தினம் என் பயணங்கள் -9

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

மனம் விசித்திரமானது, அதனைத்​ தேடி வந்து தா​ங்கி​த்​ தாபரிக்கும் எண்ணங்கள் பொறுத்து அதன் தொடர் இயக்கமானது நிகழ்கிறது. அந்த எண்ணம் எங்கிருந்து வருகிறது, எங்கே போகப் போகிறது. மனம் தனக்குள்ளே எண்ணங்களை தோற்றுவித்து தோற்றுவித்து பின் அழித்துக் கொள்கிறதா? மனம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதற்கு உருவமும், நிறமும், மணமும் இருக்கிறதா? தொடர்க் ​கேள்விகளின் அடுக்கடுக்கான பயணத்தோடே இன்றைய என் பயணமும் தொடர்கிறது.   “இந்த பிளாஸ்டிக் டப்பாவை மாத்திட்டுவா, இப்படியா ஏமாத்துவாங்க, எங்களை ஏமாத்தினா பரவாயில்ல, […]

தொடுவானம் – 8. கடல் கடந்த தமிழன்

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

  ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அடுத்த சிறப்பான பள்ளியாக விக்டோரியா உயர்நிலைப் பள்ளி திகழ்ந்தது. அதில் ஆனந்தன் மாணவன். கேன் எங் செங் பள்ளியில் சபாபதி பயின்றான். உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியில் கோவிந்தசாமி மாணவன். இவர்கள் மூலமாக முதலில் எங்கள் நான்கு பள்ளிகளுக்கிடையில் சிறப்பான பட்டிமன்றம் நடத்தி சரித்திரம் படைத்தோம். அதன் செய்தியை தமிழ் முரசில் வெளியிட்டோம். அதைப் பார்த்த மற்ற ஆங்கிலப் பள்ளி தமிழ் மாணவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டனர்.           அவ்வாறு மாணவர்களிடையே […]

நீங்காத நினைவுகள் 39

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

கவிஞர் வைரமுத்து அவர்கள் எங்கள் மாவட்டக்காரர் என்பதில் எல்லாருக்கும் இருப்பது போல் எனக்கும் பெருமை உண்டு.  அவர் மதுரைப் பக்கத்துக் கொச்சைத் தழிழில் படைத்த கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப் போர் ஆகியவை அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் இனங்காட்டின என்பதில் கடுகளவும் ஐயமில்லை. அவர் ஊரான வடுகபட்டி எங்கள் ஊருக்கு மிக அருகில் உள்ள ஊராகும். போற்றுதலுக்குரிய இந்நாவல்களை வைரமுத்து படைப்பதற்குப் பல நாள்களுக்கு முன்னால் கவிஞர் அமரர் வாலி அவர்களைப் பற்றிய கட்டுரை […]

கொங்கு மணம் கமழும் கவிஞர் சிற்பியின் படைப்புகள்

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

பேரா. க. பஞ்சாங்கம். புதுச்சேரி. 90030 37904   வேறெந்த இலக்கிய  வகைகளை விடவும் கவிதை அதிகமாக, அதை எழுதுகின்றவரின் சுயம் சார்ந்தது. அந்த எழுதுகின்றவரின் சுயம் வேறெதையும் விடக் கூடுதலாக தான் பிறந்து வளர்ந்த மண் சார்ந்தது. ஏனெனில் மண் உற்பத்தி செய்த உச்சக்கட்ட உயிர் என்றால் மனிதனைத்தான் சொல்ல வேண்டும். மனிதர்களுக்குள்தான் மண்ணிலிருந்து  விளையும் அத்தனையும் ஒன்றுவிடாமல் ஒன்றாய் கூடிக் கிடக்கின்றன. ஓயாமல் வினைபுரிந்த  வண்ணம் இருக்கின்றன. இதன் விளைவாக மனிதர்களும் படைப்பூக்கம் பெற்று, […]

”பங்கயக் கண்ணான்”

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

  உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்      செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்      செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்      தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்      எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்      நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!      சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்      பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.  ”பங்கயக் கண்ணான்”                                       வளவ. துரையன் உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 27

