குமரன் “நீதி உயர்ந்த மதி கல்வி” என்று பாடியவனின் இறுதி யாத்திரையில் பத்து பேர் கூட கலந்து கொள்ளாத அளவு பக்குவம் பெற்ற பெருமைமிகு தமிழினம் இல்லையா நாம்? நமக்கு வாய்க்கும் கல்விக் கொள்கைகளின் லட்சணமும் அதற்குத் தகுந்தாற் போல் தான் இருக்கும். இதன் சமீபத்திய உதாரணம் தான் “நீட்” சம்பந்தப்பட்ட குளறுபடிகளும் அதைத் தொடர்ந்து நேர்ந்த மாணவியின் மரணமும். 1176 மதிப்பெண்கள் என்பது அசாத்திய உழைப்பின் மூலம் மட்டுமே சாத்தியப்படுகின்ற ஒன்று. அதிலும் ஒரு வறுமையுற்ற […]
சோம.அழகு 1176 ; 196.75 – தனது அத்தனை வருட உழைப்பின் இந்த அருமையான பலனை மதிப்பெண்களாய்க் கண்ட பின், வெள்ளைக் கோட்டும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும் அணிந்து, பல முதியோர்களின் நாடித்துடிப்பையும் கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலத்தையும் மிக அக்கறையாகக் கவனித்துக் கொள்ளப் போகும் பெண்ணாகத் தன்னை உறுதிப்படுத்தியிருப்பார் அனிதா. தனது கனவை நனவாக்க இன்னும் ஓர் எட்டு மட்டுமே என்றிருந்த நிலையில் ஒரு பெரிய பாறாங்கல்லை அவள் முன் கிடத்தி அவளது கனவுகளைச் சிதைத்து, வேல் வடித்துக் […]
என்னைக் கண்டதும் நண்பர்கள் இருவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர். அன்று மாலையில் நாங்கள் மூவரும் சீனர் உணவகத்தில் அமர்ந்துகொண்டோம். பன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். அதைப் பருகியது இதமாக இருந்தது. கோவிந்த் தேநீர் அருந்தினான். நான் கண்ட கனவு பற்றி கூறினேன். ” நீ இதைப் பற்றியே எண்ணிக்கொண்டு படுக்கச் சென்றதால் இத்தகைய கனவு […]
Posted on September 9, 2017 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/WH8kHncLZwM https://youtu.be/SoXzxmVdrE0 https://youtu.be/MDb3UZPoTpc https://youtu.be/og67Xe5quEY http://www.cnbc.com/2015/09/28/ter-nasa.html http://www.msn.com/en-us/video/news/analysis-finding-water-on-mars/vi-AAeUdaw http://www.cbsnews.com/videos/mars-findings-what-to-expect/ பிரபஞ்சத்தில் உயிரின மூலவிகள் பிறப்பு உயிரினத் தோற்றத்தின் மூலவியான ஆரென்யே [RNA] உண்டாக பொரேட்ஸ் [Borates] முக்கிய பங்கு வகிக்கிறது. செவ்வாய்க் கோளில் போரான் [Boron] மூலகக் கண்டுபிடிப்பு உயிரினம் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் என்பதற்கு மேலும் வழி காட்டு கிறது. பொரேட்ஸ் எளிய ஆரென்யே மூலக்கூறுகள் தோன்ற ஒருவகைப் பாலமாகக் கருதப் […]
வணக்கம். சிங்கப்பூர் மலேசியா பயணத்தில் 12 முதல் 27 வரை இருப்பேன் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆவல். தொடர்பு கொண்டால் மகிழ்வேன் சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com
எஸ்.ஹஸீனா பேகம் எவரேனும் எனக்கொரு முகமூடியை கொணர்ந்து தாருங்கள். ரத்தநாளங்களை vவறண்டுபோக செய்யக்கூடிய புகலிடம் தேடித்திரியும் விரட்டியடிக்கப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் எனது செவிப்பறைகளை தீண்டிடாதவாறு காதுகளை பஞ்சினால் அடைக்கப்பட்டதை போன்றதொரு செவிட்டு முகமூடியொன்றை கொணா்ந்து தாருங்கள். சாதியின் பெயரால் துகிலுறிக்கப்படும் திரௌபதிகளின் நிா்வாண கோலங்களை அசட்டைகளற்று கடந்து சென்றிட எனக்கோர் குருட்டு முமூடியை கொணர்ந்து தாருங்கள். நெடுஞ்சாலைப்பரப்புகளில் சிதறுண்டு கிடக்கும் எவனோ ஒருவனின் விபத்துக்குள்ளான சடலத்தையும், விடிகாலைப்பொழுது முதலே டாஸ்மாக் தரிசணம் வேண்டி வரிசையில் காத்துக்கிடந்து […]
பாச்சுடர் வளவ. துரையன் தலைவர், இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர்—607 002 “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றார் ஔவைப் பிராட்டியார். பெறுவதற்கு அரிய அத்தகைய மனிதப் பிறவியை எடுத்தவர்கள் இவ்வுலகில் அப்பிறவியை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். அதுவன்றி, “வெந்ததைத் தின்று விதி வந்தால் மடிவோம்”என்று வாழ்தல் வாழ்வாகாது. வாழவேண்டிய முறைப்படி வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்களைத் தான் “வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. வாழவேண்டிய […]
திண்ணை வாசக நண்பர்களே, ஆங்கிலத்தில் பெர்னார்ட் ஷா எழுதிய Man and Superman நாடக மொழிபெயர்ப்பான எனது நூல் “உன்னத மனிதன்”, சென்னை தாரிணி பதிப்பகமாக, திருமிகு தேமொழியின் மதிப்புரையோடு திரு. வையவன் வெளியிட்டுள்ளார். இந்நாடகக் காட்சிகள் யாவும் தொடர்ந்து திண்ணையில் வாரா வாரம் வெளிவந்தவை. மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. தக்கார் தகவிலர் என்ப தவரவர் “மக்களால்” காணப் படும். என்னும் திருவள்ளுவர் குறட்பாக்களின் இல்லறத்து உட்கருத்தை விளக்குவதே உன்னத மனிதன் […]
அணுசக்தி அறிவியல், அண்டவெளிப் பயணங்கள், விஞ்ஞான மேதைகள் குறித்து கட்டுரைகளும், நூல்களும் பல எழுதி அறிவியல் தமிழுலகில் தனக்கென ஓர் தனித்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட திரு. ஜெயபாரதன் அவர்கள் இலக்கியம் படைப்பதில் பன்முகத் திறமை கொண்டவர். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், படக்கதைகள் என இவர் படைத்தப் படைப்புகளில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தனியிடம் உண்டு. ரவீந்திரநாத் தாகூர், வால்ட் விட்மன், பெர்ட்ரெண்டு ரஸ்ஸல், எலிஸபெத் பிரௌனிங், கலீல் கிப்ரான், ஸர் வால்டர் ராலே, ஆஸ்கர் […]
இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு நிகழ்வும், முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில், பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall – Gower Street, Preston 3072) நடைபெறும். சொல்லவேண்டிய கதைகள் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் புதிய வெளியீடாகும். இந்நூல் முருகபூபதியின் […]