கிழக்கிலங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்

This entry is part 1 of 11 in the series 12 நவம்பர் 2017

                                                     முருகபூபதி – அவுஸ்திரேலியா ‘புதிர்’ என்னும் சொல்லுக்கு, எமது தமிழர் வாழ்வில் இரண்டு அர்த்தங்கள். ஒன்று அறிவுபூர்வமாக புரிந்துகொள்ளவோ, விளக்கிக்கூறவோ முடியாத மர்மம் (Mystery). மற்றது  வயலில் அறுவடை முடிந்ததும் முதலில் பெறப்படும் நெல் (Newly harvested paddy). இந்த இரண்டு அர்த்தங்களும் கலந்த வாழ்வின் விழுமியங்களை சந்தித்திருக்கும் இலக்கிய நண்பராகவே செங்கதிரோன் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களை இனம்காண்கின்றேன். இவருடைய அண்மைய வெளியீடு விளைச்சல் (குறுங்காவியம்) நூலின் தொடக்கத்தில் தமது அன்னையார் திருமதி கனகம்மா தம்பியப்பா […]

ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்

This entry is part 5 of 17 in the series 13 நவம்பர் 2016

ஆரம்ப பாடசாலை பருவத்திலிருந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் ஈழத்து இலக்கியவாதி முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு, இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள். அவர்கள் தந்த சுதந்திரம் எமது அரசியல்வாதிகளுக்கு தந்திரமானதுதான் மிச்சம். இந்தப்பின்னணியில் முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952 இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர் […]

கதை சொல்லி

This entry is part 12 of 19 in the series 2 அக்டோபர் 2016

பியர் ரொபெர் லெக்ளெர்க்   தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   (Pierre –robert Leclercq  பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது. இக்கதை சொல்லி பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகெல் நாட்டில் இருந்துகொண்டு யுத்தகால அனுபவமென்று கதைசொல்ல முற்படுகிறார். உண்மையா, புனைவா யாருக்குத் தெரியும் ? ஆர்.எல் ஸ்டீவன்ஸன் treasure island ஐ, தனது வீட்டில் அடைந்துகிடந்த […]

கதை சொல்லி

This entry is part 14 of 15 in the series 25 செப்டம்பர் 2016

பியர் ரொபெர் லெக்ளெர்க் தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா   (Pierre –robert Leclercq  பிரெஞ்சு படைப்பாளி சிறுகதைகள், கவிதைகள்,நாவல்கள், நாடகங்களென ஐம்பதுக்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியுள்ளார். குறுநாவலையொத்த இச்சிறுகதை ‘Griot’ என்று ஆப்ரிக்க மொழியில் அழைக்கப்படும் ஒரு கதைசொல்லியைப் பற்றி பேசுகிறது. இக்கதை சொல்லி பிரெஞ்சுக் காலனியாக இருந்த செனெகெல் நாட்டில் இருந்துகொண்டு யுத்தகால அனுபவமென்று கதைசொல்ல முற்படுகிறார். உண்மையா, புனைவா யாருக்குத் தெரியும் ? ஆர்.எல் ஸ்டீவன்ஸன் treasure island ஐ, தனது வீட்டில் அடைந்துகிடந்த நிலையில் […]

பிரிட்டனைப் பிரான்சுடன் இணைக்கும் ஈரோக்குகை உலகிலே நீண்ட கடலடிக் கணவாய் 

This entry is part 7 of 10 in the series 27-மார்ச்-2016

  [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா  https://youtu.be/L7GFFntXi8I முன்னுரை:   13,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் தீவு இயற்கையாகவே இருந்த குறுகிய நிலச்சந்தி மூலம் ஈரோப்புடன் இணைந்திருந்ததாகத் தளவியல் ரீதியாக அனுமானிக்கப் படுகிறது! கி.பி.1750 ஆம் ஆண்டிலே இங்கிலாந்திற்கும், பிரான்சிற்கும் கடலடிக் குகை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமும் முயற்சியும் இருந்தது வரலாற்றில் அறியப் படுகிறது! பிரென்ச் அதிபதி நெப்போலியன் ஆணையின் […]

பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்

This entry is part 15 of 18 in the series 14 பெப்ருவரி 2016

(San Francisco Golden Gate Suspension Bridge) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்! சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்! வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்! பாரதியார் (பாரத தேசம்) ++++++++++++ முன்னுரை: கி.மு. 2015 இல் ( ?) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் […]

நினைவுகளின் சுவட்டில் (105)

This entry is part 12 of 26 in the series 9 டிசம்பர் 2012

கொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் […]

நானும் அவனும்

This entry is part 29 of 33 in the series 11 நவம்பர் 2012

சு.பிரசன்ன கிருஷ்ணன் இப்போது 2012 இல் என்னுடைய 37 ஆவது அகவையில் கிருஷ்ணன் மற்றும் என்னுடைய வாழ்க்கை சரித்திரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஆங்கிலத்தில் ஆட்டோ-பயோக்ராஃபி.. இதையெல்லாம் புத்தகமாக வெளியிட ஏதாவதொரு மடையன் முன்வர வேண்டும்..அப்படி என்ன நான் கிழித்து விட்டேன் என்று இதை படிக்க நேரும் போது உங்களுக்கு தெரியும். 37 மாதங்களில், 37 நாட்களில், 37 மணி நேரங்களில், ஏன் 37 மணி துளிகளிலும் கூட என் இனத்தவர்கள் அழிந்ததுண்டு. ஆனால் என் […]

தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்

This entry is part 32 of 43 in the series 29 மே 2011

எண்பதுகளின் இறுதியில் அலுவலக வேலையாக மாதத்துக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டுமுறையாவது கர்நாடகத்திலிருந்து சென்னைக்கு வந்துவிடுவேன். சென்னையில் எங்கள் தலைமை அலுவலகம் இருந்தது. பெரிய அளவில் கேபிள் சேமிப்புக்கிடங்கும் சென்னையில்தான் இருந்தது. நாங்கள் வேலை செய்யும் இடத்துக்கு கேபிள் உருளைகளை சென்னையிலிருந்துதான் சரக்குந்துகளில் ஏற்றி அனுப்புவார்கள். தமிழ் தெரிந்தவன் என்கிற காரணத்தை முன்னிட்டு இந்தப் பயணவாய்ப்பு எனக்குத் தரப்படும். அலுவலக வேலையை முடித்தபிறகு கிடைக்கிற குறைந்தபட்ச கால அவாகாசத்தை நண்பர்களைப் பார்த்து உரையாடவும் புத்தகக்கடைகளுக்குச் செல்லவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்னும் […]