வழி – கலீல் ஜிப்ரான் குன்றுகளின் மத்தியில், தம் தலைப்பிள்ளையான ஒரே மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாள் ஓர் பாவை. மருத்துவர் ஆங்கே நின்று கொண்டிருக்கையிலேயே, அக்குழந்தை இறந்தது ஓர் காய்ச்சலினால். அந்தத் தாயவள் வேதனையினாலே. மனம் குழம்பிப் போனாள் அம்மருத்துவரிடம், “சொல்லுங்கள், சொல்லுங்கள் அவனது செயல்களை முடக்கிப்போட்டதோடு, அவனுடைய இனிய கானத்தையும் அமைதியாக்கியது எது?” என்று பதறினாள். அந்த மருத்துவரோ, ”அது அந்தக் காய்ச்சல்தான்” என்றார். மேலும் அந்தத் தாய், “ஏன் அந்தக் […]
வாழ்க்கையை உழும்… காலம்..! தன்னை யாரெனக் உணர்த்திடும் காலம்..! பூமியை சிக்க வைத்த சக்கரம்..! காலம்..! இல்லாத ஒன்றை இருப்பதாய்க் சிரிக்கும் காலம்.. இன்று…! என்பதை நேற்றாக மாற்றும் காலம்..! பூமி கடந்து சென்ற பாதை காலம்..! கலி முத்தியதால்… அலங்கோலமாய் சிரித்தது… காலம்..! விதைத்ததை அள்ளிக் கொடுத்தது காலம்..! காலன் பார்ப்பதில்லை காலம்..! மன ரணத்தை ஆற்றிடும் அருமருந்து காலம்..! கருவை வளர்த்து கிழமாக்கும் காலம்..! கேள்வியும் கேட்கும் பதிலும் சொல்லும் காலம்..! ஒளியை இருளாக்கும்.. இருளை… நிலவாக்கும்… […]
கேப்டன் லட்சுமி சேகல் (1914 – 2012 கேப்டன் லட்சுமி சேகல் சென்னையில் பிறந்து, மருத்துவராகப் பணியாற்றியவர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். 1914ம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 24ம் நாள் சென்னையில் (அன்றைய மதராஸ் பட்டிணம்) பிறந்தவர், இவருடைய தந்தை டாக்டர் எஸ். சுவாமிநாதன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர், அமெரிக்காவில் வானியல் துறையில் முனைவர் பட்டமும், கணிதவியலில் பட்டமும் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்து உலகை நீத்தார் பெருமை யாக நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத் தவ்விய தள உளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் கொண்டு இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று வால் வீசிய தூசியைப் பிடித்து வந்தார் காசினிக்கு ! வக்கிரக் கோள் மாதிரியை வையத்தில் இறக்கிடும் இப்போது […]
சிறகு இரவிச்சந்திரன். பத்தாண்டுகளுக்கு முன்னர், கவிஞர் தாராபாரதி பெயரால், விழா எடுத்து, விருது வழங்கியவர்களில் முன்னோடி, இலக்கியவீதி இனியவன். அப்போது அவருடன் துணை நின்றவர் தாராபாரதியின் அண்ணன் கவிஞர் மலர்மகன். முதுமை காரணமாக இனியவன் செயல்பட இயலாததால், கடந்த சில வருடங்களாக, ஆண்டு தோறும் அமரரான தம்பிக்கு விழா எடுத்து, சிறந்த நூல்களுக்குப் பரிசும் பாராட்டுப்பத்திரமும் கொடுக்கிறார் மலர்மகன். வெறுங்கை என்பது மூடத்தனம் / விரல்கள் பத்தும் உன் மூலதனம் என்ற நம்பிக்கை வரிகளை எழுதிய […]
தி.ந.இளங்கோவன் பருவப் பெண்ணின் செருக்கோடு வளைந்து நெளிந்து பாய்கிறது நதி. கரையோரம் பொறுக்க யாருமின்றி உதிர்ந்து கிடக்கின்றன நாவற்பழங்கள். அப்பா தூக்கியெறிந்த உணவுத்தட்டு ஆடி அடங்குகிறது முற்றத்தில் சோற்றுப்பருக்கைகளின் மீது. செத்த எலியொன்றை சிதைத்துப் புசிக்கின்றன பசி கொண்ட காகங்கள். சருகு மெத்தையில் சுருண்டு கிடக்குதொரு நாகம். காய்களின் கனம் தாங்காமல் தரை தொடுகிறது மாமரக்கிளை. தனது கடைசி உணவுக்காய் காய்க்கிறது தினமென்று உணராப் பெண்ணொருத்தி அம்மரத்தின் பூப்பறித்து தினந்தினம் தொழுகின்றாள், எல்லாம் அறிந்தும் எதுவும் […]
வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில் நான் சந்தித்த விலைமகள் மிகவும் அகங்காரத்துடனும் அழகுடனும் கருப்பாகவுமிருந்தாள் காலையில் நாம் உணவுக்காகச் செல்லும் உணவகத்தின் இன்னுமொரு மூலையில் பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள் அவளது வயிறு மேடிட்டிருப்பதை கதிரைகளுக்கிடையேயிருந்து கண்டேன் கருவுற்றிருந்தாள் பசியகன்றதும் மரத்தடிக்குச் சென்றாள் நாள்தோறும் சந்திக்க நேரும் அவ் வதனத்தை எவ்வாறு தாங்கிக்கொள்ள இயலும் வங்கி முன்னாலிருக்கும் ஒரேயொரு சிறு நிழல் மரம் அவளது இருப்பிடம் ஒருவர் மாத்திரமே இருக்க முடியுமான அவ்விடத்திலமர்ந்து வயிற்றைத் […]
செவ்வாய் கிரகத்தைச் சதுரஅடி சதுரஅடியாய்ச் சலித்துச் சலித்துச் சொல்லி விட்டோம் கணினியில் ‘செவ்வாய்’ என்று தட்டினால் கொத்துக் கொத்தாய்ச் செய்திகள் இறங்கிக் ‘குறித்துக் கொள்’ என்கிறது ஆனாலும் நாம் சும்மாவா இருக்கிறோம்? சூரியக் குடும்பத்தில் மூன்றாம் மடியில் நாம் நான்காம் மடியில் செவ்வாய் இடையே கிடக்கும் அண்டம் கடக்க வண்டியொன்று செய்தோம் அது செவ்வாயில் இறங்கி எழுதியிருக்கிறது நம் முகவரியை 6 ஆகஸ்ட் 2012 மனித வரலாறு மறக்கமுடியாத […]
நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார். வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள். மிகச் சரியாகச் […]
ஹெச்.ஜி.ரசூல் இமாம் ஷாபி தரும் விளக்கமொன்று இவ்வாறு விரிகிறது. முசுக்கட்டை மரத்தின் இலை, அதன் சுவை ஒன்றுதான். ஆனால் அதை பட்டுப்புழு தின்றுவிட்டு பட்டுநூலைத் தருகிறது. தேனீ தின்றுவிட்டு தேனைத் தருகிறது. இவ்வார்த்தைகளை நாம் இச்சூழலில் பொருத்திப் பார்க்கலாம். குர்ஆன் ஒன்று. எனினும் காலந்தோறும் அதன் விளக்கவுரை நுட்பமாக விரிவாக பல்வித அர்த்தப் பரிமாணங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. காலம், அறிவுச்சூழல், பிரதேசம், பண்பாட்டின் இறுக்கம் சார்ந்து அதன் அர்த்தங்கள் அகலமும் கனமும் பெறுகின்றன. ஒற்றை […]