தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

  கர்நாடக சங்கீத உலகில், பக்தி உணர்வும் செல்வாக்கும் நிறைந்தோர் உலகில் வேறு யாரும் செய்யாத, செய்யத் தோன்றாத ஒரு மகத்தான சேவையை, தியாகராஜ தாசி என்று தன்னைச் சொல்லிக்கொண்ட, எந்தக் கோவிலுக்கும் பொட்டுக் கட்டாதே தேவதாசியாகிவிட்ட நாகரத்தினம்மாளுக்கு அவர் தியாக ராஜருக்கு கோவில் எழுப்பிய பிறகு பாராட்டுக்கள் குவிந்தன தான். அதற்கெல்லாம் சிகரமாக, எனக்குத் தோன்றுவது, கீர்த்தனாச்சார்யார் சி.ஆர். சீனுவாச அய்யங்கார் எழுதிய கடிதம். தங்களது சூழலையும், தாங்கள் கற்பிக்கப்பட்ட ஆசாரங்கள், நியமங்களையெல்லாம் மீறி, எழச் […]

தொடுவானம் -37. அப்பா ஏக்கம்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

            கிராமத்தில் வானொலி இல்லாத காலம் அது. அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் ஒரேயொரு கிராமபோன் இருந்தது. எங்கள் வீ ட்டின் பின்புறம் உள்ள சாலை எதிரில் ஒரு செட்டியார் மளிகைக் கடை வைத்திருந்தார்.  அவரிடம் கிராமபோன் இருந்தது. அதிகாலையிலேயே அதிலிருந்து உரக்க பாடல்கள் ஒலிக்கும்.           அதில் அடிக்கடி அவர் திரும்பத் திரும்ப போடும் பாடல் ஒன்று எனக்கு இன்னும் மனதில் உள்ளது. […]

அவனும் அவளும் இடைவெளிகளும்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

கிடத்தப்பட்டிருந்த கணவனின் உடலுக்கு அருகே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள். பத்து பதினைந்து பேர் கூடினாலே நிறைந்து விடும் முன்கூடத்தின் மையத்தில் அவனது உடல் கிடத்தப்பட்டிருந்தது. முன்புறம் ஒரு வராந்தா.. இரண்டு படுக்கையறை.. ஒரு சமையலறை என்ற அளவிலான கச்சிதமான வீட்டின் ஒவ்வோர் இடமும் தூய்மையால் நிறைந்திருந்தது. சிறிய அளவிலான தோட்டம் பராமரிப்புகளால் நிரம்பியிருந்தது. முன் வராந்தாவில் செருப்புக்கென ஒதுக்கியிருந்த சின்ன ரேக்கில் ஒரேயொரு ஜோடி பெண்களுக்கான செருப்பு மட்டுமே இருந்தது. கூடியிருந்த கூட்டத்தின் செருப்புகள் சிதறல்களாக […]

தலைதூக்கும் தமிழ்ச்செல்வி

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

  ‘கோரிக்கை யற்றுக் கிடக்கு திங்கே வேரிற் பழுத்த பலா,’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கைம்பெண்களைப் பற்றி எழுதியது ஓரளவு தமிழ்ச்செல்வி போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும். கன்னிகளாகவும், கணவன் இருந்தும் கூட வாழ விருப்பம் இல்லாத கைம்பெண்ணாகவும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், வாழ முடியாமலும் தவிப்புடன் வசித்து வருகிறார்.  தமிழக அரசு அவருக்குச் சில உதவிகள் செய்து வந்தாலும், பலருக்கு அவை கிட்டாமல் போய் ஏமாற்றம் அடைவதை நான் காதில் கேட்டு […]

ஆசை துறந்த செயல் ஒன்று

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

“ ஸ்ரீ: “     ஆஸ்பத்திரி வாசலில் பிள்ளையார் அனிச்சையாய் நின்றன அவனின் கால்கள் என்ன வேண்டிக் கொள்வது…. குழந்தைகள் படிப்பில் சிறந்திடவும் மனைவியின் பதவி உயர்வுக்கும் தன்னுடைய பதவி இறங்காமலிருக்கவும் பாதி கட்டிய வீடு பங்களாவாகவும் பேங்க் லோன் முழுவதும் திருப்பி அடைக்கவும் வேண்டிய அளவு வேண்டிக்கொண்டாயிற்று; நிறைவேறக் கொஞ்சம் நேரம் பிடித்தாலும் வேண்டுவது கொஞ்சமும் குறைந்த பாடில்லை. இன்றைய வேண்டுதல் ஒன்று இருக்கிறது – என்னவென்று வேண்டிக் கொள்ள என்பதுதான் புரியவில்லை; ஆஸ்பத்திரியில் […]

மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். இரண்டு பரிசுகள் பெற்றதோடு சென்னை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்ட எனது விடுதலைப்போராட்டப் பின்னணி நாவலின் ஆங்கில ஆக்கம் – சில சேர்க்கைகளுடன் – என்னால் படைக்கப்பட்டு விரைவில் வெளிவர உள்ளது என்பதைத் திண்ணை வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். வழக்கம் போல் இச்செய்தியை வெளியிட வேண்டுகிறேன். நன்றி. அல்லாஹாபாத்தில் உள்ள Cyberwit.net  பதிகப்பகம் இதனை வெளியிடப் போகிறது. இதன் தலைப்பு GOODBYE TO VOILENCE  என்பதாகும்.   அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா

2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DraGujBk2Ns http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ehczW4KxWeU http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GAq6ecjeGZA http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=apv5p-bpBH0 http://www.noaa.gov/features/03_protecting/tsunami5.html சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா     முடுக்கி விட்ட பம்பரக் கோளம்! கடற்தளம் உடுக்க டித்துப் போடுமே தாளம்! சுனாமி அடுத்த டுத்துச் சீறிடும் நாகம்! உயிர்களை எடுத்துச் செல்லும் மீறிடும் வேகம்!   பொறிநுணுக்கத்தில் முன்னேறிய இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், இயற்கை அன்னையின் மிகக் கொடிய சுனாமி இன்னலின் பாதிப்புக்கு நாம் உட்பட்டுள்ளோம் .   2015 இல் அமைக்கப் […]

உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

  தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம். தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு […]

அண்ணன் வாங்கிய வீடு

This entry is part 1 of 23 in the series 12 அக்டோபர் 2014

ரெ.கார்த்திகேசு   ஸ்பானரை வைத்து முடுக்கினான். நட்டு அசையவில்லை. கார் நான்கு பக்கத்திலும் டயரின் பக்கத்தில் முட்டுக் கொடுத்து ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. வேலு ஒரு அட்டையைப் பரப்பிக் கீழே படுத்திருந்தான். நட்டுத் துருப்பிடித்துக் கிடந்தது. ஆண்டுக் கணக்கில் கிரீசைக் காணாத நட்டு. காரை சர்வீஸ் பண்ணி எத்தனை வருஷமோ தெரியவில்லை. அப்படிக் கார்கள்தான் இந்தப் பட்டறைக்கு வருகின்றன. ஓலைக்குடிசையின் கீழ் ‘ஓ’வென்று கிடக்கும் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பட்டறைக்கு வேறு என்ன மாதிரி கார்கள் வரும்? […]