பார்வைப் பந்தம்

                             வளவ. துரையன் இக்குளிர்காலத்தில் கொட்டும் பனி உனக்குப் புரிகிறதா? மலர்களும் தருக்களும்  நனைந்தது போதுமென்கின்றன. முன்பு  இதேபோல ஒருநாளில் வந்து  நீ ஈந்த முத்தத்தின் சுவடு இன்னும் காயவில்லை. எங்கிருக்கிறாய்  என் நெருப்புக் காதலனே! எங்கே உன் தீக்கங்குகள் அவற்றின்…
ஓர் இரவு 

ஓர் இரவு 

                     ----வளவ. துரையன்                                          எப்பொழுதும் போல வழக்கமாக                    ஓர் இரவு விடிந்துவிட்டது                    ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ  எதுவும் நடக்கவில்லைதான். ஒரு கனவுகூட வரவில்லை. அது வந்திருந்தாலாவது எல்லாரிடமும் சொல்லலாம். பலன்கள் என்னென்ன என்று கேட்கலாம். பாதி ராத்திரியில் கண் விழிப்பும் வரவில்லை. மின்சாரம் சில…

வா!

மனம் கனத்து போன சமயத்தில்  உனை அழைத்தேன்.  நீ  என்னமோ  கூந்தலை அழகு செய்தாய்  நகத்தில் சாயம் ஏற்றி  புருவங்களை வில் எடுத்தாய். இடுப்பின் சதையை  குறைக்க செய்தாய்  தொடையின் மினுக்கில் காமத்துப்பாலை தெளித்தாய்.  வறண்டு போன தோலின்  மேல்  பசை…

நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்

ரவி அல்லது. உந்துதலால் உயரம் வந்த பறவைகள்  சிறகசைத்த வண்ணமிருந்தது சிதறாப் போக்கில் சேருமிடத்திற்கு. மிச்சங்களைக் கழிக்க எச்சமிடும்பொழுது யோசிக்கவே இல்லை விருட்சங்களாக வேறொரு நாள் இளைப்பாறுதலுக்கு இணக்கமாகுமென. அச்ச ரேகைகளை அழிக்கத் தெரியாதவர்கள் அறியாமை ரேகைகளில் வகுத்துக் கொண்டார்கள் பூமியைத்…

தவம்

அவனுக்கு தெரிந்த, தெரியாத,  நதி,உபநதி,கிளைநதி  எல்லாமே அவனதுபோல் உணர்வு.  பாடும் பறவைகள்,  வீசும் காற்று,  மலரும் நந்தவனம்  உயர்ந்த மலைகளும்  குன்றுகளும் கோபுரமும்  எல்லாமே அவனதா? கேள்விக்கேட்டு  தியானத்தில் அமர்ந்தவனுக்கு  அவனே  ஒன்றுமில்லா  உயிராக நின்ற தருணம்  எல்லாமே  ஒன்றுக்குள் ஒன்று …
நிறமாறும் அலைகள்

நிறமாறும் அலைகள்

சம்சா மாலையில்  கடற்காற்றோடு விற்பவன்  வாழ்வின் இருண்ட பகுதிகளில்  முளைந்தெழுந்த  படகு காதலிகளின் கண்ணீரில் நனையும்  கைக்குட்டைகளில்  காதலன் பெயர்களை எம்ராய்ட்ரி  போட்ட துண்டுத்துணிகள் காற்றில் பறக்கும் கதைகளை அறிந்தவன்.  அடுத்த படகில்  அதே காதலன்  வேறு காதலி.  கண்ணகி நேற்று …
பணம்

பணம்

பணப்பையைப் பறித்து பறந்தது குரங்கு அறக்கப் பறக்க துரத்தியது மனிதக்கூட்டம் பையைக் கிழித்து பணங்களை  எறிந்தது குரங்கு பணம்!பணம்!பணம்! கட்டிச் சேர்த்தது காற்றில் பறக்கிறது பறத்தல்  கண்டதும் குரங்குகளாகிப்போன மனுஷப்பயலைப் பார்த்து இளித்தது குரங்கு அமீதாம்மாள்
ஒரு பெண்ணும், சில ஆண்களும்

ஒரு பெண்ணும், சில ஆண்களும்

அவளை அழைத்தார்கள்.  விளம்பர உலகின்  மாடலாக,  அவள் கைகள், கண்கள்  இடுப்பும், தொடையும்  வழியும் போதை  கண்களில் கண்டனர்  ஆண்கள்.  முதலில்  பியானோ மீது சரிந்தாள்  கைகளில், கால்களில்  தைலம் தடவினார் கேமிரா கண்களுக்கு  பொருந்தும் என்றனர்.  விழும் அருவியில்  குளியல்,…

இரு கவிதைகள்

(1) சிதம்பரம் தழலாடுகிறது நடனம். தளும்புகிறது  தீக் குழம்பு. தீச் செம்மை தித்திக்கிறது. அணிந்த சர்ப்பம் படமெடுக்கிறது. விரி சடைகள் தீ நாக்குகளாகின்றன. ஆயிரமாயிரம் சர்ப்பங்களாகி உன்மத்தம் கொள்கின்றன. சர்ப்ப மேனி ஜொலிக்க சதிராட்டம். நிலவு தெறிக்கிறது. ஒவ்வொரு  தீச் சர்ப்பத்திலும்…
நீ

நீ

ஒரு தேன் சிட்டுக்கு காத்து நிற்கின்றேன்  மலர்களின் மடியில்.  வாழ்க்கை என்ன  நாம் அழைத்தால் வருவதா! அதன் மடியில்  நாம்தான் மண்டியிடுகின்றோம். ஒவ்வொரு பொழுதும்  ஒவ்வொரு கதைச்சொல்லும்  அதில்  ஆனந்தமும் வரும்  அழுகையும் வரும்  எங்கோ  தூரத்தில் தெரியும்  வெளிச்சம் சிலருக்கு. …