உள்ளோசை கேட்காத பேரழுகை

This entry is part 16 of 32 in the series 1 ஜூலை 2012

(ஜாசின் ஏ.தேவராஜன்) ஆக பின் நடந்துகொண்டிருக்கிற சம்பவம் 1 இனி அமீராவைப் பள்ளியில் பார்க்கவே முடியாது.அவள் கோலாலம்பூருக்கு மாறிப் போய்விட்டதாக உறுதியாகச் சொல்லிக்கொண்டிருந்தனர். கோலாலம்பூரில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் தூரத்து உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கப் போயிருக்கிறாளாம். எல்லாம் அபுவின் ஏற்பாடு! அந்த ஏற்பாட்டுக்குள் இன்னும் சில ஏற்பாடுகள் அபுவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள் அவை! முன் நடந்த சம்பவம் 1 அமீராவுக்கு நிதானம் தேவைப்பட்டது இப்போது. வகுப்பறையில் அவள் பழையபடி இல்லை. வோங் வழக்கம்போல் […]

காலணி அளவு

This entry is part 14 of 32 in the series 1 ஜூலை 2012

ஒரு முறை ஒரு மனிதன், தனக்குத் தகுந்த காலணியை வாங்கச் சென்றான். அவன் தனக்கு காலணி மிகச் சரியானதாக இருக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு காகிதத்தில் தன்னுடைய காலைப் பதித்து, அதை வரைந்து கொண்டான். அதை எல்லாப் பக்கத்திலிருந்தும் அளந்து, பற்பலக் கணக்குகளைப் போட்டு படத்தைச் சுற்றிலும் கிறுக்கினான். அவன் எழுதியிருந்த அத்தனை எண்களையும் சரி பார்த்தான். ஒன்றுக்கு இரு முறை சரி பார்த்தான். இறுதியாக, அவனது படத்தின் துல்லியத்தில் திருப்தி கொண்டு, நீண்ட தொலைவில் […]

“ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…

This entry is part 9 of 32 in the series 1 ஜூலை 2012

    வேலுச்சாமிக்கு கை நீட்டாமல் முடியாது. கை ஒடிந்து போனதுபோல் உணருவான். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது பை நிறைந்திருக்க வேண்டும். அல்லாத நாள் வெறும் நாள். வருஷத்தின் முன்னூற்றி அறுபத்தைந்து நாளும் ஆபீஸ் இருந்தாலும் சரி. அவன் போகத் தயார். ஆனால் பை நிறைய வேண்டும், அவ்வளவே. கையை விட்டால் கத்தையாய் எடுக்க வேண்டும்.     வீட்டுக்குப் போய்த்தான் பிரிப்பான். ஐந்து, பத்து, இருபது, ஐம்பது, நூறு என்று. அதுவரை வாங்கி வாங்கிச் செருகுவதுதான் ஜோலி. மேலாகக் […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1

This entry is part 7 of 32 in the series 1 ஜூலை 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

ஏகாலி

This entry is part 5 of 32 in the series 1 ஜூலை 2012

மிகப் பிரம்மாண்டமான அரங்கம். கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சபையின் நாயகன் 27 வயது இளைஞன். கருத்த நெடிய உருவம். ஒல்லியான தேகம். எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு சாதாரணமான பேண்ட், சட்டை, கண்களில் ஒளி மின்ன, பரபரப்பான பார்வை, சபையில் அலைந்து யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது அவ்வப்போது. அரசு உயர் அதிகாரிகளும், சில விஞ்ஞானிகளும், வெளிநாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே வந்திருந்த தொழிலதிபர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என்று சபை களைகட்டத் தொடங்கியிருந்தது. மகனுக்கு எதற்காக […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32