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

ஜனவரி 1, 2004 இதழ்: முன்னேற்றமா சீரழிவா- அ.முகம்மது இஸ்மாயில்- நபி மொழி- கல்வி ஆண் பெண் இரு பாலாருக்குமே கடமையாகும். மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமை போன்றே கணவன் மீது மனைவிக்கும் உண்டு. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20401015&edition_id=20040101&format=html ) எனக்குப் பிடித்த கதைகள் -92- மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் “கேதாரியின் தாயார்”- பாவண்ணன்- அந்தணர் குல வழக்கப்படி ஒரு விதவைக்கு மொட்டையடித்து வெள்ளைப் புடவை உடுத்தச் செய்யும் பாரம்பரியத்தை எதிர்க்கும் கதை. (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60401011&edition_id=20040101&format=html ) ஜனவரி […]

வாழ்க நீ எம்மான்.(1 )

This entry is part 3 of 23 in the series 23 மார்ச் 2014

1.எந்த சேவையும் செய்வதற்கு முன்பாகத் தன்னை அந்தச்சேவை செய்யத்தகுதியுடையவனா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும். 2. ஒரு கோழை எந்த உபதேசமும் செய்வதற்கு அருகதை அற்றவன். 3.இந்திரனுக்கும் லட்சுமணனுக்கும் ஒரே திறமையும் ஆற்றலும் இருக்க, இந்திரன் ஏன் தோற்றுப்போனான்? இந்திரனுக்கு அறம் துணைக்கு வரவில்லையே ஆகத்தான். 4.பூசாரிகளே மொத்த பேராசைக்கும் உபயதாரர்கள். 5.விசித்திர வார்த்தைகளுக்கு அலைவதும் அவற்றின் உச்சரிப்புகளைச் சொல்லியே காலம் கடத்துவதுமா கற்றவர் வாழ்க்கை. 6.1914 ஆம் ஆண்டு இந்தியாவில் காலராவும் பிளேக்கும் விழுங்கிய மனித உயிர்கள் 46,49,663 […]

அம்மனாய்! அருங்கலமே!

This entry is part 23 of 23 in the series 16 மார்ச் 2014

  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். இப்பாசுரத்தில் பெண்களெல்லாம் கிருஷ்ணனைக் கண்டு மயங்கும்போது, அவன் தன்னைக் கண்டு மயங்கும்படியான பெருமை கொண்ட ஒருத்தியை எழுப்புகிறார்கள். பல பிள்ளைகள் படிக்கும்போது ஒருவன் மட்டும் திறமையானவாய் இருப்பது போலே எல்லாப் […]

இருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்

This entry is part 2 of 23 in the series 16 மார்ச் 2014

முனைவர் பா. ஆனந்தகுமார், எம்.ஏ., எம்ஃபில், பிஎச்.டி., தமிழ்ப்பேராசிரியர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302. தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போன்று கொங்கு நாடும் தனித்த சமூக, அரசியல், பண்பாட்டு வரலாறுடையதாய்த் திகழ்கின்றது. கொடுமணலும் நொய்யலாறும் கொங்கு நாட்டின் பழமையைப் பறைசாற்றுகின்றன. பழந்தமிழிலக்கியங்கள் தொட்டே கொங்குநாடு பற்றிய இலக்கியப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன. பெருங்கதை, சீவக சிந்தாமணி முதலான பெருங்காப்பியங்களிலும் வையாபுரிப்பள்ளு முதலான சிற்றிலக்கியங்களிலும் கொங்கு நாட்டைக் குறித்துப் பதிவுகள் உள்ளன. […]

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை.

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

          -ஷாலி   தனது நீங்காத நினைவு-37 ல் சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் மாராப்பு எழுத்தாளர்களைப் பற்றி மடல் எழுதியிருந்தார்.இன்றைய வணிக பத்திரிக்கைகள் அனைத்தும் பெண்களை ‘தன’லட்சுமியாகப் பார்த்தே பணம்  பண்ணுகின்றனர்.அன்றைய கால புலவர்கள் மங்கையின் அழகை வர்ணித்து கவி பாடி இலக்கியம் படைத்தனர்.இன்று பெண்களின் சதையே ஊடக சந்தையில் நிறுக்கப்படுகிறது.கூடுதல் எடைக்கு கூட்டமும் அதிகம்.   “வீதியிலே நீ நடந்தாள் கண்ணு எல்லாம் உன் “மேலே”தான்.”…என்று பாடல் தான் நினைவுக்கு வருகிறது.இதை நன்கு புரிந்து கொண்ட ஊடக […]