author

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

This entry is part 1 of 22 in the series 2 மார்ச் 2014

  சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது உமா மகேசுவரியின் சடலம். யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட பெண்ணுடலின் அணுக்கள் அந்தரவெளியெங்கும் பரவியிருக்கின்றன. வெளியே கேட்டதோ கேட்கவில்லையோ அவளுடைய அலறல்கள் என் அடிவயிற்றில் வீறிட்ட வண்ணம்…. ஐயோ தாங்க முடியவில்லையே…..     உலகெங்கும் எதிரொலித்துக்கொண்டிருக்கும் எண்ணிறந்த இசைப்பிரியாக்களின் வலியோலங்கள். நிலைகுலையவைத்தபடி. ஐயோ தாங்க முடியவில்லையே……     நிர்பயா, உன் அவசர சிகிச்சைப் பிரிவுப் படுக்கையின் மரணாவஸ்தையிலிருந்தே இன்னும் என்னால் எழுந்திருக்க இயலவில்லை. அதற்குள் […]

நாணயத்தின் மறுபக்கம்

This entry is part 16 of 29 in the series 12 ஜனவரி 2014

1. ஒரே சமயத்தில் பல மேடைகளில் முழங்கிக்கொண்டிருக்கிறார்கள்; உலகின் பல மூலைகளிலும் கூட….. ”தமிழ்க்கவிதை வெளியில் எமக்கு முன்பிருந்தோரெல்லாம் தாந்தோன்றிகள், தனாதிபதிகள் [தமிழ்க்கவிதையெழுதி சம்பாதித்ததை ஸ்விஸ் வங்கியில் சேமித்திருக்கக்கூடும்]. துட்டர்கள், தட்டுக்கெட்டவர்கள் தொடைநடுங்கிகள் சீக்காளிகள், ஷோக்காளிகள் சமூகப்பிரக்ஞை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள்” _ முழக்கத்தின் உக்கிரத்தில் உதிரும் ஒவ்வொரு சொல்லும் வாள்வீச்சாக தன் சிறு அறையில் அமர்ந்தபடி அன்பால் பிரியமாய் கவிதையெழுதிக்கொண்டிருந்தவர்களையெல்லாம் ஆண்டைகளாக்கி அவர்களுடைய தலைகளைக் கொய்தபடியே தாரை தம்பட்டம் அதிர அடுத்தடுத்த […]

முன்பொரு நாள் – பின்பொரு நாள்

This entry is part 17 of 27 in the series 30 ஜூன் 2013

[ 1 ] சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை சிலருக்கு கயமை; சிலருக்கு குறியீடு சிலருக்கு குறைபாடு, சிலருக்கு பக்தி சிலருக்கு கத்தி; சிலருக்கு பொறுப்பு சிலருக்கு வெறுப்பு, சிலருக்கு புனிதம் சிலருக்கு கணிதம்; சிலருக்கு அறவியல் சிலருக்கு அரசியல், சிலருக்கு வாலிவதம் சிலருக்கு ஞானரதம்; சிலருக்கு சுற்றுச்சூழல், சிலருக்கு கடல்வாணிபம் காதலின் இலக்கணம், கேடுகெட்ட ஆணாதிக்கம் உறவில் துறவு, துறவில் உறவு அனர்த்தம், அண்டசராசரம் இன்னும் _   ஒரு சொல் ஒரு […]

கவிதைகள்

This entry is part 18 of 29 in the series 23 ஜூன் 2013

அன்றொரு நாள் – என்றொரு நாள் இலைகளை மட்டும் நேசிக்கும் வக்கிரப் பெருவழுதி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள் அந்த நவீன தமிழ்க்கவிஞன். ‘செலக்டிவ் அம்னீஷியா’வில் தோய்த்தெடுக்கப்பட்ட சமகாலத் தமிழ்க்கவிதைச் சரித்திரத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான். கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதையும் கேள்வி கேட்காமல் வெளியிட்டார்கள் தமிழிலக்கியத் தாளாளர்கள். அண்டசராசரமெங்கும் விண்டில கண்டு ஆனந்தமாய்த் திரியும் கவிமனதிற்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன! ’வாழ்ந்து மறைந்தவருக்கான உரிய மரியாதையோடு’ அந்த வரலாற்றாசிரியர் குறித்து இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்: அவர் […]

ஒரு நாள், இன்னொரு நாள்

This entry is part 10 of 23 in the series 16 ஜூன் 2013

  நள்ளிரவைக் கடந்ததுமே விழிப்பு வந்துவிட்டது கொள்ளிவாய்ப் பிசாசாய். கால்கள் சென்றன தம்போக்கில் கணினியை நோக்கி. திரை யொளிரத் தொடங்குவதற்காய் காத்திருக்கும் நேரம் கரை மீறும் ஆத்திரம். பின், சுரங்கெட்ட பியானோ வாசிப்பாய் விசைப்பலகை மீது தட்டத்தொடங்கும் விரல்கள் சில. திறந்துகொள்ளும் இணைய இதழில் எழுதியுள்ளோர் பெயர்களைத் துருவியாராய்ந்து தயாரித்துக்கொள்ளப்படும் ‘ஹிட்-லிஸ்ட்’. இவர் ஃபர்ஸ்ட், அவர் நெக்ஸ்ட்…. கதையோ கவிதையோ கட்டுரையோ-அட, உள்ளடக்கமோ சாரமோ – ஒரு பொருட்டில்லை யெப்போதும்   _ விருப்பம்போல் கருப்பொருளைத் திரிக்கத் தெரிந்தால் […]

