அம்மாவாகும்வரை……!

This entry is part 9 of 41 in the series 8 ஜூலை 2012

  ஒரு வழியாக் பெண்ணோட கல்யாணம் நல்ல படியா முடிஞ்சு அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தின் கணக்கை சரி பார்த்து முடித்து விட்டு கடைசியாக இருக்கும் மிச்சம் மீதி சாமான்களைக் கட்டி டெம்போவில் ஏற்றிக் கொண்டிருந்ததை மேற்பார்வை பார்த்தபடி பரபரத்தாள் ராஜம். அந்த இலைக்கட்டையும் எடுத்துப் போட்டுக்கோ,அதோ அங்க ஒரு கூடை கிடக்கு பாரு…அதையும் எடு….எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு வைக்காமல் பரவலா வைப்பா..கடைசீல அங்க வந்து எடுக்கும்போது எல்லாம் கவிழ்ந்து கொட்டிப் போச்சுன்னு சொல்லுவீங்க….என்றபடி கடைசியா ஒரு பார்வை […]

’ சுஷ்மா ஸிண்ட்ரோம்’

This entry is part 5 of 41 in the series 8 ஜூலை 2012

”மச்சான்! விஷயம் தெரியுமா? சுஷ்மா டிவோர்ஸ்டு கேஸாம்ல?.”——திவாகர் உற்சாகமாய் அடித்தொண்டையில் கத்த, மற்ற சீட்களில் இருந்தவர்கள் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர். ஆஹா அப்படியா?.இப்பவே பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி இவன்க வாயில் விழுந்திட்டதுன்னு ஒவ்வொருத்தனுக்கும் நெனைப்பு. அப்ப சுஷ்மா ருசி கண்ட பூனையா?.வெரிகுட்…..வெரிகுட்…சுலுவாய் அமுக்கிடலாம் அந்த நொடி முதலே அவளை வீழ்த்துவதற்கான வியூகங்கள் ஒவ்வொருத்தனுக்குள்ளும் ஓட ஆரம்பித்தன. அது கனிமவள சர்வே டிபார்ட்மெண்ட்டின் துணை இயக்குநர் அலுவலகம்,ஹெட் ஆபீஸ் மும்பையில் இருக்கிறது. இங்கே எம்ப்ளாயிஸ் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -2

This entry is part 3 of 41 in the series 8 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா […]

காக்க…. காக்க….

This entry is part 2 of 41 in the series 8 ஜூலை 2012

லக்ஷ்மண பெருமாள் எல்லா நாட்களிலும் மாலையில் இருட்டு ஒரே மாதிரி வருவதில்லை. எத்தனையோ நாட்களில் அது, தான் விரும்புவது போல வந்து விடுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவும் மாலை நேரத்து மஞ்சள் வெயில் பார்ப்பதற்கு வானத்தில் நிறத்தையே ஓரிடத்தில் மாற்றிக் காண்பிக்கிற அந்த அழகு காணக் கண் கொள்ளாதது. அன்றும் அப்படி ஓர் அழகுக் காட்சி. கிரிக்கெட் விளையாடும் போது மாலை நேரக் கதிரவன், கேட்ச் பண்ண முடியாத அளவுக்கு கண்ணைக் கூசச் செய்த போது, […]

அம்மா என்றால்….

This entry is part 1 of 41 in the series 8 ஜூலை 2012

”ஏங்க.. அம்மா பாருங்க இன்னும் படுக்காம ஏதோ எழுதிட்டே இருக்காங்க. உடம்பு கெட்டுடப் போகுது. டாக்டர் தூக்க மாத்திரை கொடுத்திருக்கார். நேரத்திலேயே படுக்கச் சொன்னாரே.. நீங்கதான் சொல்லக் கூடாதா…” “விடும்மா.. வனிதா… அவங்க முருகா சரணம் எழுதுவாங்கன்னு உனக்குத்தான் தெரியுமே. தூக்கம் வந்தா அவங்களே படுக்கப் போயிடுவாங்க” இருவர் மனதிலும் ஏதோ பாரம் அழுத்த பேச்சு தடைப்பட்டு, சிந்தனை வலுப்பெற்றது. அப்பாவிற்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ததற்கு முழுதாக நண்பர்களிடம் வாங்கிய ஐந்து இலட்சம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. […]

