புலித்தோல்

This entry is part 4 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

வளவ. துரையன் என் நட்புக் கோட்டைக்குள்சில துரோகிகள்ஊடுருவி விட்டார்கள்.பசுத்தோல் போர்த்திய புலிகள்எல்லாம் அந்தக் காலம்.இப்பொழுதுபுலித்தோலைப் போர்த்தியபசுக்கள் உலவுகின்றன.ஆனால்பசுக்களின் பார்வையும்பண்பும் கொண்டதாகப்பச்சைப்பொய் பேசுகின்றன.பார்வையில் பாசிபோல்தெரிந்தாலும் விலக்கினால்பாதாளத்தில் சுறாக்கள்.குளக்கரையில் கசிவுஏற்படாமல் காப்பதிலும்கோட்டைச் சுவர்களில்விரிசல் விழாமல்பார்த்துக் கொள்வதிலும்தான்வாழ்க்கையின்சாமர்த்தியம்இருக்கிறதாம்.

மழையுதிர் காலம்

This entry is part 5 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா நாள் காட்டியில் அக்னி நட்சத்திரத்தின் முடிவை பற்றின தீர்மானங்களை வெயில் கன்னி ஒதுக்குவதை போல் தினசரியில் தொலைகாட்சியில் வானொலியில் தோன்றும் நிபுணர்கள் மழை பெய்யும் சாத்தியத்தை பற்றிய முன்னறிவுப்புகளை அலட்சியமாக ஒதுக்கும் வானம் நனைய ஆசைப் படும் குழந்தைகளிடம்  கருணை கொண்டு கொஞ்சம் மழையை உதிர்த்து விட்டுப் போகிறது தானாக  சில சமயங்களில்

மழை

This entry is part 6 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா  கொட்டுகிறது எனது பால்கனியில் மழை வெளியில் துருத்திக் கொண்டிருக்கும்  ஆஸ்பெஸ்டாஸ் பலகையின் மீது செல்லம் கொஞ்சிக் கொண்டு பாவம்! தெரியும்  அதற்கும் காலம் கடந்த பின்  அன்பை மதிக்கத் தெரியாதவர் மேல் அன்பை சொரிவது தன்மானத்திற்கிழுக்கென்று 

நாட்டுப்பற்று 1

This entry is part 7 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா நிறமிழந்த ‘பாலிஸ்டர்’ சட்டை அணிந்த அவன் அந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்தான் அடுக்கியிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை பிரித்துப் போட்டான் எல்லோரும் நல்லாடைகளில் கூடிய பின் சிறுகொடியும் குண்டூசியும் தந்து  தானும் ஒன்று குத்திக் கொண்டான் பெருமையுடன் புதுக் கதர் சட்டை அணிந்திருந்த குடியிருப்பு சங்கத்தின் காரியதரிசிக்கு   கடைசி நிமிடத்தில் தான் சாக்லெட் பாக்கெட் எடுத்து வர மறந்தது நினைவுக்கு வர   ஓடினான் இவன் நிலவறையிலிருந்த  சங்க அலுவலகத்திற்கு  திரும்பு முன்  முடிந்துவிட்டிருந்தது  கொடியேற்றம் […]

 நட்பு 2 

This entry is part 4 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா நீ இல்லாமல் நான் படும் பாட்டை கவிதையாக வடித்து என்னை வதைக்கும்  தாபத்தை தீர்க்க முயன்றேன் தாபத்தின் அனல் என்னவோ குறையவில்லை  மேலதிகமாக  அந்த ‘நீ’  யாராக இருக்கும் என்று என் முகத்தை பார்த்து  அனுமானிக்க முயற்சிக்கும் சிலரும் அதை பற்றி வம்பு பேசி மகிழும் சிலரும் பொறுக்காமல் என்னிடம் ரகசியமாக கேட்டே விடும் சிலருமாக எனது நட்புலகம் சிறுத்துக் கொண்டிருக்கிறது  தினம் தினம்

