author

புத்தகங்கள்

This entry is part 16 of 22 in the series 1 ஏப்ரல் 2018

நீலச்சேலை வானில் சிவப்பு முந்தானை காணப்படாமலேயே கரைந்துவிட்டது விமானப் புகைவில் காணப்படாமலேயே கலைந்துவிட்டது அழகான அந்தப் பூ ரசிக்கப்படாமலேயே உதிர்ந்துவிட்டது கன்னியாகவே அவள் வாழ்க்கை கழிந்துவிட்டது அழகான கோலம் காணப்படாமலேயே சிதைந்துவிட்டது சேலத்து மல்கோவா ருசிக்கப்படாமலேயே அழுகிவிட்டது பொத்திப் பொத்தி வைத்த விக்டோரியா ரூபாய் தொலைந்துவிட்டது பொம்மை அழுகிறது விளையாட குழந்தை இல்லையாம் ‘கலையாமல் கரையாமல் உதிராமல் தொலையாமல் அழுகாமல் அழாமல் காத்திருக்கிறேன் ஒருநாள் புரட்டப்படுவேன்’ நம்பிக்கையுடன் புத்தகம் அமீதாம்மாள்

ஒன்றுமில்லை

This entry is part 1 of 15 in the series 18 மார்ச் 2018

கவிதை பிறக்குமுன் தாளில்‘ஒன்றுமில்லை’ காதலைச் சொல்ல சொற்கள் ‘ஒன்றுமில்லை’ மதிப்பைக் கூட்டும் பூஜ்யங்கள் ‘ஒன்றுமில்லை’ அம்மா இன்று இல்லை அந்த ‘ஒன்றுமில்லை’ யில் அவர் வாழ்கிறார் வாழ்க்கை வரவு செலவில் மீதம் ‘ஒன்றுமில்லை’ சமநிலையில் தராசு தட்டுக்களில் ‘ஒன்றுமில்லை’ இமய யாத்திரைகள் இலக்கு ‘ஒன்றுமில்லை’ மரணத்தில் புரிகிறது ‘ஒன்றுமில்லை’ ‘ஒன்றுமில்லை’ புரிந்தது மனிதன் புத்தனானான் ஆகாயம் என்பது ‘ஒன்றுமில்லை’ யே புயல்களின் கர்ப்பம் ‘ஒன்றுமில்லை’ உலகம் பிறந்தது ‘ஒன்றுமில்லை’ யில் விதையின் விதை ‘ஒன்றுமில்லை’ அவர் இப்போது […]

தமிழ்

This entry is part 1 of 10 in the series 11 மார்ச் 2018

தமிழின் தலைமையில் தமிழ்மொழி விழா ‘என் புகழ் காக்க என்னென்ன செய்தீர்’ கேட்டது தமிழ் ‘வானவில்லை நிமிர்த்தி நட்சத்திரம் பறிப்போம் கடல் சேர்ந்த நதிகளை மலைகளுக்கு ஓட்டுவோம்’ சொன்னார் மாணவர் ‘நான் தாய்மை பாடினால் இரத்தம் பாலாகும்’ சொன்னார் கவிஞர் ‘செயலியாய் ஒரு சாவி செய்தேன் எந்த மொழியையும் அது தமிழில் திறக்கும்’ சொன்னார் கணியர் ‘நான் அன்னம் தமிழ்ப் பாலில் கலந்துவிட்ட அந்நிய நீரைப் பிரிப்பேன்’ சொன்னார் சொல்வேந்தர் ‘நான் ஆயுத எழுத்து என் மூன்று […]

 மரங்கள்

This entry is part 12 of 20 in the series 25 பெப்ருவரி 2018

  தலைகீழாய்ச் சுவாசிக்கும் நுரையீரல்கள்   மரங்களை வாழ்த்த வானத்தை உலுக்கினான் இறைவன் உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள்   மொத்த உடம்பும் சிபியின் தசைகள்   மரங்கள்  அஃரிணையாம் போதிமரம் ?   சிரிக்கப் பூக் கேட்டது அழத்  தேன் கேட்டது   தான் பெற்ற இன்பமே வையம் பெறும் மழை   அறையும் அரிவாளுக்கு மறு கன்னம் மரப்பிடி   மரத்தை விழுங்கமுடியாது கடல்   கூடுகட்டும் கிளிக்கு ஆரத்தி சுற்றவே இலைகள்   முல்லைக்கு […]

வெளிநாட்டு ஊழியர்கள்

This entry is part 6 of 13 in the series 4 பெப்ருவரி 2018

பிறந்த மண்ணின் பெருமையை வளரும் மண்ணில் காட்டும் பிடுங்கி நடப்பட்ட நாற்றுக்கள் இவர்கள்   தனக்கு மட்டுமின்றி எல்லார்க்குமாய்ச் சேர்க்கும் தேனீக்கள் இவர்கள்   எங்கிருந்தோ அள்ளிவந்து – நீரை இங்கு வந்து பொழியும் மேகங்கள் இவர்கள்   யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனாரை பொய்யாக்காதோர் இவர்கள்   குளம், ஏரி, நதி, கடல் பெயர்கள்தான் வேறு தண்ணீராக இவர்கள்   ஒட்டுக் கன்றுகளில்தான் உயர்ந்த கனிகளும் உயர்ந்த பூக்களும் ஒட்ட வந்தவர்கள் இவர்கள். […]