This entry is part 3 of 32 in the series 1 ஜூலை 2012

36.  குதிரை லாயத்தை ஓட்டியிருந்தது சிறை. அருகிலேலேயே தொழுவமும், குதிரைகள் லாயமும் இருக்கவேண்டும். சிறைச்சாளரத்தின் வழியே உள்ளே விழுந்திருந்த ஒளித்துண்டில், விலங்குகளுக்காக இடப்பட்ட மட்டைக்கோரை, கமரிப்புல், அறுகம் புல், சாமை, கொள் தப்பித்த துகள்கள் மின்மினிப்பூச்சிகள்போல பறந்தன. குதிரைகளின் பொதுவான கனைப்பு, நகைப்பதுபோன்ற கனைப்பு, மூக்கின் சீறல், கால்களை இடம் மாற்றிவைக்கும் குளம்பொலி; பசுக்களின் சந்தோஷம் ‘ம்மா’, கதறல்; கன்றுகளின் கூவல்; எருதுகளின் உக்காரம்; அவற்றின் வாடை; துர்க்கந்தம் சர்வமும் சிறைக்குள் இவன் மிச்சம் வைத்த இடத்தை […]

முள்வெளி அத்தியாயம் -15

This entry is part 1 of 32 in the series 1 ஜூலை 2012

மதியம் மணி பன்னிரண்டு. “இன்னும் கொஞ்சம் காரக் கொளம்பு வெக்கறேன். நல்லாயிருக்கா…?” அவனுக்குக் கமறி விக்கியது. “மெதுவா சாப்பிடுடா. ” தூக்க முடியாதபடி வயிறைத் தூக்கியபடி கை நிறைய அடுக்கியிருந்த கண்ணாடி மற்றும் பிற வகை வளையல்கள் ஒலிக்க மலர்விழி எழுந்து ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தாள். “முதல்ல தண்ணியைக் குடிடா” “ஆம்லேட்டை ரசம் வரைக்கும் வெச்சிருக்க மாட்டே.. இரு.. அப்பளம் சுட்டுப் போடறேன்.” அப்பளம் சுட்ட படியே “ஏண்டா.. ஏதோ […]

அவனுடைய காதலி

This entry is part 39 of 43 in the series 24 ஜூன் 2012

கோமதி [*1950இல் எழுதப்பட்டது] நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில் ஒரு செல்வந்தரின் மகள் இருந்தாள். அந்தப் பெண் இந்துமதியை மணம் செய்விக்க முயற்சி செய்தாள். நந்தகுமாரின் அக்கா, தங்கைகள் இந்துமதியின் அழகை வர்ணித்தார்கள். சுருண்ட கூந்தல், சிவந்த உதடு, மைதீட்டிய கண்கள், முத்துப்பற்கள், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி என்று சொன்னார்கள்.   உடனே நந்த குமார் ”செயற்கை அழகு செய்துகொள்ளும் பணக்க்காரப் […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து

This entry is part 37 of 43 in the series 24 ஜூன் 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை   குளிரக் குளிர வாரணாசியில் பொழுது விடிந்து கொண்டிருந்தது. அடை அடையாக அப்பிய பனி மூட்டம் இப்போதைக்குக் கலைகிற உத்தேசம் இல்லை என்கிறது போல் ஸ்நானக் கட்டங்களை மூடி மறைத்தது.   ஓடியும் தேங்கியும் ஒடுங்கியும் விரிந்தும் கடந்த கங்கா நதிப் பிரவாகத்தை அது கீழிறங்கித் தொட்டு,  கவிந்த படிக்கே விடியும் பொழுது.   பஞ்ச பஞ்ச உஷத் காலத்தில் பூவாடையும் பிணவாடையும் மக்கிய இலையும் சோற்றுப் […]

நான் ‘அந்த நான்’ இல்லை

This entry is part 34 of 43 in the series 24 ஜூன் 2012

தெலுங்கில் :B. ரவிகுமார் தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இதோ பாருங்கள்! நீங்க இப்போது திடீரென்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்து, என்னை இந்த கோலத்தில் பார்த்தீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கட்டிய ஆடையுடன் தலையில் குடத்தால் அப்படியே தண்ணீரை அபிஷேகம் செய்துக் கொண்டிருப்பதாக நினைப்பீர்கள். விஷயம் எதுவாக இருந்தால் என்ன? என்னைத் தவறாகப் புரிந்துக் கொண்டவர்களில் நீங்களும் ஒருத்தர் என்று கணக்கிட வேண்டியது தான். ஆனால் நான் ரொம்ப நேரமாய் வியர்வை ஆறாய் வழிய எதையோ […]