தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கூடுவிட்டுக் கூடு

  தன் கடும் பயிற்சியில் கைகூடியது அவனுக்கு கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை.. கைகூடியக் கலையை சோதிக்க நினைத்தவன் உயிரிழந்த வெற்றுடம்பைத் தேடியபோது.. எதிரில் நின்றிருந்தது வளர்ப்புப் பூனை கழுத்தை நெரித்து பூனயைக் கொன்றான்.. பூனையின் உடலுள் தன்னுயிர் நுழைத்தான்.. பூனையின் உயிர் உடல்விட்டலைந்தது.. பிணமாய்க் கிடந்த தன்னுடல் அசைவை கண்டதும் பூனை... தன்னுயிர் கொண்டு அவனுடல் நுழைந்து எழுந்து அமர்ந்தது.. அவனது குரலில் பூனை சொன்னது பூனையாய் இருந்த…

நூலிழை சத்யானந்தன்   நான் எங்கேயாவது நினைத்த​ போதே கிளம்பி விடுவேன் என்பது அம்மாவுக்குப் பழக்கமானது   உணவு பரிமாறும் போது அம்மா சொன்னது பயணத்தின் போது முழுவடிவாகி பக்கத்தில் அமர்கின்றன​   எந்தத்…

பண்டமாற்று

பத்மநாபபுரம் அரவிந்தன்    குளம் நோக்கி  வேரிறக்கி வளருகின்ற மரம்  மர நிழலில்  தனையொதுக்கி இளைப்பாறும் குளம் ..   பழம் தின்று விதையோடு  எச்சமிடும் பறவை  விதை விழுந்து மரமாக  கூடு கட்டும்…

தோற்றம்

இது நானில்லை சுனையில் தெரிவது என் பிம்பம்   அப்போது இது தான் நீயா என்றான் என் மேல் சுட்டு விரலை வைத்து   இது என் உடல் அதன் தோற்றம்   தோற்றம்…

தூ…து

- சேயோன் யாழ்வேந்தன் பார்க்க வேண்டும் என்று சொன்னாய் பார்க்க வந்தேன் இனிமேல் பார்க்கவே கூடாதென்றாய் அதைச் சொல்லத்தான் அழைத்ததாகவும் சொன்னாய் இப்போது பேசவேண்டும் என்று தோழி மூலம் தூதனுப்பியிருக்கிறாய் நான் பேச வரப்போவதில்லை…

உள்ளிருந்து உடைப்பவன்

  சேயோன் யாழ்வேந்தன்   வைத்தது யார்? அடைகாத்தவள் எங்கே? வளர்ந்துவிட்டேனா இல்லையா? வெளியில் காத்திருக்கும் அலகு யாருடையது? எதுவும் தெரியாது. உள்ளிருந்து உடைக்கிறேன் - அழுகிவிடக்கூடாதென்ற பயத்தில்! seyonyazhvaendhan@gmail.com

நாக்குள் உறையும் தீ

பத்மநாபபுரம் அரவிந்தன் சில நாக்குகள் கனலை சுமந்து திரிகின்றன சில நாக்குகள் சதா ஜுவாலையை உமிழ்கின்றன சில நாக்குகள் கனல் சுமக்க எத்தனிக்கின்றன சில நாக்குகள் பிற நாக்குகளின் கனலை ஊதி நெருப்பாக்குகின்றன சில…

கண்டெடுத்த மோதிரம்

அமீதாம்மாள் நடந்து செல்கிறேன் மண்ணில் ஏதோ மின்னுகிறது அட! ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி? இது என்ன பிளாட்டினத்தில் வைரமா அல்லது வெள்ளியில் புஷ்பராகமா? ஓர் ஆசரீரி…

நிழல்களின் நீட்சி

சத்யானந்தன் இயங்காத நிழல்கள் போல் நாம் விடுதலை வரம் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றது கால்பந்தின் நிழல் வரம் கொடுத்தவர் இரவில் நாம் இச்சைப்படித் திரிய அனுமதி தந்தார் கட்டிட நிழலும் குப்பைத் தொட்டி நிழலும்…

X-குறியீடு

பாண்டித்துரை கடந்து சென்ற 024 நபகர்கள் X-ஐ Y-ஆக்கவும் Y-ஐ ட-ஆக்கவும் விருப்பமற்றவர்கள் வீராச்சாமி ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து X குறியிட்டு படுத்துக்கிடந்தவன் இன்னும் சற்று நேரத்தில் எழுந்திருக்ககூடும் சற்று நேரமென்பது 420 நபர்கள்…