தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

8 டிசம்பர் 2019

‘கவிதைகள்’ படைப்புகள்

ஓ பாரதீ

நீ வாழ்ந்த காலத்தில் நீ எட்டாத சிங்கை இன்று உன் எட்டயபுரமானது உன் தடித்த மீசையும் தலைப் பாகையுமே தமிழானது தமிழ் ஓர் அத்தியாயமாய் என் வாழ்க்கை தமிழே எல்லாமுமாய் உன் வாழ்க்கை ஏட்டுப் படிப்பின்றி இமயம் வென்றாய் காற்றைச் சுவாசித்து கவிதை செய்தாய் பிறப்பும் இறப்புமாய் எல்லார் வாழ்க்கையும் இறப்பே பிறப்பாய் உன் வாழ்க்கை என் கவிதைப் பயிருக்கு பொறுக்குவிதை தந்த ‘நறுக்’ [Read More]

கதறல்

கு.அழகர்சாமி ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது- வெள்ளை ஆகாயம் போல் வெண் துணி போர்த்திய உடல் ஏற்றப்படுகிறது அதில்- எல்லையற்ற அண்டவெளியில் எதிரொலிக்கிறது இனி இல்லாமல் போகும் அதன் நிழலின் கடைசிக் கதறல்- தன் தாயைப் பிடித்துப் போன பின் தெரு நாய்க்குட்டியொன்றின் கதறல் போல்- வேறு ஒரு குரலும் பகிர இல்லாமல். கு.அழகர்சாமி. (galagarsamy@yahoo.co.in ) [Read More]

பரிணாமம்

நிலாரவி மழைத் தாகம் கொண்டுவறண்டிருந்த நிலத்தில்அமிலமழை பொழியும்வானம் கருகிய பயிர்களின்இடுகாடுகளாய்நேற்றைய நிலங்கள் பூமியின் நுரையீரலில்புகைநிரப்பும்புகைப் போக்கிகள் நிலத்தின் வயிற்றில்ஆழமாய் தோண்டப்படும்சவக்குழிகள் சவக்குழிகளில் முளைத்து நிற்கும்கான்கிரீட் கூடுகள் கூடுகளில் குஞ்சு பொரிக்கும்பறவைகள் மரங்களைத் தின்றுவளரும்கான்கிரீட் கல்வனங்கள் [Read More]

வெளிச்சம்

மஞ்சுளா அலைக்கழிவாய் தொடங்கும் நகர வாழ்வில்  பயணம் தொடங்க முடியாமல்  சாத்தப்பட்டிருக்கும் கதவுகளின் வழியே  இடுக்கிக் கொண்டு பார்க்கிறது  அமைதியின் கண்கள்  பனி பொழியும் இரவொன்றில்  இருள் கவ்வும் பாதையில்  நகரின் மயான அமைதி ஒன்றை  வெளிச்சமிட்டு காட்டுகிறது நிலா           ——-மஞ்சுளா manjulagopi04@gmail.com [Read More]

நீக்கமற….

நீக்கமற….

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வீடுவந்து சேர்ந்த பிறகும் நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள் நைந்து தொங்க உட்கார்ந்த நிலையில் என் பாதங்கள் இருமாடிப்படிகளிலேறிச் செல்லும்நேரம் வலியெடுக்கும் [Read More]

கனவின் மெய்ப்பாடு

கனவின் மெய்ப்பாடு

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒளிக்கீற்றுகள் சில…. அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை. சில நீர்க்குமிழிகள்…. அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள் அங்கங்கே கொஞ்சம் அழிந்தும் கிழிந்தும்…. தெரியும் முகங்கள் எனக்குப் பரிச்சயமானவைபோலும் நெருக்கமானவை போலும் – அதேசமயம் நான் அறியாதனவாகவும்…. அமர்ந்துகொண்டோ நின்றுகொண்டோ அல்லது நீந்திக் கொண்டோ [Read More]

நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நித்திரை கலைந்த கையோடு மருத்துவமனையின் நீண்ட தாழ்வாரத்தில் காலெட்டிப்போட்டு கையுறைகளை மாட்டியபடி நான் அதற்கு சிகிச்சையளிக்கிறேன் என்பாரும் செயற்கை சுவாசமாகிறேன் என்பாரும் நான் அதன் உலகை விரிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் அதன் பார்வையைத் தெளிவுபடுத்துகிறேன் என்பாரும் நான் தான் அதற்கு மொழியைப் பழக்கப்படுத்தினேன் என்பாரும் நான் தான் [Read More]

கிலுகிலுப்பைகள்

கு.அழகர்சாமி அந்தி வேளையில் ஒளிரும் கலர்க் காகிதக் கொம்புகளைத் தலையில் தரித்து ஒரு விநோத விலங்கு போல் தலையாட்டி வேடிக்கை பல  காட்டி கிழக் கிலுகிலுப்பைக்காரனொருவன் கிலுகிலுப்பை ஒலித்து, கரையைச் சதா காதலில் அழைக்கும் அலைகளெனப் பல்கும் கிலுகிலுப்பை ஒலிகளில் காண்பவரை விளித்து – பரிந்து அலைகள் தாலாட்டும் கடற்கரையில் கிலுகிலுப்பை ஒன்று கூட விற்க முடியாமல்- ஆனால், [Read More]

கனவுகளற்ற மனிதர்கள்

மஞ்சுளா  ———————————————— காட்டு மரங்கள்  தன்னிச்சையாய் பாடிக்கொண்டிருக்கின்றன  புல் வெளிகளற்ற  வலை தளங்களில்  மேயும் ஆடுகள்  இரவு பகலற்ற உலகத்தை  தனதாக்கி கொண்டு  மனித வாழ்வின்  அர்த்தமுள்ள பொழுதுகளை பகடி செய்கின்றன  இசைத்தட்டுக்களோடு  பாடிப் பறந்த  வண்ணத்து பூச்சிகளை  காணவேயில்லை  நிசப்த வெளியில்  எல்லா [Read More]

கவிதை

என் தாய்நிலத்தைக் காணவில்லை என்கிறேன்.கிணற்றைக்காணவேயில்லை என்கிறாய்.சிறுகச் சிறுகச் சேகரித்து பூட்டன் வாங்கியநிலத்தைகொஞ்சம் கொஞ்சமாகஎல்லைகள்அயலவனால்சுருங்கிப்போக,கிடைப்பதே போதுமென நினைக்கையில்சப்பாத்துக்கால்கள்தங்களது எனஉயிலுடன் வந்து நின்றனர்..நான் என் செய்வேன்..இப்போது சொல்..நிலமா? கிணறா??முல்லை அமுதன்16/09/2019 [Read More]

 Page 4 of 252  « First  ... « 2  3  4  5  6 » ...  Last » 

Latest Topics

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தவிப்பு நாற்புறமும் வியூகம் அமைத்துத் [Read More]

இரு குட்டிக் கவிதைகள்

1. அறுப்புப் பட்டறையில்தான் அந்த [Read More]

தளை

கு. அழகர்சாமி பட்டாம் பூச்சி படபடத்து வரும்- [Read More]

10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து

                       தலைவன் தான் [Read More]

Popular Topics

Archives