வைதேஹி காத்திருந்தாள்

This entry is part 15 of 34 in the series 28அக்டோபர் 2012

கலைச்செல்வி சன்னல் வழியே சுள்ளென்று எட்டிப் பார்த்தது சூரியன்.  சன்னல் தன்னை உள்வாங்கியதால் அதற்கு கட்டுப்பட்ட சூரியன், தனது ஒளியில் சன்னல் வடிவம் காட்டி அதற்கு நன்றி கடன் செய்தது. அதன் வரிவடிவ ஒளியை இரசித்தவாறு படுத்திருந்தாள் வைதேஹி. “வைதேஹி… சன்னமாக காற்றைக் கிழித்த சத்தம். இன்னமா தூங்கறே?’ என்ற கணவர் குரலுக்கு, “ம்ம்ம் … எழுந்திருச்சாச்சு..” பதிலளித்தாள். பிரிந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்தாள். ஒற்றை நாடி சரீரம். மிக லேசான எழும்பிய வயிறு. நெற்றியில் ஒட்டியிருந்த […]

தாகூரின் கீதப் பாமாலை – 37 யாருக்குத் தெரியும் ?

This entry is part 14 of 34 in the series 28அக்டோபர் 2012

  மூலம்:  இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எனக்குத்  துணைவனாய் உள்ள ஒருவனை எவருக்கும் தெரியாது  ! ஒற்றை நாண் ஒலிக் கருவி மூலம் என் பாடல் வினாக்க ளுக்குப் பதில் தரும்  ஒருவனை எவருக்குத்  தெரியும் ? என் நதி ஓட்டத்தின் அலை மோதலை எவராவது அறிவரோ  என்றாவது  ? எவரை நோக்கி என் நதி ஓடிப் பாயுது  என்று எவருக்குத் தெரியும் ? எனது தோட்டத்தின் தரை முழுதும் போகுல் * […]

நான் ரசித்த முன்னுரைகளிருந்து………….. 2. பாரதியார் – பாஞ்சாலி சபதம்.

This entry is part 12 of 34 in the series 28அக்டோபர் 2012

      எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும். காரியம் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகிறேன், பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக. இந்நூலிடையே திருதிராஷ்டிரனை […]

தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012

This entry is part 11 of 34 in the series 28அக்டோபர் 2012

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் வழங்கிவரும் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு 2012ஆம் ஆண்டுக்கான விழாவை கடந்த அக்டோபர் 7ஆம் நாள் பெந்தோங் நகரில் சிறப்பாக நடந்தேறியது. இவ்வாண்டுக்கான 7000 மலேசிய ரிங்கிட் பரிசு (1,19,000 இந்திய ரூபாய்) கவிஞர் சீனி நைனா முகமது அவர்களின் “தேன் கூடு” என்னும் கவிதை நூலுக்கு அளிக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் நடுவர்கள் குழுத் தலைவரான முனைவர் ரெ.கார்த்திகேசு நிகழ்த்திய  உரை வருமாறு: இந்த ஆண்டு மரபுக் […]

‘பாரதியைப் பயில…’

This entry is part 10 of 34 in the series 28அக்டோபர் 2012

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் ‘பாரதியைப் பயில…’ http://www.mahakavibharathiyar.info/puthiyavai.htm வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும். நன்றி. அன்புடன், வீ.சு.இராமலிங்கம் தஞ்சாவூர்

காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா

This entry is part 9 of 34 in the series 28அக்டோபர் 2012

திண்ணைக்கு வணக்கம் காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழா மார்ச் மாதம் 2013 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது, இதனை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றினை காரைக்குடி கம்பன் கழகத்தார் நடத்த உள்ளனர். அதற்கான அறிவிப்பினை இதனுடன் இணைத்துள்ளேன் இதனை ஏற்றுப் பிரசுரிக்க அன்புடன் வேண்டுகிறேன். முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் து்ரைசிங்கம் கல்லூரி சிவகங்கை muppalam2006@gmail.com காரைக்குடி கம்பன் கழகப் பவள விழாவை ஒட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் நடத்தும்   […]

கொசுறு பக்கங்கள்

This entry is part 8 of 34 in the series 28அக்டோபர் 2012

·பேம் மல்டிப்ளெக்சில் சக்கரவியூஹ் இந்திப்படம். பத்து ரூபாய் டிக்கெட்டை பாப்கார்னோடு 100 ரூபாய்க்கு விற்றுவிட்டதாலும், பாப்கார்னும் பெப்சியும் நிதான நிலையில் நான் உட்கொள்வதில்லை என்பதாலும், 120 டிக்கெட்டில் போனேன். என் சீட் எம் 8. அஷ்டமத்தில் சனி! 7ம் நம்பர் ஆசாமி பழைய துணி போட்டு வாங்கிய பிளாட்டிக் டப்பில் பாப்கார்ன் கொரித்துக் கொண்டிருந்தார். ஆள் இரட்டை நாடி. இரு புறமும் கடோத்கஜ புஜங்கள். ஒடுங்கிக் கொண்டு படம் பார்த்தது பத்ம வியூக அனுபவம் எனக்கு. ஆயாளும் […]

அக்னிப்பிரவேசம் -7

This entry is part 7 of 34 in the series 28அக்டோபர் 2012

அக்னிப்பிரவேசம் -7 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “சார், உங்களுக்குக் கடிதம்” என்று ப்யூன் மேஜை மீது போட்டுவிட்டுப் போய்விட்டான். பைலுக்கு நடுவில் நாளேடை வைத்துக்கொண்டு சீரியஸாய் படித்துக் கொண்டிருந்த பாஸ்கரனுக்கு அந்த உரையைப் பார்த்ததுமே கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது என்று புரிந்துவிட்டது. பரபரப்புடன் பிரித்தான். ஒரு மாதத்திற்கு முன்னால் ஏதோ பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, தனக்கு பிடித்தமான பூவின் பெயரையும், ஐந்து ரூபாயையும் அனுப்பி இருந்தான். அந்த […]

இயேசு ஒரு கற்பனையா?

This entry is part 6 of 34 in the series 28அக்டோபர் 2012

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல் நான் இந்த ஆய்வினை மேற்கொள்ளும் முறையைப் பற்றிய திட்டத்தை உங்கள் முன் வைக்கிறேன். கி.பி.3000-த்தில் வாழ்கிற ஒரு மாணவன் ஆபிரகாம் லிங்கன் என்று ஒரு மனிதர் இருந்தாரா? என்றும், அவர் செய்ததாகக் கூறப்படுபவை உண்மையா? என்றும் பரீட்சிக்க விரும்பினால் என்ன செய்வான்? எந்தவொரு மனிதனுக்கும் பிறப்பிடமும், பிறந்த நாளும் இருக்கும். லிங்கனைப் பற்றிய அனைத்து ஆவணங்களும் இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது போதுமானதாய் இராவிடினும் முக்கியமான ஆதாரங்களுள் ஒன்று. […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -3 பாகம் -8

This entry is part 5 of 34 in the series 28அக்டோபர் 2012

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம்  அங்கம்  முடிவு) அங்கம் -3 பாகம் -8 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா     பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, […]