அதீதத்தை ஒரு முறையேனும் ருசித்திருக்கிறீர்களா.. உணவில் மட்டுமே இருக்கலாம் போதும் எனத் தோன்றுவது. புகழாகட்டும் பணமாகட்டும் அதீதமே ஒரு ருசியைப் போலப் பீடிக்கிறது.. அது கசியும் ரத்தத்தின் சுவையாகவும் இருக்கலாம். எல்லாமுமான ஒரு சுவையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும். அதுதான் அதீதத்தின் ருசி. உடல் அழிய அழிய உயிர் சுடர் விட்டுப் பிரகாசிப்பதைப் பார்ப்பது மிகவும் கிளர்ச்சியூட்டுவதாகும். உடலின் சுமையும் நினைவின் சுமையும் குறையக் குறைய பறக்கலாம்தானே..ஒரு சுடரைக் கிள்ளி எடுக்க முடியும் உங்களால். ஒரு […]
எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் திரு.அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். 1957ல்தான் அவரது படைப்பை நான் ‘சரஸ்வதி’ இதழில் படித்தேன். பிறகு ‘ஆனந்தவிகடனி’ல் வந்த முத்திரைக் கதைகளும், குறுநாவல்களும், தொடர் நாவல்களும் என்னை அவரது தீவிர ரசிகனாக ஆக்கின. அதற்குப் பிறகு புதுமைப்பித்தனைப் படிக்க நேர்ந்த போது, ஜெயகாந்தன் அவரது வாரிசாகவும், அவரது இடத்தை நிரப்புகிற வராகவும் எனக்குத் தெரிந்தார். 1962ல் அரியலூரில் நடைபெற்ற ‘கலை இலக்கியப் பெருமன்ற’ ஆண்டு விழாவில் ஜெயகாந்தன் […]
கோமாதாக்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கறக்கின்றன. கோவர்த்தனகிரிகள் கூறாகி கிரைண்டர் கல்லும்., தரையுமாய். யசோதாக்கள் கருத்தரிப்பு மையங்களில் கிருஷ்ணருக்காக பதிவு செய்து கொண்டு. வெண்ணை தின்னும் ஒபீஸ் கண்ணன்கள் கான்வெண்ட் பார்க்குகளில் கோபர்களும் கோபிகைகளும் கணினி மையங்களில் கருகும் கடலையில். கலியுகக் கண்ணன் முகநூல் ராதையுடன் நட்புத் தேடி ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்டில்..
குருவப்ப பிள்ளை பிரான்சுக்குச்சேர்ந்தபோது குளிராகாலம் ஆரம்பித்திருந்தது. தமது தந்தை நைநியப்பிள்ளைக்கு இழைத்த அநீதிக்கு நீதிகேட்க சென்ற குருவப்பிள்ளைக்கு பிரெஞ்சுக் காரர்களின் மனநிலை ஓரளவு புரிந்திருந்தது. அவர் மூன்று நான்கைந்து மாதம் கடலில் பயணம் செய்யவும், மிகுதியான பொருட்செலவை எதிர்கொள்ளவும் துணிந்தாரெனில் யூகங்கள் அடிப்படையில் ஐந்து காரணங்களை முன்வைக்கலாம். முதலாவது: பிரெஞ்சு வரலாற்றில் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை ஓர் அரசின் கீழ் நடக்கும் செயல்பாடுகளுக்கு ஆட்சித் தலமை முழுப்பொறுபேற்பதென்பதை ஓர் அறமாகவே கடைபிடிப்பவர்கள் என்ற பொதுவான நம்பிக்கை இரண்டாவது: […]
அலை கடலில் நீராடி வானமேறியது வண்ண நிலா. மங்கலப் பெண்ணாய் மஞ்சள் முகத்தில் ஆயிரமாயிரம் வெள்ளிக் கரங்களால் அழகழகான மலர்களை அணு அணுவாய் தொட்டு நுகர்ந்தது. தாமரை மலர்களை எல்லாம் தடவித் தடவி தடாகங்களில் மிதந்து களித்தது. பழங்களையெல்லாம் மரத்திலிருந்து பறிக்காமல் சுவைத்தது. நிலவின் சுமையில் மலர்களில் இதழ்கள் உதிரவில்லை. மணங்களை மலர்கள் இழக்கவில்லை. நிலவு சுட்டப் பழங்கள் நிறம் மாறவில்லை. கோடி கோடி மைல்களென அன்றாடம் அலையும் நிலாவிற்கு அணுவளவும் களைப்பில்லை. குமரி எஸ். நீலகண்டன்
கடவுள் சிலநேரம் கண்ணை மூடிக்கொள்வதால், இடையில் வந்தவனுக்குக் கிடைக்கிறது சிவிகை.. நடையாய் நடந்தவன் நடந்துகொண்டேயிருக்கிறான் ! இடையில் ஏற்றம் பெற்றவன், அதிஷ;டம் என்கிறான்.. நடந்தவன் அதையே விதி என்கிறான் ! -செண்பக ஜெகதீசன்..
