பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்

This entry is part 11 of 41 in the series 25 செப்டம்பர் 2011

– தேஷான் ருவன்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி, புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தேன். எனது அறைத் தோழன் அன்று நேரகாலத்தோடு கடமையை நிறைவேற்றி விட்டு வந்திருந்தான். “எங்கேயாவது வெளியே போய் வருவோமா? ஒரே அலுப்பாக இருக்கிறது.” “எங்கே போகலாம்?” “எங்கேயாவது போகலாம். நான் பைக்கையும் எடுத்து வந்திருக்கிறேன்.” சில நிமிடங்களுக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்ட […]

இந்திரனும் அருந்ததிராயும்

This entry is part 10 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஒன்று ஆதிவாசிகளின் வாய்மொழிப் பாட்டு. இன்னொன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள். இருவரின் அரசியல் தளமும் வெவ்வேறானவை. ஒருவர் கலை இலக்கிய விமர்சகங்களின் ஊடாக தன் கருத்துகளை முன்வைக்கும் எழுத்தாளர். இன்னொருவர் கலை இலக்கிய விமர்சக வட்டங்களைத் தாண்டி இன்றைய சமகால அரசியல் சமூக தளத்தில் ஊடகங்களின் மிகுந்தக் கவனத்திற்கு உரியவர். முன்னவர் இந்திரன். பின்னவர் அருந்ததிராய். கட்டுரை உண்மைக்கு மிகவும் நெருக்கமாகவும் கவிதை புனைவுக்கு நெருக்கமாகவும் இருப்பதாகவே நம்பப் படுகிறது. கவிதைக்குப் பொய்யழகு என்று கூட சொல்லி […]

இரவை வென்ற விழிகள்

This entry is part 9 of 41 in the series 25 செப்டம்பர் 2011

துஞ்சாத கண்களும் துயிலாத இரவும் உருட்டிய பகடையில் விழுந்தது முதல் தாயம் ஆட்டத்தை துவங்கியது இரவு. உறங்காத இரவிற்குள் சலனமின்றி உறங்கிய கனவு ஏணிகள் வழியாய் அசுரப் பாய்ச்சலில் நகர்வு. எதிவந்த அரவங்களின் வாய்தனில் அகப்படாமல் தாண்டித் தாண்டி தொடர்ந்தன கண்கள் மூன்றாம் யாமத்தைத் தாண்டியும் வெற்றி தோல்வியின்றி தொடர்ந்த உருட்டல்களில் எல்லாப் பிடிகளுக்கும் நழுவிய இரவு இறுதியாய் வைகறையின் வாயில் சிக்குண்டது. – வருணன்

எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)

This entry is part 8 of 41 in the series 25 செப்டம்பர் 2011

“நினைவுப்பாதை” முற்றிலும் ஒரு மாறுபட்ட வாசிப்பாகவே எனக்கு அமைந்தது. இப்பொழுது கூட அக்கதையில்(கதையா?) வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிருக்கிறதே தவிர அவற்றின் தன்மைகள் விளங்கவில்லை எனக்கு. மேலும் பெரும்பாலான இடங்களில் வார்த்தை விளையாட்டு காணப்படுகிறது. அதுவே வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் தெரியவில்லை. அவர் எழுத்து நடையே அப்படிதானா? என்று எண்ணத் தோன்றுகிறது” நகுலனின் ‘நினைவுப்பாதை’ நூலை வாசித்த பிரவின் என்கிற வாசகரின் விமர்சனம் இது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர் திரு.மௌனி அவர்களது சிறுகதைகளைப் படித்தபின் எனக்கும் இதே எண்ணம்தான் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)

This entry is part 7 of 41 in the series 25 செப்டம்பர் 2011

(Discovery of A Planet Orbiting Two Suns) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   ஒற்றைப் பரிதியைச் சுற்றிவரும் நமது பண்டைக் கோள்கள் ! விண்வெளியில் இப்போது இரட்டைப் பரிதிகள் சுற்றும் சுற்றுக்கோள் ஒன்றைக் கண்டு பிடித்தார் அண்ட வெளியில் ! சுற்றுக் கோளின் மாலை அந்திப் பொழுதில் இரு பரிதிகள் அடுத்தடுத்து அத்த மிக்கும் விந்தை நிகழும் தொடு வானிலே ! நேற்று நியூட்ரான் விண்மீனைச் சுற்றி வரும் வைரக்கோள் […]

