சென்ற இதழில் நான் காங்கிரஸ் பற்றி எழுதியதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும், நக்கலாகவும் சில எதிர்வினைகளை பார்த்தேன். அவை அனைத்தையும் நான் புரிந்துகொள்கிறேன். நான் முன்னர் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தில், எனது மேலதிகாரி என்னிடம் ஒன்று சொன்னார். “you are constrained by your imagination” உன்னுடைய கற்பனையே உன்னுடைய விலங்கு என்று ஏறத்தாழ நேரடியாக மொழிபெயர்த்தாலும், இதனை அப்துல் கலாம் நீங்கள் மகத்தான கனவு காணுங்கள் என்று சொன்னதை வைத்து புரிந்துகொள்ளலாம். பிரச்னை என்னவென்றால், காங்கிரஸ் கட்சிக்கு […]
குரு அரவிந்தன். அறிவியல் சார்ந்து உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும்போது, டைட்டானிக் விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆவி இப்பொழுதும் அப்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைப் பழிவாங்குவதாக சிலர் நம்புவதையும், அப்படியான சிந்தனைகள் தவறானவை என்பதை எப்படி அவர்களுக்குப் புரியவைப்பது என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இதற்குக் காரணம் சென்ற வாரம் டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்வதற்காக சென்ற ஐவர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் சென்ற சிறிய நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கியதால் மரணமடைந்து விட்டார்கள். சமீபத்தில் நடந்த ஒன்றுகூடல் ஒன்றின்போது, […]
சி. ஜெயபாரதன், கனடா விக்கியோ, மூச்சுவிடத் திக்குமுக் காடியோ பொக்கெனப் போகும் உயிர். முதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 1 சி. ஜெயபாரதன், கனடா ரிப்லி முதியோர் காப்பில்லத்தில் என்னைச் சேர்த்து நாலு வாரம் ஆகிறது. சொல்லப் போனால் அது ஒரு முதுமைச் சிறை வாசம் தான். அங்கு போக மாட்டேன் என்று சின்னப் பிள்ளை போல் மகளிடம் பன்முறை தர்க்கம் புரிந்தேன். மனைவி இறந்த பின் என் இல்லத்தில் இதுவரை தனியாக, சுதந்திரமாக, […]
– முனைவர் ம இராமச்சந்திரன் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. தமிழ்நாடு முழுவதும் உயர் கல்விக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவம் பொறியியல் கலை மற்றும் அறிவியல் பாலிடெக்னிக் மற்றும் பல படிப்புகளில் சேர்ந்து அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளிலோ அரசு வேலை வாய்ப்பிலோ தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முக்கியமான காலகட்டமாக இக்காலம் விளங்குகிறது. பெற்றோரின் வசதிக்கேற்பவும் மாணவர்களின் திறன்சார் ஆற்றலுக்கு ஏற்படவும் மாபெரும் […]
தமிழ்நாட்டில் வெகுகாலத்துக்கு முன்னால், திமுக ஒரு அணியிலும் காங்கிரஸ் மற்றொரு அணியிலும் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, நீதிகட்சியின் புது அவதாரமான திமுக அந்த இடத்தை பிடித்தது. பக்தவத்சலம் தலைமை தாங்கிய காங்கிரஸ் 41.10 சதவீத வாக்குக்களையும், திமுக 40.69 சத வாக்குக்களையும் பெற்றாலும் ஸ்வதந்திரா கட்சி (ராஜாஜியின் கட்சி) 5.30 சதவீத வாக்குக்களாலும் சிபிஎம்மின் 4.07 சதவீத வாக்குகளாலும் திமுக வெற்றி பெற்று 137 இடங்களை பெற்றது. காங்கிரஸ் 51 இடங்களை பெற்றது. அடுத்த […]
துயர் பகிர்வோம்: நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன். இனிய நண்பர், நாடகநெறியாளர்; கலைஞர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-6-2023 சனிக்கிழமை அன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை நம்பமுடியாமல் இப்பொழுதும் இருக்கின்றது. பழகுவதற்கு மிகவும் அன்பான, பாசமான ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்ற கவலைதான் இப்போது எங்களிடம் மிஞ்சி நிற்கின்றது. கலை உலகிற்கு நன்கு அறிமுகமான, இலங்கையில் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்திநாதன், மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். சிறந்த நடிகராக, சிறந்த நெறியாளராக அவர்தன்னை […]
கோபால் ராஜாராம் ஜெயமோகன் தன் வலை தளத்தில் திண்ணை பற்றியும் மற்றும் பி கே சிவகுமார் பற்றியும் எழுதியுள்ள கீழ்க்கண்ட பத்திகள் என் கவனத்திற்கு வந்தது. ‘பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம், கோ.துக்காராம் வழியாக அறிமுகம். திண்ணை இணையதளம், பின்னர் எழுத்தும் எண்ணமும் குழும உரையாடல் வழியாக தெரியும். ஒரு சில மின்னஞ்சல்கள், மற்றபடி பொது வெளி உரையாடல்கள் மட்டுமே. இணையம் உருவான காலகட்டத்தில் அப்படித் தெரியவந்த […]
குரு அரவிந்தன் டைனஸோக்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் அந்த டைனஸோக்கள் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் அப்படி ஒரு உலகத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் டைனஸோ பற்றிக் கனடாவில் நடந்ததொரு காட்சிக்குச் சென்று பார்த்ததை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். டைனஸோக்கள் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க விரும்பினால் […]
சோம. அழகு உதுவே உவளது பெயராக இருந்துவிட்டுப் போகட்டுமே! நீங்களும் நானும் நிச்சயம் உவளைப் பார்த்திருப்போம். தற்காலத்தில், பெரும்பான்மைச் சமூகத்தால் ஜீரணிக்க இயலாத முற்போக்குத்தனங்களைச் சுமந்து கொண்டு தனது கொள்கைகளையும் விட முடியாமல் சுற்றத்தின் பித்துக்குளித்தனங்களைச் சகிக்கவும் முடியாமல் மூச்சுத்திணறலுடனேயே உங்களை அநாசயமாகக் கடந்திருப்பாள் உவள். உவளின் இயல்பு அவ்வப்போது உவளையும் மீறிக் கொண்டு கேள்விகளாய் கருத்தாக்கங்களாய்த் தெறித்து விழுந்தன. பெரும்பாலும் தன்கணத்தார் அல்லாதாரால் சூழப்பட்டதில் அனைத்தும் ‘அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்’ ஆகிப் போயின. […]
காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023 கனக்டிகட் மானிலம் Milford நகரில் காலச்சுவடு இதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணனுடன் ஒரு சந்திப்புநிகழவுள்ளது. நாள் – ஜூன் 8, 2023 நேரம் – மாலை 6 மணி இடம் மற்றும் இதர விபரங்களுக்கு Editor@thinnai.com மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.