Articles Posted by the Author:

 • தாட்சண்யம்

  -எஸ்ஸார்சி பட்டுக்கோட்டையிலிருந்து என் ஆருயிர் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். ‘பட்னாகர் கவிதைகள் கொஞ்சம் மொழிபெயர்த்துக்கொடுங்க இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன் ‘ . நண்பர் ராமலிங்கம் பட்டுக்கோட்டையிலே இருந்துகொண்டு சிற்றிதழ்கள் ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் ஒன்றும் நிறைவோடு கொண்டு வருகின்றார். தமிழ் இலக்கிய இதழ் ‘இலக்கியச்சிறகு’..ஆங்கிலம் ‘ஷைன்’. பட்னாகரின் ஆங்கிலக்கவிதைகள் சில ஷைன் இதழில் வெளிவரவே அந்த ப்பிரதியோடு இலக்கியச்சிறகு ஒன்றும் அவருக்கு அனுப்பி விட்டார்கள். தவறுதலாகத்தான் இது நிகழ்ந்துவிட்டிருக்கிறது. அனேகம் பேருக்கு இப்படி இரண்டு […]


 • ராசி

  ராசி

  -எஸ்ஸார்சி .அவனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு -அடைப்பில் ‘வெஜ்’ என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான். அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணை எழுதி உடன் பி […]


 • சைவம் -எஸ்ஸார்சி அவன் தன் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தான்.தனக்கு அலுவலத்துப்பணியில் சமுத்திரகுப்பம் மாற்றல்.முதுகுன்ற நகரத்திலிருந்து ஒரு மணி பேருந்தில் பயணிக்க அந்த சமுத்திரகுப்பம் போய்ச்சேரலாம்.முதுகுன்ற நகரில் அவன் ஒரு வீடு சொந்தமாகக்கட்டி அதனில்தானே குடியிருந்தான். பணி இடம் மாற்றல் ஆக அவன் முதுகுன்ற வீட்டை வாடகைக்கு விடவேண்டும்.வீடு வாடகைக்கு என வெள்ளைத்தாளில் ஸ்கெச் பேனா கொண்டு எழுதி காம்பவுண்ட் சுவரில் ஒட்டினான்.மறக்காமல் தன் தொலைபேசி எண்ணையும் அதனில் எழுதி வைத்துவிட்டுத்தான் சமுத்திரகுப்பம் சென்றான். அவன் அலுவலகத்தொலைபேசி எண்ணைத்தான் […]


 • பந்தம்

  பந்தம்

  எஸ்ஸார்சி நேற்று எம் ஜி ஆர் நகர் மாரி அம்மன் கோவில் பூசாரி எங்கள் வீட்டிற்கு வந்தார்.எம் ஜி ஆர் நகர் என்றால் அது ஒன்றும் சென்னையிலுள்ள அண்ணா நகர் போன்றது இல்லை.முதுகுன்றமே ஒரு சிறு நகரம்தான்.இப்போதுதான் அது தன் கால்களை அகலமாக்கி ‘இதோபார் என்னை ‘என்கிறமாதிரி வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த முதுகுன்றத்து கிழக்குப்பகுதியில்தான் இருக்கிறது இந்த எம் ஜி ஆர் நகர். ஒரு நூறு சலைத்தொழிலாளர்க்கு அன்றைய முதல்வர் இனாமாக மனை ப்பட்டாவழங்கியதுதான் இதன் ஆரம்ப வரலாறு. […]


 • வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்

  வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்

  அப்துல் கலாம் மறைந்துவிட்டார்.ஆம் நம் கண்கள் பனிக்கின்றன. இந்திய சாதாரண மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன். விதிவசத்தால் கால்கள் ஊனமாகி ஆனால் எப்படியும் நடக்கத்தான் வேண்டும் என முயலும் மனிதர்க்குத்தரப்படும் செயற்கைக்காலகள் எடைமிகக்குறைந்து அவனுக்கு அது சுகம் தரவேண்டுமென எண்ணி அதன் பாரம் குறைத்த.குணவான். ஒரு அணு விஞ்ஞ்ானி இந்திய விண்ணியல் செயல்பாடுகள் உலகை பிரமிக்கவைக்க அடித்தளமிட்ட மாமனிதர்களின் திருக்கூட்டத்துத்தலைவன். ராமேசுரம் எனும் குட்டித்தீவில் தீவில் ஒரு அரசாங்கத்து ஆரம்பப்பள்ளியில் தமிழ் வழி பயின்றதால் கூட அக்னிச்சிறகுகள் […]