Nandu 1 – அல்லிக் கோட்டை

This entry is part 6 of 41 in the series 25 செப்டம்பர் 2011

இரா.முருகன் “லில்லி காஸில். அங்கே இருந்து டுர்ஹாம் எட்டு மைல். இந்த வழி முச்சூடும் ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே, இருபத்து மூணு மதுக்கடை” நண்பர் நண்டுமரம் உரக்கச் சொன்னார். ஸ்காட்லாந்து இளைஞர். வயது இருபத்தைந்து பிளஸ் கொசுறாக ஐம்பது. பக்கத்தில் ஸ்டியரிங்கை முரட்டுத்தனமாக வளைத்து லில்லி காஸில் பக்கம் திருப்பிய வேட்டைக்காரத் தடியன் அதிவேகமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இவனும் ஸ்காட்டிஷ் காரன் தான். அசல் இளைஞன். வயது இருபத்தேழு. நோ கொசுறு. அசல் ஸ்காட்டீஷ் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9

This entry is part 4 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “இதைப் பூரணமாகப் புரிந்து கொள்ள இயலாது.  பொதுடைமைத் தத்துவம் (Socialism) என்பது தர்மசாலை அறக்கொடை அல்ல !  ஏழையர் மீதுள்ள அனுதாபம் அல்ல ! கருணைப் பாசம் அல்ல !  அல்லது பொதுநபர் வரவேற்கும் இரக்க குணம் அல்ல !  பொருளாதார நிபுணர் சீர்கேடு, வீண்கழிவுகள் மீது கொள்ளும் வெறுப்பு அது !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (Everybody’s Political […]

மாயங்களின் யதார்த்த வெளி

This entry is part 3 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டு தன் கைகளை உள்ளே விடத் துடிக்கும் அந்த மரத்தையே நோக்குகிறாள் நந்தினி. என்ன இது, என் கண்களையே என்னால் திறக்க முடியவில்லையே, பிறகு நான் எப்படிப் பார்க்கிறேன்? பயப்படாதே நான்தான் உன்னை எழுப்பினேன். நீ எழுப்பினாயா…எப்படி? வெளியே இருக்கும் நீ எப்படி என்னை எழுப்ப முடியும்? கண்களைத் திறக்காமல் நான் எப்படி உன்னைக் காண்கிறேன்….? என்னால் நீ உறங்குவதற்கு குளிர்ந்த காற்றை அளிக்க முடியுமென்றால் உன்னை என்னால் எழுப்ப முடியாதா? […]

பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…

This entry is part 2 of 41 in the series 25 செப்டம்பர் 2011

. கோவிந்த் கோச்சா இந்த கட்டிடம் சென்னை, திருவான்மியூர் மின்சார ரயில் நிலையத்தின் கிழக்குப் புரம்… பின்னாடி இருக்கும் சாக்கடையைப் பார்த்து முகத்தைச் சுழிக்க வேண்டாம்… இது நாமே மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் கதை… இது பக்ஹிங்காம் கால்வாயாக அகண்டு இருந்த , மாமல்லபுரத்தில் இருந்து இதன் வழியாக மூங்கில்களும் இன்ன பிற சாமன்களும் நீர்தடமாய் வந்த வழி தான்… பெரும்பகுதி ரயில் நிலையத்திற்காக கட்டிட அடித்தளம் ஆன பின் மிஞ்சியது இந்த சாக்கடை….. நாகரீகமற்று […]

ரமணி கவிதைகள்

This entry is part 1 of 41 in the series 25 செப்டம்பர் 2011

அன்பின் வலி இறுகப்பிடித்திருந்த அம்மாவின் சுட்டுவிரல் வழி வழியும் அன்பின் அதீதம் தாங்காது போயிருக்கிறது பல நேரங்களில்… பள்ளிக்கூட வாசலில் அழுதுவிடுவேனோ எனத் தயங்கி நின்றவளைக் கையசைத்துப் போகச் சொன்னதும் உண்டு. மொழி தொ¢யாத ஊ¡¢ல் வேலை கிடைத்துப் போகும் நாளின் முன் இரவில் மடி சாய்த்துத் தலை கோதி வார்த்தையற்று இருந்தவளை விலக்கி நகர்ந்த போதும் மண நாளில் யாருக்கோ என்னைத் தாரை வார்த்ததாய்த் தனியளாய் நின்று யாருமறியாமல் மருகிய போதும் அன்பின் இரு எல்லைகளை […]