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

This entry is part 4 of 37 in the series 27 நவம்பர் 2011

16 செல்வழியெங்கும் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது சிந்தா நதி யொன்று! படகில்லை, நீந்தத் தெரியாது, சிறகில்லை, பறக்கமுடியாது…. ஆனாலுமென்ன? ஏழு கடல் ஏழு மலை தாண்டி அந்தப் பச்சைக்கிளியைக் கண்டடைவதுதானே வழிச்செலவின் வரவு என்று சுழித்தோடியவாறு அறிவுறுத்துகிறது ஆறு! 17 தெம்மாங்குப் பாட்டு தெரியாது. கர்நாடக இசை படித்ததில்லை. இந்துஸ்தானி, ஜாஸ், ராக், கஸல் என்று எத்தனையெத்தனை உலகில்! எதிலுமே பயிற்சியில்லை. ஆனபோதும், குரலெடுத்துப் பாடவேண்டுமாய் எழும் இந்தத் திருத்தினவை என்செய்ய….? மெய்யோ பொய்யோ உளதாம் குரல்வளம்; உறுதியாய் கிளம்பும்தான் […]

கவிதைகள்: பயணக்குறிப்புகள்

This entry is part 18 of 38 in the series 20 நவம்பர் 2011

11 தொடக்கப்புள்ளியிருந்து வெகுதூரம் வந்தாயிற்று- போகவேண்டிய தூரம் அதிகம் என்ற தெளிவோடு. சிறுகற்கள் மலைமுகடுகளாய் வழியடைத்த நிலை மாறி பெரும்பாறைகளும் இன்று துகள்களாகிவிட்ட ரசவாதம்! கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!! புரியாமல் கருத்துப்போர்வையில் கற்களைச் சுருட்டியெடுத்துவந்து கைபோனபோக்கில் என் ஆறெங்கும் இறைத்துக்கொண்டிருக்கும் நீ எப்போதுமே ஐயோ பாவம்! 12 உன் உன்னும் என்னும் முன்னும் பின்னும் ஒடுங்கும் ஒருமைக்குள் எதிர்வினைக்கும் அறவுரைக்கும் இடையே நிறையும் அகழி மறைத்துக் கவியும் காரிருள். என் என்னும் உன்னும் இன்னும் என்னென்னவும் […]

கவிதைகள் : பயணக்குறிப்புகள்

This entry is part 12 of 41 in the series 13 நவம்பர் 2011

4 குருவி தென்படாத இயற்கைச்சூழலினூடாய் பயணித்துக்குக்கொண்டிருக்கும்போதும் கவண்கல்லைக் கையிலெடுத்துக் குறிபார்த்துச் சென்றால் கல் இடறி காலில் காயம்படத்தான் செய்யும். சுயநலம் கருதியேனும் சகவுயிர்களை நல்லவிதமாக நடத்தப் பழகு. ’சகோதரத்துவம் மனிதரிடமே வராத போது மிருகங்களிடம் எப்படி வரும்’ என்று எதிர்க்கேள்வி கேட்கிறயா? பதில்சொல்லக் காத்திருக்கின்றன வழியெங்கும்_ புதைகுழிகளும் பேரழிவுகளும். 5 கவியும் இருளில் சில சமயங்களில் நிலாவாகிவிடுகிறேன் நான்! இரு இரு – கனிந்து மெழுகென உருகும் என்னிடம் சந்திரனை இரவல் ஒளியாக உண்மையுரைத்து எந்தப் புண்ணியமுமில்லை; […]

பயணக்குறிப்புகள்

This entry is part 4 of 44 in the series 30 அக்டோபர் 2011

_ ரிஷி 1 ஒருவர் ஒன்றை மொழிந்ததுதான் தாமதம் அந்த இன்னொருவரின் கை வழக்கம்போல் வீறிட்டெழுந்துவிடும்! வெறிகொண்ட பரவசத்தில் அவர் உடல் துடித்தெழ கூறப்பட்டதை தனக்குரிய விதத்தில் பொருள்பெயர்த்துத் தந்துவிடும் அவர் வாய் பல வண்ணங்களில் பிறழ்வாய் பிறவாய். சகபயணிகளில் இது ஒரு வகை. பரவலாய் காணக்கிடைப்பதுதான். ஒரு கேள்வியை இடைமறித்து கச்சிதமாய் தவறான விடையளிக்கும் பரிதாபத்திற்குரிய மே[ல்]தாவித்தனம். தம்மைக் கதிரோனாய் காவ்யாசானாய் கருதிக்கொள்வதும் காட்டிக்கொள்வதுமாய் இரவல் வெளிச்சங்கள் நம்மை வழிநடத்தப் பார்க்கும். விழிப்போடிருக்கவேண்டும். 2 உன்னுடைய […]

’ரிஷி’யின் கவிதைகள்:

This entry is part 41 of 43 in the series 29 மே 2011

1.மச்சம்   இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம்  புதிதாக முளைத்த மச்சத்திற்கும் ஆரூடங்கள் உண்டுதான். நிலைக்காத போதிலும் நாளையே அழிந்துபோகுமென்றாலும் ஒவ்வொரு புதிய மச்சமும் பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய் புதியதோர்(தலை) எழுத்தாய் உருமாறிக்கொள்ள, மீள்வரவாகக்கூடும் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் புதிய விரல்களை நாடியவாறு… 2. பசி   தச்சன் கை உளி செதுக்குவதும் பிச்சைப்பாத்திரத்தை நிரப்பக்கூடும் அன்னதானங்களால் ஆகாதவாறு ஒன்றாகவும் பலவாகவும் ஆகிய காதலே போல் அவரவர் பசியும் அவரவருக்கேயானதாக. 3.உயிர் வெல்லம்; அல்ல- வெண்கலம்; இன்னும்- வெங்காயம்; […]