காய்நெல் அறுத்த வெண்புலம் போல நோன்ற கவின் நெகிழ்ப்ப நோக்கி வீழும் வளையும் கழலும் புலம்ப அளியேன் மன்ற காண்குவை தோழி. கொழுமுனை தடா நிற்கும் நிலத்தின் கண்ணும் ஆறு படரும் நீர்த்தட நாடன் சுரம் கடந்ததென். புல்லிய நெற்பூ கருக்கொண்ட ஞான்று நிலமே நோக்கி நின்ற காலை ஈர்ஞெண்டு வளைபடுத்தாங்கு பருங்கண் உறுத்தி என்முகம் நோக்கும். அயிரைச்சிறு மீன் என்கால் வருடும். புன்சிறை வண்டினம் மூசும் இமிழ்க்கும் நீர்முள்ளி பொறி இணர் தாது நிரக்கும். […]
திருவரங்கப்ரியா மனவெளி என்றதலைப்பைவிட இந்த மணல்வெளி என்னும் தலைப்புஅனைவருக்குமானதாக தோன்றியது. மனவெளியின் பதிவு தனிமனித அனுபவச்சாயல் படர்வதற்கு வாய்ப்பு இருக்கலாம். மணல்வெளி பொதுவானதாக இருக்கிறதல்லவா? மேலும் வெளி அனைவருக்கும் சொந்தமானது. உள் என்பது பிரத்தியேகமானது அவரவர்க்கானது. உள் என்பதிலிருந்துதான் உள்ளம் என்ற சொல் வந்திருக்கவேண்டும். உள்ளம் இருக்கிறது ஆனால் கண்ணுக்குத்தெரிவதில்லை. இல்லாத ஒன்றுடனே நமக்கான உறவு பலமானது. உள்ளத்தின் உட்ச்செல்ல ஒருவரால்தான் முடியும். இதயச்சுரங்கத்தில் ஒற்றையடிப்பாதைமட்டும். உள் என்பதன் எதிர்ச்சொல் வெளி என்றாலும் பொருள் எனப் பார்த்தால் இரண்டும் […]
தென்றல் சசிகலா இன்று முதல் இலவசப்பட்டியலில் இணைக்கச் சொல்லுங்கள் தண்ணீரையும்.. யாசித்தும் கிடைக்காத பொருளாகி விட்டது தண்ணீரும். யாசிக்கிறோம் தண்ணீரை.. உடம்பு நாற்றத்தை கழுவ அல்ல உயிர் அதனை உடம்பில் இருத்த. இன்று முதல் இலவசப்பட்டியலில் இணைக்கச் சொல்லுங்கள் தண்ணீரையும்.. வேண்டாம் வேண்டாம் பழங்கால ஞாபகங்களாய் எங்கோ ஓடும் நதிகள் கூட ஓடும் லாரியில் ஓடக்கூடும்.. நாளைய வரலாற்றில் வறண்ட பூமியின் எண்ணிக்கையை விட நா வறண்டு செத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். வள்ளல்கள் வாழ்ந்த பூமி […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 27. நோபல் பரிசை வாங்க மறுத்த ஏழை…… வாங்க…வாங்க….என்ன முகத்துல ஒருகளையோட வர்ரீங்க..என்னங்க முகத்துல புன்னகை தவழுது….என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா……? என்னது ஒண்ணுமில்லையா…..ஒண்ணுமில்லை அப்படீங்கறதுக்காகவா முகத்துல இப்படியொரு புன்னகை….பரவாயில்லை….பரவாயில்லை….. எப்பவும் இதே மாதிரி புன்னகை தவழுற முகத்தோடவே இருங்க…இந்தப் புன்னகை இருக்கே மனசுக்கும் முகத்துக்கும் ரொம்ப ரொம்ப […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. என்னைக் கண்டு கொள்ள வில்லை நீ என்று எடுத்துக் கொள்ளவா ? விளக்கொளி இல்லாத ஓர் மூலையில் ஒளிந்தேன் கவன மின்றி . திரும்பிப் போனாய் நீ எவரையும் காணாது. கதவருகில் வந்து நின்று தொட்டதும் அது திறக்கு மென்று நீ மறந்தாய் ! சிறிய தடுப்பரண் ஒன்றினில் சிக்கிக் கொண்டது என் அதிர்ஷ்டப் படகு ! […]
