ஒருபாகன்
- பட்டாசு சிதறல்கள்
புத்தாடை வாசனைகள்
பலகாரப் பெருஞ்சுவைகள்
வந்திறங்கிய உறவுகள்
வலம் வந்த நட்புக்கள்
விரிந்தோங்கிய பேச்சொலிகள்
அம்மாவின் மலர்முகம்
அப்பாவின் இளநகை
அக்காவின் கைகோர்ப்பு
ஆச்சியின் தலைக்கோதல்
தாத்தாவின் தமிழ்அகவல்
தோட்டத்துப் பச்சை
முற்றத்து ஊஞ்சல்
திண்ணையின் ஈரம்
- அத்தினத்து ஓசைகளும், உணர்வுகளும், தாக்கங்களும்
உயிரோடு கலந்துள்ளோடி
பழுப்பேறிய பக்கமாய் என் மனப்புத்தகத்தில் !
- மறுபடியும் வாழ்ந்துணர எஞ்சவில்லை எதுவும்…
புலம் பெயர்ந்த பூமியில் பழுப்பேறிய காகிதமாய்
நானும் இங்கே தனியே !
- ஒருபாகன்
- மழை புராணம் : 40
- பழுப்பேறிய காகிதம்
- பலியாடு
- அனாதை…
- பிரசவிக்காத மெய்
- இதெல்லாம் ஒரு பொழப்பு!
- மரணம்
- சீதை பல்