முகவரி கேட்டு அலைந்துக் கொண்டிருந்தார் தபால்காரர். அவரா என்று எளனமாக பார்த்தான் சந்தைக்காரன். அதோ மூலையிலுள்ள புத்தகக் கடையில் தேடுங்கள் என்றான் மார்வாடி பெண்ணின் மூக்குத்தியை எடைப்போட்டுக் கொண்டே. அவரா நேத்து தான் அந்த மூலை பழைய புத்தகக்கட்டை தேடிக்கொண்டிருந்தார். நாலு பழைய எழுத்தாளன் கிறுக்கல்களை வாங்கி சென்றார் நாலு ரூபா பாக்கியுடன். அவரா ஜிப்பாவோடு அலைவரே தோளில் ஜோல்னாப்பையோடு. அவரா முனைத்தெரு டீக்கடையில் பேசீக்கொண்டே இருப்பாரே. அவரா வேல வெட்டி இல்லாம எழுதிக்கொண்டிருப்பரே. அவரா லைப்ரரில […]
ரவி அல்லது பின்னிரவைத் தாண்டியும் பெய்து கொண்டே இருந்தது மழை. தூக்கமிழந்த மரங்கள் துவண்டது. தலை துவட்டி தழுவிக்கொள்ள தாமதமானதாக நினைத்த காற்று. விருப்பம் கொண்டு சற்று வேகமாக வந்ததது. விபரீதம் நடக்கப்போகிறதென்பதை அறியாமல். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
ஆர் வத்ஸலா விடாமல் பெய்து கொண்டிருக்கிறது மழை ஜன்னல் வழியே ரசித்துக் கொண்டு காத்திருக்கிறார் சூடான பலகாரத்திற்காக கவிஞர் மனதில் கவிதை நெய்துக் கொண்டு மின்தூக்கி வேலை நிறுத்தம் செய்த அந்த கட்டிடத்தில் இரண்டிரண்டு படியாக தாவி ஏறுகிறான் மூச்சு வாங்க ஏழாவது மாடிக்கு ‘ஸ்விக்கி’ பையன் ஐந்து நட்சத்திரம் வாங்கும் ஆசையில் ‘கார் பார்க்கிங்’ இல் நிற்கும் வாகனங்களை பாதுகாக்க இருமிக் கொண்டே தள்ளுகிறாள் குடியிருப்பின் கீழ்தளத்தில் தேங்கிய தண்ணீரை குடியிருப்பு உரிமையாளர் சங்கத்தால் அதிகார […]
பத்மநாபபுரம் அரவிந்தன் – எத்தனையெத்தனை தலைமுறை மரபணுக்களின் நீட்சி நான் என்னுள் நீந்தும் அவைகள் அத்தனையும் எத்தனை ஜாதிகள் கொண்டனவோ எத்தனை மதங்களை ஏற்றனவோ… கள்குடித்துப் பித்தான முப்பாட்டன் வழி வந்த சிலவும்.. புகை பிடித்துப் புகையான பூட்டன் வழி வந்த சிலவும் போன இடமெல்லாம் போகம் விளைத்து தன் முகத்தை பதிவு செய்த முகமறியா முன்னோரின் சிலவும் சொல் வடித்துக் கவிதை செய்த பெரும்பாட்டன் வழிவந்த சிலவும் ஏமாற்றியும் பலரிடம் ஏமாந்தும் புத்திகெட்டுப் போயலைந்த பெயர் தெரியா […]
வளவ. துரையன் அஞ்சல் கொண்டுவந்து தரும் அஞ்சல்காரர் போல ஒரு சில வீடுகளுக்கு முன் ஓயாமல் வந்து நிற்கிறது வெள்ளைப் பசு மாடு. ஒன்றுமே போடாததால் அழைத்தழைத்துப் பார்த்துவிட்டு நகர்ந்துவிடும் பரதேசியாய் அதுவும் போகிறது. பாலைக் கறந்துவிட்டு வெளியே விரட்டிவிட்டப் பரிதாபம் அதன் கண்களில். . அடைக்க இயலாதவர் வாங்கிய கடன்போல வளர்க்க இடமி8ல்லாதவர் வாங்கிய ஜீவன் அது. கன்றுக்குக் கொஞ்சமாவது சுரக்க வேண்டுமெனச் சுவரொட்டியையும் நெகிழியையும் தேடிப் போகிறது நம் தேசத்தில்
வளவ. துரையன் கல்லூரி மாணவனின் அடையாள அட்டை அநாதையாகக் கிடக்கிறது. ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து உறங்குவதுபோலக் கிடக்கிறார். முதுகு ஏறி இறங்குகிறது. காலைப் பிடித்துக் கொண்டு கதறும் கிழவர் ஒருவர் கதறலை நிறுத்தவே இல்லை. அலுவலகமோ பள்ளியோ செல்லவேண்டிய அந்தப் பெண்மணி கீழே கிடக்கும் சாப்பாட்டுப் பெட்டியின் நசுங்களைப் பார்க்கிறார். நகரம் பார்க்கலாம் என்றிருந்த காய்கறிகள் வழி தெரியாமல் கீழே சிதறி அழுகின்றன. லேசாகத்தான் மோதினாய் பரவாயில்லை என்கிறது புளியமரம் தன்னை முத்தமிட்டு நிற்கும் அந்தப் […]
நகுலன் வீதிகளை மறந்து வீட்டையும் மறந்த கலைஞன். விலாசம் தெரியா காட்டில் அலையும் தத்துவக்கவி. கவி, தொலை தூரத்து பறவைகளின் பாடல் கேட்பதாக சொல்லும் வயோதிகன். பூதக்கண்ணாடிகளை இலக்கிய பூச்சோலையில் விட்ட கவிஞன். ராமசந்திரன் வந்து விட்டான என கேட்டுக்கொண்டே இருக்கின்றார். பூனைகளிடம் தான் கேட்க வேண்டும் நகுலன் வீடு எங்கே, அவைகள்தான் நகுலன் கவுச்சி வாசனை பிடிக்க இழுத்துச்செல்லும். ஜெயானந்தன்
வெங்கடேசன் நாராயணசுவாமி (அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். உங்கள் Thinnai இதழின் வழியே இலக்கிய சிந்தனைகளையும் ஆன்மிக விழிப்புணர்வையும் பரப்பும் உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன். இணைக்கப்பட்டுள்ள என் சமீபத்திய பணி, “ஆய்ச்சியர் குரவை – பாகம் ஐந்து”, ஸ்ரீவேதவ்யாச மகாமுனிவரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாம் ஸ்கந்தம் அடிப்படையில் தமிழ்ப் பாடல்களாக உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பாகும். சம்ஸ்கிருத மூலத்திலிருந்து நேரடியாக எழுந்த பாடல்களாகும். இவ்வடிப்படையில், ராஸக்ரீடை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தெய்வீக லீலைகளை எடுத்துரைக்கிறது. இது மனித மனதின் காமம் எனும் விகாரமான உணர்ச்சியை வெல்லும் வழிகளை பக்தி மற்றும் சத்சங்கத்தின் […]
ரவி அல்லது வறண்டு போனதைக்காட்டிவாஞ்சையைப் பற்றிசொல்லிக் கொண்டிருக்கிறேன்.சொட்டுச் சொட்டாகவிழும்கருணையைநிரப்பிஎப்பொழுதுகடலெனக்காட்டுவது. -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ரவி அல்லது இதழில்தேடிக் கொண்டே இருந்தேன்என்னை.வீடெங்கும்புத்தகங்கள். -ரவி அல்லது.ravialladhu@gmail.com