நெஞ்சு பொறுக்குதில்லையே

This entry is part 25 of 41 in the series 10 ஜூன் 2012

ஆக்கம்: நடராஜா கண்ணப்பு  லண்டன் “திருப்பி அனுப்பாதே ” சுலோகம் தாங்கியவர்கள் “ச்சிப்போல்” விமான நிலைய தடுப்பு முகாம் பின்பக்க தெருவில் நிறைந்து விட்டார்கள். முதலாவது மேல் மாடி யன்னலில் தெரிந்த குழந்தை கையிலேந்திய அந்தச் சோகமான தாயின் முகத்தைப் பார்த்ததும். “அவையளைத் தான் திருப்பி அனுப்பப் போறாங்களாம்” பிள்ளையோடு நிக்கும் அந்த அனுப்பப் படப் போகும் பெண்ணை அடையாளம் கண்டுவிட்டார் மூர்த்தி “என்ட மடியில் தவழ்ந்த பிள்ளை இப்ப இங்க இந்தச் சிறைக்குள்ள.” மனம் உருகி […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29

This entry is part 19 of 41 in the series 10 ஜூன் 2012

32. வெகு நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் மதிற்சுவருக்கு மறுபக்கம் நள்ளிரவில் தொலைந்த ஆட்டைத்தேடி அலைந்ததும், செண்பகத்துடன் மூன்று காவலர்கள் களையும் பூசாரிஒருவனையும் காணநேர்ந்ததை நினைவு கூர்ந்தான். அவர்கள் செட்டிக்குள திட்டிவாசல் வழியாக கோட்டைக்குள் நுழைந்திருக்கவேண்டும். தவிர காவலர்களின் அனுமதியோடு உள்ளே நுழைந்திருக்கிறார்களெனில் அரசாங்கத்தில் செல்வாக்குள்ள மனிதர்களின் சகாயமின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை. அதிகாரம், செல்வாக்கு என்றுவரும்போது  கள்ளமும் சூதும்  தவறாமல் உள்ளே நுழைந்துவிடும் போலிருக்கிறது. பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கேன் என்றும் கார்மேகம் நினைப்பதுண்டு. பிரதானி நந்தகோபால்பிள்ளை […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5

This entry is part 16 of 41 in the series 10 ஜூன் 2012

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன. பெர்னாட் ஷா (Preface […]

பாரதி

This entry is part 15 of 41 in the series 10 ஜூன் 2012

  மராத்தி மூலம் – விஜய் டெண்டுல்கர் தமிழில் – ராகவன் தம்பி ஓவியங்கள் : வெ.சந்திரமோகன்   கதை மாந்தர்கள் 1. பாரதி 2. பீர்பால் 3. அக்பர் 4. வீர சிவாஜி 5. மிக்கி மவுஸ் 6. நிலா 7. கழைக்கூத்தாடி 8. கோமாளி 9. குதிரை 10. தேவதை 1 11. தேவதை 2 பாரதி (பாரதி வீடு, வீட்டுக்கான மேடை அமைப்பு, மாலை நேரம், பாரதி ஆண்பிள்ளைக்கான உடுப்புக்களை உடுத்தியிருக்கிறாள், வீட்டில் […]

ஊமைக் காயங்கள்…..!

This entry is part 10 of 41 in the series 10 ஜூன் 2012

பாட்டி….பாட்டி..முழிஞ்சிண்டு இருக்கியா பாட்டி…அம்மா…பார்த்துட்டு வரச் சொன்னா…அறைக் கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்து கேட்ட ஏழு வயதாகும் பூரணி கட்டிலில் படுத்திருக்கும் தனது பாட்டியின் அருகில் வந்து பார்க்கவும், தன் பேத்தி பூரணியின் குரல் கேட்டு விழித்த அகிலா… அட…..பூரணிக் குட்டியா….வா..வா…..வா….என்று ஆசையோடு அழைக்க… அப்போ….நீ முழிச்சிண்டு தானே இருக்க….அம்மா…என்னைப் பார்த்துட்டு வரச்சொன்னா….என்று பேத்தி தனது இளம்குரலில் சொல்ல… ஆமாம்டி தங்கம்….பாட்டி முழிச்சுண்டு தான் இருக்கேன்னு அம்மா கிட்ட போய் சொல்லிட்டு வா….எங்கே….இங்கே பாட்டி பக்கத்துல…வா… உன்னைப் […]