அன்பிற்குப் பாத்திரம்

This entry is part 30 of 32 in the series 1 ஜூலை 2012

  என் நெடு  நாளைய கனவு அன்று நிறைவேறி இருந்தது.  நான் ஐந்து வருஷமாகத் தொடர்ந்து எப்போதும் பள்ளிக்கூடத்துக்கு  மதிய சாப்பாடு  எடுத்துச் செல்லும் அலுமினிய டிஃபன் பாக்ஸில் அடைக்கமுடியாத அளவிற்கு ஓட்டை விழுந்துவிட்டதால் என் அக்கா பள்ளிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்த ( எவர் ) சில்வர் டிஃபன்பாக்ஸ் அன்று எனக்குப் பள்ளிக்கு எடுத்துச் செல்லக்  கிடைத்திருந்தது . ரொம்பச் சின்னதாகவும் இல்லாமல் அதேசமயத்தில் ஒரு சம்புடம் போல இருந்தாலும் ரொம்பப் பெரியதாகவும் இல்லாமல் அதன் உடம்பில் […]

சின்னஞ்சிறு கிளியே…!

This entry is part 24 of 32 in the series 1 ஜூலை 2012

கோமதி   மாடி வராண்டாவில் பளபளவென்று உடையணிந்தபடி பட்டாம்பூச்சிபோல் நின்றிருந்த ஸஹானாவை கீழே இருந்து அர்ஜுன் கூப்பிட்டான். “ஸஹானா” என்று ராகத்துடன்! உடனே, “ஹாய்!” என்று கையசைத்துச் சிரித்தாள் ஸஹானா.   “ஆச்சு, மணி நாலடிச்சாச்சு. கிளம்பிட்டா ராணி! இனிமே இருட்டினாத்தான் உள்ளே நுழைவாள்”, என்று அம்மா பாட்டியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.   “ஆமா, நாம தான் உள்ளே அடைஞ்சுண்டிருக்கோம், அதுபாட்டிலே வெளியே போய்ட்டுவரட்டுமே, அதுக்கென்ன?“ என்று பாட்டி ஸஹானாவுக்குச் சார்பாய் பேசினாள்.   கோகுலத்தில் கண்ணன் வளர்ந்ததுபோல் […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு

This entry is part 21 of 32 in the series 1 ஜூலை 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை   விசாலம் மன்னி அதற்கு அப்புறம் பகவதி கூடவே தான் இருக்கிறாள்.   சூனிய மாசம்னாலும் அமிர்தமான மாசம். நேரம். நல்ல நாளும் பெரிய நாளுமா அத்தை வந்திருக்கா. வந்தேளா, குளிச்சேளா சாப்பிட்டேளான்னு பக்ஷமா நாலு வார்த்தை பேசாமா, ஏழுகிணறு நாயுடு கொண்டு வந்து கொடுத்த சொம்பைக் கட்டித் தூக்கிண்டு அலைஞ்சாறது.   பகவதி அத்தை வீட்டுக்கு வந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டே வீட்டுக்காரனைப் பற்றிக் குறைப்பட்டுக் […]

துரத்தல்

This entry is part 18 of 32 in the series 1 ஜூலை 2012

சிறுகதை – இராம.வயிரவன்     துரத்துகிறார்கள்; நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மூச்சு வாங்குகிறது. எங்காவது மறைவிடம் இருக்கிறதா என்று என் கண்கள் உருளுகின்றன. கழுத்து வட்டம் போடுகிறது. ஒடிக்கொண்டே பின்னால் திரும்பிப் பார்க்கிறேன். முன்பு ஒருவன் தான் துரத்தி வந்தான். இப்போது நான்கைந்து பேராகக் கூட்டமாகத் தெரிகிறது. அவர்களின் வேகம் அதிகரிக்கிறது. கால்களை எட்டிப்போடுகிறார்கள். என்னால் முடியவில்லை. கீழே விழுந்துவிடுவேன் போல இருக்கிறது. மாட்டிக்கொண்டால் என்னாவேன் என்று நினத்துக் கொண்டே ஓடுகிறேன். எப்படியும் தப்பித்துவிட வேண்டும் […]

பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்

This entry is part 17 of 32 in the series 1 ஜூலை 2012

  இங்கே அடைந்ததை அழித்தல் என்ற நான்காவது தந்திரம் தொடங்குகிறது. அதன் முதற்செய்யுள் பின்வருமாறு: கிடைத்த பொருளை முட்டாள் தனத்தினால் இழக்கிறவன் துயரப்பட வேண்டியதுதான். மூல முதலையைக் குரங்கு வஞ்சித்தது. அரசகுமாரர்கள், ‘’அது எப்படி?’’ என்று கேட்க, விஷ்ணுசர்மன் சொல்லத் தொடங்கினார்; ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அந்த மரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்துவந்தது. ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று நீரிலிருந்து வெளிவந்து அந்த நாவல் […]