தக்க வயது வந்த இளம்பருவ ஆண்மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணம் முடித்தல் தொன்று தொட்டு வரும் மரபான வழக்கமாகும். பெண் இருக்கும் இடம் அறிந்தவுடன் அவளைத் தங்கள் மகனுக்காக அப்பெண்ணின் பெற்றோரிடம் கேட்டுத் தூது அனுப்பும் நடைமுறையும் உண்டு. பெண்ணைப் பெற்றவர்கள் பெண் தரச் சம்மதித்து மணம் நடைபெறும். மாறாகப் பெண் கொடுக்க மறுத்தலையும் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் பெண் தர மறுப்பதோடு வரும் தூதனை இழித்துரைத்தலையும் காண்கிறோம் […]
ஜனவரி 3 2000 திண்ணை இதழ் பழ.நெடுமாறனின் “தமிழக நதி நீர் பிரச்சனைகள்” என்னும் புத்தகத்தின் 30வது பக்கம் ” மேற்கு நதிகளின் நீரை கிழக்கே திருப்பும் பிரச்சனை” என்னும் கட்டுரையாக வெளிவந்த்துள்ளது. நெடுமாறன் குறிப்பிடும் தரவு மிகவும் அதிர்ச்சி அளிப்பது. கேரள ஆறுகளில் 2500 டிஎம்சி நீர் பெருகுகிறது. 500 டிஎம்சிக்கு மேல் கேரளாவுக்கு விவசாயத் தேவை இல்லை என்கிறார். இந்த ஆறுகளை சுரங்கம் மூலமாகத் திருப்பி தமிழ்நாட்டின் கோவை, மதுரை, ராமநாதபுர மாவட்டங்களை செழிக்கச் […]
கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்: ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம் பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டே நாள்களுள் அது இறந்துவிட்டது. முதல் பேரக்குழந்தை என்பதால் எங்கள் வீட்டில் எல்லாரும் ஒரே சோகத்தில் இருக்கிறோம்.’ ’அய்யோ. குழந்தையுடைய அம்மாவுக்குத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிக வேதனையாக இருக்கும்,’ என்றேன். ‘ஆமாம். எங்கள் அண்ணனுக்கு ரொம்பவே […]
http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/Wikimedia_logo_family_complete-2013.svg இ.மயூரநாதன் இ.மயூரநாதன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர். கட்டடக்கலைத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகிறார். 2003ல் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கியது முதல் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக தனியொருவராகப் பங்களித்து இத்திட்டத்துக்கு வித்திட்டவர் மயூரநாதனே. அன்று முதல் கட்டிடக்கலை, வரலாறு, மொழியியல் ஆகிய பல்வேறு ஆர்வத் துறைகளில் 3000 க்கும் கூடுதலான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். இவர் எழுதிய கட்டுரைகளில் கட்டிடக்கலை, யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ், முடிச்சு, ஓவியத்தின் வரலாறு, கோயில், […]
தலை பாறையில் தாக்கியதும், மயக்கமே வந்து விட்டது சானுக்கு. உலகமே இருண்டு தலை சாய்ந்தான். சானைத் தள்ளிச் சாய்த்தச் அந்தச் சிறுவன் ஒரு தூதுவரின் மகன். சான் பேச்சு மூச்சற்று விழுந்து கிடைந்ததைக் கண்டு பயந்து போன அந்தச் சிறுவன், தன் தந்தையிடம் விசயத்தைச் சொல்ல ஓடினான். மற்ற சிறுவர் சிறுமியர்கள் இங்கொருவர் அங்கொருவராய் சிதறி ஓடினார்கள். சிறுவனின் தந்தை சானின் நிலையைக் கண்டு ஆடிப் போய்விட்டார். சான் இறந்திருந்தால் அது இரு […]