சீறுவோர்ச் சீறு

This entry is part 3 of 41 in the series 10 ஜூன் 2012

நகரத்தின் மையப்பகுதியில் பரபரப்பான ஒரு சாலை. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. இடப்புறம் பெரிய காம்பவுண்ட் போட்ட கட்டிடம். அதற்குள்ளே நுழைந்தவுடன் இரு புறமும் அடர்ந்த மரங்கள், செடி கொடிகள்.. மேற்கொண்டு உள்ளே செல்லச் செல்ல பாதை நீண்டு, கட்டிடங்கள் ஒவ்வொன்றாக வரும்.. அக்கட்டிடத்தின் பின் கோடியில் ஒரு பழைய கட்டிடம். வர்ணமெல்லாம் வெளுத்துப் போய், சுவர்கள் பெயர்ந்து தனியாக ஒதுங்கியிருந்தது.. அந்த மொத்தக் கட்டிடமே ஒரு தனித்தீவு போல இருந்தாலும், இந்த பாழடைந்த அறை மேலும் […]

அவன் – அவள் – காலம்

This entry is part 2 of 41 in the series 10 ஜூன் 2012

தெலுங்கில் :G.S. லக்ஷ்மி தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நேரம் – இரவு பத்துமணி. இடம் – பிரைவேட் நர்சிங் ஹோமில் ஒரு ஸ்பெஷல் ரூம். அவன் : மருந்து மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த அவளைப் பார்க்கும் போது அவன் மனம் எங்கேயோ சஞ்சரிக்கத் தொடங்கியது. ஏதேதோ நினைவுகள், அனுபவங்கள். முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கை அவன் கண் முன்னால் நிழலாடியது. முப்பது வருடங்களுக்கு முன்னால் வாழ் நாள் முழுவதும் பத்திரமாக பார்த்துக் கொள்வான் என்ற […]

அத்திப்பழம்

This entry is part 27 of 28 in the series 3 ஜூன் 2012

மு.வெங்கடசுப்ரமணியன் மணி மாலை 6.30யைத் தாண்டிக்கொண்டிருந்தது. 28வது எண் பேருந்தில் இருந்து ஒரு வாட்டசாட்டமான மனிதர் கையில் ஒரு பையோடு இறங்கினார்.  நெரிசலிலிருந்து இறங்கிய அவர் வெளியே வந்த நிம்மதியில் சுதந்திர காற்றை இரண்டு மூன்று முறை சாவகாசமாக இழுத்துவிட்டு தன்னுடலை ஒரு நிலைக்குக் கொண்டுவந்தார். பிறகு, சாலையை கடந்து முக்கியத் தொடர்வண்டி நிலையத்திற்குள் மெல்ல நடந்துவந்தார். அந்த எழும்பூர் நிலையத்தின் தெற்கு நோக்கிச் செல்லும் சில வண்டிகள் அடுத்தடுத்து இருப்பதால் பயணிகளும், அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் […]

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28

This entry is part 24 of 28 in the series 3 ஜூன் 2012

31.     கார்த்திகைமாதம். காலை நேரம். சாம்பல் நிற வானம் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. வடகிழக்குப் பருவக்காற்று சந்திராயன் துர்க்கத்தினாலோ அல்லது அடர்ந்திருந்த தோப்புகளாலோ பாதிக்கப்படாததுபோல கோட்டைச் சுவரில் திறந்த பகுதிகளில், காவலர்க்கோ அரசாங்கத்தின் உத்தரவுக்கோ காத்திராமல் பிரவேசித்து எதிர்த் திசையில் வெளியேறியது. அவ்வாறு வெளியேறுகிறபோது நகரெங்கும் மெல்லிய குழலோசை மெல்லிய புகை மூட்டம்போல எழும்புவதும் படர்வதுமாக இருந்தது. கிருஷ்ணபுரவாசிகள் உட்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேணுகோபாலசாமியே குழலெடுத்து தங்களைப் பரவசப்படுத்துவதாக நம்பினார்கள். பின்னிரவில் ஆரம்பித்திருந்த மழை அதிகாலையில்தான […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றிரண்டு

This entry is part 22 of 28 in the series 3 ஜூன் 2012

  1938 நவம்பர் 18 வெகுதான்ய கார்த்திகை 3 வெள்ளிக்கிழமை   என்ன அய்யரே உக்காந்திட்டு இருக்கும்போதே கண்ணு அசந்திட்டியா? நம்ம கேசு தான் போல இருக்கு அங்கேயும்.   எதிர்பாராத சந்தோஷம் கிடைத்த திருப்தியோடு சிரித்தபடி நாயுடு கயிற்றுக் கட்டிலில் உட்காந்தான். இவன் கிட்டே எப்படிச் சொல்ல?   பக்கத்திலே யாரும் இருக்காளாடா? பேசின மாதிரி இருந்தது.   அவன் எங்கே என்று இலக்கு இல்லாமல் கை காட்டிக் கேட்டான்.   குரல் கேட்குதா? கேக்கும் […]