author

கைமாறு

This entry is part 3 of 4 in the series 5 ஜனவரி 2020

என் ஓவியங்களுக்கு வண்ணங்களாய் வந்தவர்க்கு வேரறியாக் காலத்தில் நீர் தந்த கரங்களுக்கு படரத்துடித்தபோது கூரையாய் ஆனவர்க்கு வாழ்க்கைப் பாதையில் எழுபதைத் தாண்ட செருப்பாய்த் தேய்ந்தவர்க்கு கூவி விற்ற பொருளுக்கு காசு தந்தவர்க்கு வியர்வை காய விசிறி விட்டவர்க்கு வாழ்க்கைச் சிலேட்டில் தப்பாய் எழுதியதை யாருமே அறியாமல் கண்ணீரால் அழித்தவர்க்கு என் முட்களை மன்னித்தவர்க்கு சூரைக் காற்றில் இரும்புக் கோட்டையாகி என்னை இடியாமல் காத்தவர்க் கெல்லாம் என் கைமாறு என்ன? முற்றிச் சாய்ந்த நாற்று மண்ணுக்கும் மழைக்கும் தரும் […]

அம்மா

This entry is part 2 of 10 in the series 29 டிசம்பர் 2019

மனுநீதிச் சோழனாய் அந்த மக்கட் தலைவன் அவர் வீட்டில் மனுக் கொடுக்க மக்கள் கூட்டம் ஒப்புதல் பெற ஆவணங்களுடன் அதிகாரிகள் இதோ மின்னல் ஒன்று மண்ணுக்கு வந்ததுபோல் அந்தத் தலைவன் வருகிறான் அந்த வருகையால் குடில் கோயிலாகிறது வீட்டுக்குள்ளிருந்து அம்மாவின் குரல் ‘எவ்வளவு பேரு காத்துக்கிட்ருக்காங்க எங்கடா போனே’                                 அமீதாம்மாள்

பேச்சாளர்

This entry is part 2 of 7 in the series 24 நவம்பர் 2019

‘வயது ஏற ஏற வயிறை மற ருசிகள் துற முடியும் இதுவெனில் விதியும் உனக்கு வேலைக்காரனே’ என்று சொற்பொழிவாளர் சொடுக்கிய மின்னலில் இடிகளாக கரவொலிகள் அந்தப் பேச்சாளருக்கு கொழுப்பு இனிப்பு அழுத்தம் என்று அத்தனையும் உண்டு பேச்சு முடிந்தது விருந்து அடுத்தது ஆடு,கோழி,மீன்,ஊடான் காடை,நண்டு என எல்லாமுமே அவர் துறக்க வேண்டிய ருசிகள் சட்டை உயர்த்தினார் இன்சுலின் இறக்கினார் அடித்து நொறுக்கி மென்று இறக்கினார் மிச்சம் ஏதுமின்றி அமீதாம்மாள்

கொஞ்சம் கொஞ்சமாக

This entry is part 3 of 7 in the series 17 நவம்பர் 2019

என்னைக் கொன்று கவிதை ஒன்று செய்தேன் ஐயம் திரிபறச் சொன்னால் ஐம்பது பேரைக்கூட அக்கவிதை எட்டவில்லை ஆங்கிலத்தோடு அழகுதமிழ் பின்னி அந்த ஹிப்ஹாப் தமிழன் ஆடிப்பாடிய கவிதை ஆறே நாளில் ஆறு லட்சத்தைத் தொட்டுவிட்டது அமீதாம்மாள்

முதுமை

This entry is part 5 of 10 in the series 10 நவம்பர் 2019

போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் கைகுலுக்களால் கோடாகிப்போன ஆறு வற்றிவிட்டதால் இனி வாத்துக்கள் வராது நீண்ட நாடகத்தின் இறுதிக் காட்சி இலையுதிர் காலம் மட்டுமே இனி எதிர்காலம் காதல்கள் சொன்ன மரம் இனி விறகு மறதி இருளின் மையம் தீப நினைவுகள் மரணம் நோய்களோடு போராடும் மாத்திரை வாழ்க்கை இறந்தகாலம் மட்டுமே பேசும் பெருங்காய டப்பா வானவில் மறந்த வானம் தோகையே மீதியாய் கரும்பு அம்புகள் சிறைப்பிடித்த வில் கடலை இழந்த கரை மனித நிலாவின் […]