நட்பு 1

This entry is part 2 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா உறவின் மேல் கொட்டிய பாசம் பாறையில் வீழ்ந்த நீராய் ஓடிவிட்டது துணையின் மேல் பொழிந்த காதல் பாலையில் வீழ்ந்த நீராய் காய்ந்துவிட்டது ஆரவாரமில்லாமல் தோன்றின நட்புக்கள் அவற்றில் கணக்குகளில்லை நான் கொடுத்தது நினைவிலில்லை  இருப்பது நினைக்கும்போதேல்லாம் நிறைந்து போகும் நெஞ்சம்தான்

வலசையில் அழுகை

This entry is part 5 of 6 in the series 23 ஜூலை 2023

—வளவ. துரையன் நான்கு கரைகளிலும்  நாணல்கள்  படிக்கட்டுகள் இல்லையெனினும்  சாய்தளப்பாதை. ஆள்குளிப்பதை யாரும் அறியாத அளவிற்கு கண்களை மறைக்கும்  காட்டாமணக்கு. குட்டையோ அல்லது குளமோ  எப்பெயரிட்டு அழைத்தாலும்  எல்லார்க்கும் பொதுவானது. மாடுகளை மேயவிட்டபின்  மத்தியான வேளையில்  மேய்ப்பவர்களுக்கு  அதுதான் சொர்க்கம். இப்போது நீவரும் பாதையெல்லாம்  அடைபட்டுப் போனதால்  நீரும் வழி மறந்து போயிற்று. பாதிக்குமேல் தூர்ந்துவிட்டதால்  பயனற்றுக் கிடக்கிறது. ஆண்டுதோறும் வரும்  வலசைப் பறவை  மட்டுமிங்கே ஓரமாக  உட்கார்ந்து அழுதுகொண்டிருக்கிறது

வழி

This entry is part 4 of 6 in the series 23 ஜூலை 2023

வளவ. துரையன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே  மறைந்து போகின்ற  பச்சைக் கிளிபோல்தான் இது. இரு கைகளையும்  குளம்போல் குவித்துவைத்து  ஏந்தினாலும் விரலிடுக்குகளின்  வழியே கசியும் போகும்  நீர்தான் இது. இறுதியில் ஓர் இலை கூட  இல்லாமல் வீணே  பட்டமரமாய் நிற்கிறது. நன்றாக ஆடிக்கொண்டிருக்கும்  நல்ல ஊஞ்சலும்  நின்றுதானே ஆக வேண்டும். உள்ளே வந்துவிட்ட  பட்டாம்பூச்சி வெளிச் செல்ல  மூடப்பட்ட சன்னல்களில்  முட்டி முட்டிப் பார்ப்பதைப்போல  முயல்கிறாய் நீ. அதை அதன் போக்கிலே  அவ்வப்போது விட்டுவிடு.  வழிகிடைக்கும்

அப்பால்

This entry is part 2 of 6 in the series 23 ஜூலை 2023

ஆர் வத்ஸலா உன் மௌன விலகல் கணக்கில்லா காலம் என்னை வதைத்தது துன்பத்தை துரத்த கோபத்திற்காக பிரார்த்தித்தேன் ஒவ்வொரு நொடியும் கோபம் செவி சாய்க்க மறுத்தது கோபத்தின் மேல் கோபமா கொள்ள முடியும்? வதைத்து வதைத்து  அலுத்தது துன்பம் பழக்கப்பட்ட துன்பம் விலகுகையில் விவரிப்புக்கு‌ அப்பாற்பட்ட பீதி சூழ்ந்தது அதனிருந்தும் மீண்டாகி விட்டது உன் மேல் கோபமில்லை வருத்தமில்லை புகாரில்லை உனக்காக  முன்பு போல பிரார்த்திப்பதில்லை யாரையும் நான் சபிப்பதில்லை உனை நினைக்கையில் எனக்கு எந்த உணர்வுமில்லை  […]