கவிதை

This entry is part 33 of 45 in the series 26 பிப்ரவரி 2012

எச்சத்தாற்காணப்படும் உட்கார உறங்க களிக்க இசை பாட கூடு கட்ட முட்டையிட்டு குஞ்சு பொரிக்க உணவுகொடுத்து பசியாற்றிய மரம், விழுங்கிய பழத்தின் விதையை பிறிதொரு இடத்தில் எச்சம் வழி ஊன்றச்செய்த பறவை. —————- உருப்படியான கவிதை சலவைக்குச்சென்று திரும்பிய துணிகளில் போடாத என் உருப்படியைத்தேடுவது போல இதழ்களுக்கு அனுப்பாத என் கவிதைகளை அதன் பக்கங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன். — சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)

This entry is part 30 of 45 in the series 26 பிப்ரவரி 2012

  சு.சமுத்திரம் =========== எழுத்து நிறைய கடல் உண்டு. ஒரு துடுப்பு தேடும் துடிப்பு உண்டு. பி.எஸ் ராமையா ================ ம‌ணிக்கொடியை கொடி அசைத்து ஓட்டியவர் இவ‌ரே. சாவி ==== மாற்றிப்ப‌டியுங்க‌ள். அமெரிக்காவுக்கு “விசா” இவ‌ர‌து “வாஷிங்க்ட‌னில் திரும‌ண‌ம்” ம‌ணிய‌ன் ‍======== ஆன‌ந்த‌ விக‌ட‌னில் அங்குல‌ம் அங்குல‌மாய் ஊர்ந்த‌ எறும்பு. ஸ்டெல்லா புரூஸ் ================= காத‌லுக்கு க‌ண்ணில்லை என்பார்க‌ள் நாவ‌ல்க‌ளில் காதலுக்கு துடிப்புமிக்க‌ க‌ண்க‌ள் த‌ந்த‌வ‌ர். டாக்ட‌ர் ல‌ட்சுமி ============== பெண்க‌ள் என்றாலே குத்துவிள‌க்கு தான் என்று […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 8) எழில் இனப்பெருக்கம்

This entry is part 10 of 45 in the series 26 பிப்ரவரி 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

அப்பாவின் சட்டை

This entry is part 6 of 45 in the series 26 பிப்ரவரி 2012

ஒரு மழை நாளின் மதிய வேளையில் தொலைந்து போன பொருளை பரணில் தேடிய போது கிடைத்து தொலைத்தது தவிக்கவிட்டு எப்போதோ தொலைந்து போன அப்பாவின் கிழிந்து போன சட்டை   அ.லெட்சுமணன்

பேரதிசயம்

This entry is part 4 of 45 in the series 26 பிப்ரவரி 2012

அந்திவரை வெயில் அழகும்.. பிந்திவரும் இருள் அழகும்.. வானுடுத்த உடுவழகும்.. பானுவிடும் கணையழகும்.. மண்ணுலகில் இல்லையெனில் – மாந்தர் நிலை என்னவாகும்..? “காற்று” வீச மறந்தால்.. ப+மி சுற்றமறுத்தால்.. மேகம் அசையாது போனால்.. தேகமும் உள்ளமும் என்னவாகும்! புவி ஆகர்சம் இல்லையென்றால்.. “ஆக்சஸின்” வாயு அழிந்துபோனால்;; நீர் வட்டங்கள் குழம்பி விட்டால்.. “வாழ்க்கை வட்டங்கள்” நிலையென்ன..?, “கண்ணீர் வட்டங்கள்”தான் மீதமாகும்! ஜுமானா ஜுனைட், இலங்கை.

தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?

This entry is part 1 of 45 in the series 26 பிப்ரவரி 2012

தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ? மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என் ஆத்மாவை நெருங்கிக் குறுக்கிட்டவள் யார் வசந்த காலத் தென்றல் நறுமணப் புகைபோல் ? மங்கை என்னைக் கடந்து செல்கையில் மலர்கள் பூத்துக் குலுங்கும் நூற்றுக் கணக்கில் !   போவ தெங்கெனப் புகலாது அவள் போனாள் பாவை இங்கு திரும்பி மீளவும் இல்லை. கடக்கும் போது ஓரக்கண் […]