வாழ்க நீ

This entry is part 7 of 13 in the series 4 பெப்ருவரி 2018

    சொன்னதைக் கூட்டிக் கழித்து நீ சொன்னதில்லை   இரகசியங்களை என் அனுமதியின்றி நீ அவிழ்த்ததில்லை   நீ இல்லாவிட்டால் ஊனமாகிவிடுகிறேன் என் உடல் உறுப்பு நீ   பசித்தால் மட்டுமே புசிக்கிறாய்   சொடுக்கும் நேரத்தில் சிரிக்க அழ வைக்கிறாய்   உன் சாட்சி போதும் உலகம் கைகட்டும்   நான் கண்கலங்கும்போது என் கைக்குட்டையாகிறாய்   மாயக் கண்ணாடி நீ ஆசையைச் சொன்னால் காண்பிக்கிறாய்   கண்ணகியின் காற்சிலம்பாய் எல்லார் கையிலும் நீ […]

பொங்கல்

This entry is part 10 of 10 in the series 21 ஜனவரி 2018

  மூன்று பாகத்தில் மொத்த வாழ்க்கை   விதைத்தல் வளர்த்தல் அறுத்தல்   கருவை விதைத்து கற்பனை வளர்த்தால் கலைகள் அறுவடை   அறத்தை விதைத்து பொருளை வளர்த்தால் இன்பம் அறுவடை   நல்லறம் விதைத்து இல்லறம் வளர்த்தால் மழலை அறுவடை   உண்மை விதைத்து உழைப்பை வளர்த்தால் ஊதியம் அறுவடை   அன்பை விதைத்து பாசம் வளர்த்தால் சொந்தங்கள் அறுவடை   நன்னெறி விதைத்து நடுநிலை வளர்த்தால் நல்லாட்சி அறுவடை   நீர்த்துளி விதைத்து முகில்கள் […]

நல்ல நண்பன்

This entry is part 10 of 13 in the series 10 டிசம்பர் 2017

நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான் எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது ஒரு பெண் எனக்குச் சொல்வதும் அவனுக்குச் சொல்வதும் ஒன்றே எனக்கு ஒன்று ருசி என்றால் அவனுக்கும் அது ருசியே இப்படித்தான் நானென்று நான் சொல்வதும் என் நண்பன் சொல்வதும் ஒன்றே புறத்தை மட்டும் சொல்பவன் நண்பனல்ல அவன் அகத்தையும் சொல்வான் தப்பான பாதையில் அவன் முள் நல்ல பாதையில் அவன் புல் இன்று நல்ல பழம் நாளை […]

வாழ்க்கைப் பந்தயம்

This entry is part 3 of 11 in the series 3 டிசம்பர் 2017

தடை தாண்டும் ஓட்டமாய் வாழ்க்கைப் பந்தயம் கடந்த தடைகள் கணக்கில்லை துல்லியம் தொலைத்த விழிகளுக்கு துணைக்கு வந்தது கண்ணாடி ஒலிகளைத் தொலைத்த செவிகளுக்கு துணைக்கு வந்தன பொறிகள் ‘லப்டப்’பில் பிழையாம் ‘வால்வு’ வந்ததில் வாழ்க்கை வந்தது சில எலும்புகளின் வேலைக்கு எஃகுத் துண்டுகள் இனிப்போடும் கொதிப்போடும் இருந்தே போராட மருந்துகள் நீள்கின்றன தடைகள் தள்ளாடும் கால்களைக் கவ்வுகிறது பூமி புதைகிறேன் எரியப்பட்ட கல் மூழ்கிவிட்டது வட்ட வட்ட அலைகள் மறைந்துவிட்டது அசையாமல் கிடக்கிறது குளம் அமீதாம்மாள்

உணவு மட்டுமே நம் கையில்

This entry is part 2 of 15 in the series 5 நவம்பர் 2017

    ஊறவைத்த பச்சைக் கடலை 5 இரவே ஊறவைத்த மல்லிக் கசாயம் ஒரு குவளை 10000 காலடி நடை 3 இட்லி கொழுப்பகற்றிய பால் ஒரு குவளை இப்படியாகக் காலை   3 சப்பாத்தி உருளையில்லாக் கறி கொஞ்சம் காய்கறி எப்போதாவது ஒரு துண்டு மீன் அல்லது கோழி இப்படியாகப் பகல்   இரண்டு சப்பாத்தி கொஞ்சம் தயிர் ஒரு துண்டு ஆப்பிள் படுக்குமுன் ஒரு சிட்டிகை கடுக்காய்த் தூள் வயிற்றுப்புண் வராதாம் இப்படியாக இரவு […]