 • அமாவாசை

  அமாவாசை

  -எஸ்ஸார்சி ‘நீர் எப்பிடி என் கார் பார்கிங்க்ல வண்டிய நிறுத்தலாம். உம்ம பவுன்டரிக்குத்தான் பளிச்சின்னு எல்லோ மார்க் இருக்கு. அப்புறம் எங்கிட்டே எதுக்குவரணும்?’ ‘சிடியில பிளாட் வீடு வாங்கிட்டு அதுவும் இந்த கன்னா பின்னா ஆளுவுளு கூட மல்லுக்கட்டவேண்டிருக்கு’ ‘எனக்கு இப்ப வண்டி வாங்க முடியல்லே. பிளாாட் கடன மொதல்ல அடைக்கணும் நான் என்ன பண்ண முடியும்’ ‘சார் அது வரைக்கும் என் பெரிய வண்டி கொஞ்சம் முன்ன பின்ன நிக்கட்டுமே’ ‘என்ன சாரு நீங்க பேசுறது.எனக்குன்னு […]


 • தொடு -கை

  தொடு -கை

  -எஸ்ஸார்சி உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் இதுவா பிரச்சனை ஆகிவிடும். ஆகிவிட்டதே.முதுபெருங்களத்தூரில் ஒரு பகுதி புதியதாகத்தோன்றி வளர்ந்து வரும் பகுதி.சென்னை மா நகரோடுல் எங்கோ ஒரு மூலையில் ஓரமாகத் தொத்திக்கொண்டு நிற்கிறது. பெயர் சூட்டும் பெரிய மனிதர்கள் அந்தப்பகுதிக்குப்பெயர் நன்றாகத்தான் வைத்திருக்கிறார்கள்.ரெங்கபுரி.உடனே இங்கு ரெங்க நாதருக்கு ஆலயம் ஏதேனும் உண்டா என்று கேட்டு வைக்காதீர்கள்.இது வரை அப்படி ஒரு கோவில் இல்லை. இனி வரலாம். எந்த சாமிக்கு எந்த ஊரில் எழுந்தருளப் பிராப்தமோ யார் கண்டார்கள் […]


 • நெசம்

  நெசம்

  எஸ்ஸார்சி ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார்.அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை.நிலபுல ன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை மண் போர்த்திக்கொண்ட பூமி. வாழை கரும்பு செந்நெல் என எல்லாம் விளையும் வயல்கள். வயல் வெளியிலிருந்து பார்த்தால் கேப்பர் மலை தூரத்தில் சிரியதாகத் தெரியும். அங்கேதான் வெள்ளைக்காரன் கட்டிய கேப்பர் குவாரி ஜெயில் இருக்கிறது. மாகவி பாரதியாரும் புதுச்சேரி விட்டு புறப்பட்ட சமயம் கைதாகி அங்குதான் சிறையில் இருந்தார். முழுப்புரட்சி என க்குரல் தந்த ஜெயப்பிரகாஷ் […]


 • வொலகம்

  வொலகம்

  எஸ்ஸார்சி தேரோடும் வீதிய்ல்தான் அந்த சவம் கிடந்தது.சவம் என்றால் சவம் இல்லை.முண்டம்தான் கிடந்தது. யாருடைய உடல் அது தலை எங்கே போனது. தெருவில் பத்து பேருக்குக்குறையாமல் இங்கும் அங்கும் விறைத்துகொண்டு நடக்கிறார்கள். ஏதோ விபரீதம் நடந்துவிட்டிருக்கிறது.வீதி என்று முத்லில் சொன்னதைத் தெரு என்று கொஞ்சம் மாற்றிச்சொல்லி இருக்கிறேன்.கொலை அல்லவா நடந்து முடிந்திருக்கிறது.ஆகத்தான் அப்படி.. காண்போரிடம் எல்லாம் என்னாய்யா நடந்தது அவன் கேட்டான்.. தெருவில் நடமாடிய பத்து பேரில் ஒருவன் அவனை வாயை மூடிக்கொள் என்று செய்கை காட்டினான். […]


 • வெசயம்

  வெசயம்

  எஸ்ஸார்சி அனேகமாக புது வீட்டின் ஆசாரி வேலைகள் முடியும் சமயம்.நான்கு ஆசாரிகள் ஒரு மாதமாக தட்டி தட்டி வேலை செய்து நான்கு அறுகால் ஆறு ஜன்னல்கள் மஞ்சளைப் பூசிக்கொண்டுதயார் ஆனது.அவன் அனுவலகத்துக்கு ஒருமாதம் விடுப்பு போட்டான்..இதற்கு செலவு ஆகாத விடுப்பு பின் எதற்கு என்றுதான் தோன்றிற்று. ரெடிமேடாகவே அறுகாலும் ஜன்னலும் மரவாடியில் தயாராக விற்பனைக்கு இல்லையா என்ன. நாமே ஆசாரி வைத்து செய்வது போல் ஆகுமா என்று சொல்கிறார்களே. ரெடிமேடு ரெடிமேடு தான் நாம ஆசாரி வச்சி […]