இவள் பாரதி கவிதைகள்

This entry is part 27 of 31 in the series 19 பிப்ரவரி 2012

நகராத காய்களைப் போலவே நகரும் காய்களும் நகர்த்துபவரின் கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன.. நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார். நகர்ந்த நகராத காய்களின் அசைவுகளுக்கேற்ப.. சுயசிந்தனைக்கு வாய்ப்பளிக்கும் முதல் நகர்த்தல் தான் தீர்மானிக்கிறது அடுத்ததடுத்த கட்டுப்பாடுகளை.. தன் பக்க காய்களே தமக்கெதிராய் மல்லுக்கு வரும் போதில் ஆட்டம் முடியுமுன் எதிராளி அறியாமல் கலைத்து முதலில் இருந்து ஆட்டத்தை துவக்கவோ அத்துடன் முடிக்கவோ துடிக்கிறது முகமூடி அணிந்த கையொன்று… ============= நிலத்தில் விழவும் நீரில் விழவும் நிழல் மறுக்கிறது.. காற்றில் பரவவும் உடலெங்கும் விரவவும் சுவாசம் திணறுகிறது ஆயுதம் […]

ஐங்குறுப் பாக்கள்

This entry is part 24 of 31 in the series 19 பிப்ரவரி 2012

அரசுப் பாடம் காற்று மிரட்ட காலத்தின் சமச்சீர் பக்கங்களை அழுதுகொண்டே நடுங்கியபடி படிக்குது மெழுகுவர்த்தி ஐந்தாம் படை கடலின் ரகஸ்யங்களை கடத்திக் கரைசேர்க்குது அலைகள் தவணை முறையில். காற்றின் உபயம் மூச்சு முட்டி மூங்கிலில் வழிகிறது இசை குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சியில் தாவரங்கள் சோம்பித் தி¡¢யும் மானிடப் பதர்க்கு காற்றின் உபயத்தில் கவிதையும் இலவசம். மலராது மலர்ந்து பூக்கவே பூக்காத செடியில் சோகம் பூத்திருக்கு. சாகாதல் பூத்துப் போயிருக்குமென ஞாபகம் தோண்டினால் இன்னும் நெருப்பு. _ ரமணி,

குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.

This entry is part 23 of 31 in the series 19 பிப்ரவரி 2012

கிண்ணியா இஜாஸ் குருதி தோய்ந்த முகத்துடன் நாளைய நகர்வுக்கான தடம் பதித்தல் பற்றி சிந்திக்கையிலும் நேற்றைய நினைவுகள்தான் என் ஈரமாகிப் போன மனதை முத்தமிடுகின்றன. பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட நஞ்சுகள் கொஞ்சம் கொஞ்சமாய் பெருப்பிக்கப்பட்டு இன்று காற்றுடைந்த பலூனாய்ப் பரவிப் போய்க் கிடக்கிறது. எதுமே செய்ய இயலாது போகையிலும் உண்மையின் உறைவிடம் இன்றும் அநாதரவற்ற நிலையில் இருக்கையிலும் அடிமைப் படுத்தப்பட்ட வாழ்வுக்கும் மீழ்தழின்றி தவிக்கும் பொழுதுகளிலும் மெழுகு பூசப்பட்ட வாழ்வுக்கான போர்கைள் கைகளில் சிக்கிக் கொள்ள எத்தனிக்கையிலும் […]

கனவுகள்

This entry is part 19 of 31 in the series 19 பிப்ரவரி 2012

அழகான சிறகு முளைத்து இதயம் அண்டவெளியில் பறக்கும்… அருகே ஒரு வானம் உருவாகும், உனக்கும் அது பிடிக்கும்… இந்த வெளிகளெல்லாம் கடந்து காட்சிகள் புலனாகும்… மொத்தத்தில் மனம் தூய்மையாகும்… காலம் அல்லாத காலம் உருவாகும்… காகிதமில்லாமல் புத்தகம் உண்டாகும்… மரம் செடி கொடிகளில்லாமல், உனக்காய் காற்றுக் கூட வரும் சுவாசிக்க… உடல் நொந்திடாமல் தென்றல் வீசிடும் இதமாக… மனிதரில் பல ரகம், உனக்காய் தனியொரு கிரகம் உருவாகும்… உள்ளம் தனி உருவமாக வெளியே வந்து தோன்றிடுமே… மொத்தத்தில் […]