அமீதாம்மாள் தேங்காயின் மட்டைகள் உரிக்கப்படும் கழிவுக் குட்டையில் முக்கப்படும் நையப் புடைக்கப்பட்டு நார் நாராய்க் கிழிக்கப்படும் மீண்டும் முறுக்கேற்றி திரிக்கப்படும் திரிக்கப்பட்ட நார்கள் கயிறாகி எதைக் கட்ட என்று கேட்கும் ஆயிரம் புத்தகங்கள் பேசாத மனித வாழ்க்கையை அரை முழம் கயிறு பேசுகிறது
ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும் குந்த இடமில்லாமல் முதுகில் புத்தகத்தை சுமந்து நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் முதுகு பைகள் கர்ணகவசம் கழற்றி வைக்கப்படுவதில்லை குந்திகளின் முக்கை அறுக்கும் பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம் மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம் கூட்டம் அதிகமாக இருந்தாலும் முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும் இந்த கர்ணர்களை கண்டால் கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும் இறக்கி கையில் வைக்க சொன்னால் ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும் முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென […]
– இந்திக ஹேவாவிதாரண தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை சித்திரவதையென்பது, மனித வர்க்கத்தினால் தனது சக மனிதர்களுக்கு இழைக்கப்படும் மிகவும் கீழ்த்தரமான செயல்களிலொன்று என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இலங்கை கூட அதனை ஏற்றுக் கொண்டு ‘1994ம் ஆண்டின் 22ம் இலக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அச் சட்டத்தின் மூலம் குரூர, மனிதாபிமானமற்ற மற்றும் அவமரியாதையான சித்திரவதைகளுக்கு எதிராக நடந்துகொள்ள வேண்டுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு நடந்துகொள்வதற்காக காவல்துறையினருக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் சாதாரண பொதுமக்கள் எந்தவிதமான […]
சங்ககால நினைவுகள் காயம்பட தண்ணீர் மறந்து கிடந்தது மதுரையின் வைகை. மேல் கவிழ்ந்த கான்கிரிட் பாலத்தில் புகைகக்கிப் பரிகசித்துப்போனது சக்கர விசைகள். பிரிந்தும் சேர்ந்தும் ஒட்டியும் விலகியும் உறவுகள் போலப் பாதைகள் கிளைக்க ஈர்த்துச் சென்ற சக்கரத் தடத்தில் காலமற்றுக் கிடக்கும் திருமோஹ¥ர்க் காற்றில் நாராயணம் கமழ்ந்தது. பரவசம் தணிந்து வாழ்க்கைப் புழுதியில் மீண்டும் உழன்று சுழன்றது பயணம். கைகுலுக்கிப் பா¢மாறின சிறு புன்னகைகளில் மனம் ஒட்டாது பிரியுமுன் காய்ந்தன புதிய அறிமுகங்கள். சேர்ந்தும் கலைந்தும் காற்று […]