் ஒரு கம்போங்கில் அப்பாவின் உணவுக்கடை. பெரிய இடம். பெரிய கழிவறை. கழிவறைக்கும் கடைக்கும் இடையே நீள அகலமான சிமெண்டுப் பெஞ்சுகள். அந்தப் பெஞ்சில்தான் அப்பா மதியம் இரண்டு மணி நேரம் தூங்குவார். அவைகள் நாலைந்து கடைகளின் உபயோகத்துக்காக இருந்த போதும் எங்களின் சொந்த உபயோகத்துக்கே அவைகள் பயன்பட்டன. சொற்பமான வாடகை. கம்போங்கில் உள்ள சில மலாய்ப் பெண்கள் எங்கள் […]
த. நரேஸ் நியூட்டன் தமிழ் இலக்கிய படைப்பாளினி பத்மா சோமகாந்தன் அறிமுகம் “கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” எனும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கொப்ப தமிழ் இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளர்களாக வலம் வந்து பல படைப்புக்களை தமிழ் வளர்ச்சிக்காய் தந்த பல எழுத்தாளர்கள் பற்றி யாம் அறிவோம். இவர்களுட் பலர் இவ்வுலகை நீத்தோராகிவிட்ட அதேவேளை இன்னும் பலர் வாழும் எழுத்தாளர்களாக பல்வேறு விடயங்களை படைத்து தமிழுலகிற்கு ஈந்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு படைப்புலகில் இலுக்கும் […]