நாளைய தீபாவளி

This entry is part 2 of 9 in the series 27 அக்டோபர் 2019

கேம்பல் லேன் கும்பல் லேனாவது இன்றுதான் கலைஉலகச் சிகரங்கள் இலை விரிக்கும் நாள் இன்றுதான் நகரத் தெருக்கள் நகை அணியும் நாள் இன்றுதான் மனிதரோடு வீடுகளும் புத்தாடை அணிவது இன்றுதான் சோப்பு வேண்டாம் எண்ணெய்க் குளியல் இன்றுதான் தீயின் தீண்டலில் மத்தாப்பூச் சிரிப்பது இன்றுதான் முறுக்குரல்கள் சுறுசுறுப்பாவதும் இன்றுதான் இனி பறக்கும் டாக்‌ஸியில் நானூறடி உயரத்தில் கொண்டாடுவோம் நாளைய தீபாவளியை அமீதாம்மாள்

ஓ பாரதீ

This entry is part 2 of 9 in the series 6 அக்டோபர் 2019

நீ வாழ்ந்த காலத்தில் நீ எட்டாத சிங்கை இன்று உன் எட்டயபுரமானது உன் தடித்த மீசையும் தலைப் பாகையுமே தமிழானது தமிழ் ஓர் அத்தியாயமாய் என் வாழ்க்கை தமிழே எல்லாமுமாய் உன் வாழ்க்கை ஏட்டுப் படிப்பின்றி இமயம் வென்றாய் காற்றைச் சுவாசித்து கவிதை செய்தாய் பிறப்பும் இறப்புமாய் எல்லார் வாழ்க்கையும் இறப்பே பிறப்பாய் உன் வாழ்க்கை என் கவிதைப் பயிருக்கு பொறுக்குவிதை தந்த ‘நறுக்’ கவிஞனே கொஞ்சம் தள்ளி நில் உன் தாளலடியில்தான் என் தன்மானம் தேடுகிறேன். […]

கொடும்பம்

This entry is part 3 of 7 in the series 26 மே 2019

கட்டிலின் இடது விளிம்பில் அவள் வலது விளிம்பில் அவன் முதுகு நோக்கி முதுகு உரையாடலெல்லாம் உலோகத் துண்டோடுதான் அன்று அவன் சொன்ன சேதி ‘இன்று நம் திருமண நாள்’ அவளின் பதில் ‘என்றுமே திரும்பாத நாள்’ நடுவில் கிடந்த குழந்தை கேட்டது ‘என்னெ என்ன செய்யப் போறீங்க’ அமீதாம்மாள்

புதுப்புது

This entry is part 6 of 14 in the series 19 மே 2019

புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு புதிதுமுளைகள் புதிது பூக்கள் புதிதுபுணர்வுகள் புதிது உதயம் புதிதுஉணர்வுகள் புதிது மழை புதிதுமௌனம் புதிது ஊடல் புதிதுகூடல் புதிது காதல் புதிதுகாமம் புதிது உயிர் புதிதுஉறவுகள் புதிது சிந்தனை புதிதுசித்திரம் புதிது அருவி புதிதுஅலைகள் புதிது தென்றல் புதிதுதெம்மாங்கு புதிது இந்த நொடியில் இதயம்துடிப்பது புதிதுஇரத்தம் துளிர்ப்பதும் புதிது தோற்றங்கள்புதிதானதால்…… தொடக்கங்களும்புதிது!புதிது!!புதிது!!! அமீதாம்மாள்

ஊனம்

This entry is part 3 of 9 in the series 10 மார்ச் 2019

கருவண்டு வாசிக்கும் கவிதை ரோஜாக்கள் குளிரெடுக்கும் மண்ணைப் போர்த்திவிடும் புல்வெளிகள் வந்தாரை வணங்க வேலி தாண்டும் அரளிகள் இலைமறைப் பிஞ்சால் ஏமாறும் அணில்கள் கொழுந்து மேடையில் உலாவரும் பூச்சிகள் காய்க்கரம் நீட்டிக் கும்பிடும் முருங்கைகள் வேடிக்கை பார்க்கும் தென்னங் குலைகள் ஊனமற்ற இயற்கை சூழ இல்லம் ஒன்று நடுவே அது என்ன இல்லமாம்? ‘ஊனமுற்றோர் இல்லம்’ அமீதாம்மாள்