author

பிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு

This entry is part 13 of 13 in the series 25 அக்டோபர் 2020

கே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர், நமக்கெல்லாம் தெரிந்த திறமையான மொழிபெயர்ப் பாளர், மனிதநேயவாதி டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன் இன்றிரவு (Saturday 24.10.2020) சுமார் 9.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். ஒரு மனிதராக, மொழிபெயர்ப்பாளராக கே.எஸ். என்று அவருக்கு நெருங்கியவர்களால் அன்போடு அழைக்கப்படும் முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியனை அறிந்தவர்களுக்கு எல்லையற்ற வருத்தம் தரும் செய்தி இது. கடந்த ஒரு மாதமாகவே அவருக்கு உடல்நிலை ஒருபோலில்லை. ஆனாலும் முடிந்தபோதெல்லாம் உற்சாகமாக சமீபத்தில் மொழிபெயர்த்துக்கொண்டி ருக்கும் பிரதிகளை மொழிபெயர்ப்பார். கடந்த மாதம் 10 நாட்கள் […]

மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மர்ம மரணமும் மக்களாட்சி மாண்பின் மிகப் பட்டவர்த்தனமான படுகொலையும்

This entry is part 6 of 16 in the series 20 செப்டம்பர் 2020

_ லதா ராமகிருஷ்ணன் ஜூன் மாதம் 14ஆந் தேதி காலை பதினோறு மணியளவில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அறையை அவருடைய வீட்டுப் பணியாட்களில் ஒருவர் தட்டியபோது அவர் திறக்கவில்லை என்றும் , கம்ப்யூட்டர் பூட்டைத் திறக்கும் பணி தெரிந்தவரை அழைத்து பூட்டைத் திறக்கச்சொல்லிப் பார்த்தபோது உள்ளே சுஷாந்த் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததாகவும், கூறப்பட்டது. சுஷாந்த் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தது அவருடைய உடலை இறக்கியதாகக் கூறப்படும் பித்தானி மட்டுமே. தகவலறிந்து வந்த மும்பைக் காவல்துறை பார்த்தமாத்திரத்தில் அதைத் […]

சொல்லத்தோன்றும் சில…..

This entry is part 15 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

லதா ராமகிருஷ்ணன் வினை – எதிர்வினை. நிறைய நேரங்களில் நிறைய பேர் தமது வசதிக்கேற்ப அல்லது தமது செயல்திட்டத்திற்கேற்ப, hidden agenda வுக்கேற்ப வினையை எதிர்வினையாகவும் எதிர்வினையை வினையாகவும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் பரவலாக நடைபெற்றுவருகிறது. Out of Context சில வரிகளை எடுத்துக்காட்டுவதுபோல். ஒரு வினைக்கு எல்லோரும் ஒரேவிதமாக எதிர்வினையாற்றுவார்கள் என்று சொல்லமுடியாது; எதிர்பார்க்கவும் முடியாது. சகிப்புத்தன்மை எல்லோரிடமும் ஒரேயளவாய் இருக்கும் என்று சொல்லமுடியாது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்பாலினத்தைச் சேர்ந்த முகநூலினர் ஒருவர் ‘அவனா, சரியான […]

கோவை ஞானியும் நிகழும் கவிதையும்

This entry is part 17 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

லதா ராமகிருஷ்ணன் தமிழ்ச் சிற்றிதழ்களில், குறிப்பாக இலக்கியம் – சமூகம் – அரசியல் மூன்றையும் இணைக்கும் புள்ளியாக அமைந்த ஆரம்ப சிற்றிதழ்களில் (அல்லது, மாற்றிதழ்கள்) அமரர் கோவை ஞானி நடத்திய ‘நிகழ்’ இதழுக்கு முக்கிய இடம் உண்டு. பின்னர் வந்த, middle magazines என்று கூறப்படும் பல இதழ்களுக்கு இருந்த நிதிவள ஆதாரங்கள், பெரிய நிறுவனங்களின் பின்புலம் நிகழுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. நிகழில் என்னுடைய கவிதை, கட்டுரை சிலவற்றை வெளியிட்டார் கோவை ஞானி. நிகழில் அச்சேறும் சில […]

வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்

This entry is part 4 of 23 in the series 26 ஜூலை 2020

_லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ஜெயதேவனின் கவிதை இது: நிசப்தமான அறையில் ‘ ணங்‘ என்ற ஒலியுடன் சிதறி விழுகிறதுசற்று முன் நான் தேநீர் குடித்து விட்டுமேசையில் வைத்த பீங்கான் குவளை.எங்கிருந்து வந்தது இந்த ஒலிகுவளைக்குள்தான் இருந்ததா?எனில்நான் பருகிய தேநீருக்குள்ளும் சிலஒலிச் சிதறல்கள் போயிருக்குமா.பலா மரத்திலிருந்து விழுந்தகூழம் பலா போல் சிதறிக் கிடக்கும்பீங்கான் துண்டில் எந்தத் துண்டிடம்கேட்பேன்.” இத்தனை ஒலியை உள்ளுக்குள் வைத்திருந்தும்ஏன் இதுவரை ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை.குறைந்தது ஒரு காலை வணக்கமாவதுசொல்லியிருக்கலாமே தினமும்“******(* ” […]

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை

This entry is part 2 of 8 in the series 17 மே 2020

க்ருஷ்ணார்ப்பணம் கண்டவர் விண்டிலர் தேடித்தேடி இளைக்கச்செய்து அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக கரும்புள்ளி செம்புள்ளி குத்த காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை; காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்; கண்ணீர்பெருக அவனை நினைத்துப் பாடல்கள் எழுதியெழுதி இளைத்தவள்; இன்(ல்)வாழ்க்கையைத் தொலைத்தவள்….. நாச்சியார் திருமொழி பாய்ச்சும் அன்பெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாய் இறுதித்தீர்ப்பு எழுதி கழுமேடைக்கு ஹரியெனும் காற்றை கரகரவென்று இழுத்துச்செல்லப் பார்ப்பவர்களின் விசாரணை வளையத்திற்கு அப்பாலானது காற்றைக் காதலனாக அடைந்தே தீருவது என்ற அவளின் அசாதாரண ஊற்றனைய போதமும் […]

கோவில், கடவுள், பள்ளிக்கூடம், மருத்துவமனை….

This entry is part 11 of 11 in the series 10 மே 2020

_லதா ராமகிருஷ்ணன் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச்  சென்றிருந்தேன்.  வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று  தனது கணீர் குரலில் கூறினார்.  அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவொன்றுக்குச் சென்றிருந்தேன். வந்திருந்த சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான பிரபல பேச்சாளர் ஒருவர் தனது உரையின் நடுவே, ‘அம்மாவை விட மனைவியே மேலானவள். என்னென்றால், அம்மாவால் தர முடியாததை மனைவியால் தர முடியும்’, என்று தனது கணீர் குரலில் கூறினார். அரங்கமே அதிர்ந்துபோய் அருவருப்போடு முகஞ்சுளித்ததை அவர் பொருட்படுத்திய தாகவே தெரியவில்லை. எத்தனை […]

வாக்கும் விளக்கும் மதச்சார்பின்மையும் மற்றும்……

This entry is part 2 of 14 in the series 26 ஏப்ரல் 2020

_ லதா ராமகிருஷ்ணன் ‘கொரோனா காலத்தில் சமூகநலனுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போன்ற சக மனிதர்களுக்கு ஒரு எளிய நன்றியறிவிப்பாக 5.4.2020 இரவு ஒன்பது நிமிடங்கள் வீட்டில் மின்விளக்குகளை அணைத்து அகல் விளக்கு மெழுவர்த்தி, அலைபேசி விளக்கு டார்ச் விளக்கு போன்றவற்றை ஏற்றச்சொல்லி இந்தியாவின் பிரதமரிடமிருந்து வந்த வேண்டுகோள் முகநூலில் பல பேரால் எள்ளிநகையாடப்பட்டது; கேவலம் செய்யப் பட்டது. இப்படிச் செய்தவர்களில் நிறைய தமிழ் எழுத்தாளர்களும் உண்டு. […]