தினம் என் பயணங்கள் – 47 யுக்தி

This entry is part 12 of 23 in the series 20 டிசம்பர் 2015

தினம் என் பயணங்கள் – 47 யுக்தி ஜி. ஜே. தமிழ்ச்செல்வி இந்த யுக்தி எனக்கு புதியதாகத் தெரிந்தது. அவன் நெடுநெடுவென்று வளர்ந்திருந்தான். மாநிறம். முகத்தில் அம்மைத் தழும்புகள், அவனை விகாரமாய் காண்பிப்பதற்கு பதிலாக வித்தியாசப்படுத்தியிருந்தது. அடர் கத்தரிபூ நிறத்தில், கருநிற பட்டைக் கோடுகள் தரித்த சட்டை அணிந்திருந்தான். “மேடம் கார்ட் வந்திருக்காம், என் ஃபிரண்ட் சொன்னான்” என்றான். “எங்க அப்ளே பண்ணீங்க ?” “ஆன்லைன்ல” “ஆன்லைன்ல பண்ணதெல்லாம் இங்க வராது, 25 ரூபாய் பணம் கட்டி, […]

தினம் என் பயணங்கள் -46

This entry is part 7 of 23 in the series 4 அக்டோபர் 2015

  எத்தனைத் துயரங்களோடு துவங்கி விட்டது இன்றைய தினம். (04.10.2015) ஏதோ முரண்பாடுக்கொண்ட எண்ணங்கள் மனதைக் கொத்தி உணவாக்கிக் கொள்ள முனையும் அத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றபடி தவழ்கிறது இன்றைய வாழ்வியல் பயணம். சாலை வெறிச்சோடி இருந்தது. சைக்கிள் பயணம் போல் என் ஸ்கூட்டி பயணம் இல்லை. துரிதமாய்க் கடந்து விடுகின்றன காட்சிகள். மனிதர்களும்தான் வேக ஓட்டத்தில் காணாமல் போய் விடுகிறார்கள். அலுவலகத்திற்குள் நுழையும் போதே கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. சேரும் சகதியுமான தெருவையும், […]

தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!

This entry is part 11 of 24 in the series 13 செப்டம்பர் 2015

ஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறது. யக்கோவ் குப்பேத்தாக்கோவ் (அக்கா குப்பை எடுத்து வாங்க அக்கா) என்று கூவும் பெண்மணியின் குரலோடு விடிந்தது இன்றைய இரவும். ஒருவழியாய் சீரான பாதையை நோக்கிப் பயணம் செய்கிறேன் என்று எண்ணுகிறேன். இது இலக்கை நோக்கிய பயணம். மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் நிறுவனத்தை உருவாக்கும் முயற்சி! அதுவே என் இதயத் துடிப்பு நிறுவகப் பயிற்சிக் கூடம். எவ்வளவு யோசித்தும் அவர்களுக்கு ஏற்ற ஏதுவான தொழில் எதுவும் எனக்குத் தோன்றவில்லை. […]

தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !

This entry is part 16 of 27 in the series 6 செப்டம்பர் 2015

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி குழந்தை, கவிழப் பழகி, பின் கவிழ்ந்தபடி நகரப் பழகி, முழங்காலிட்டு நகரும், குழந்தைப் பருவம் போல், நானும் இந்த வயதில் முழங்காலிட்டு அந்த நீண்ட பாதையில் நகர்ந்து கொண்டிருந்தேன். முழங்காலிடுதலும் சில அரியக் காட்சிகளைக் கண்டுவிட ஏதுவாகும் போலும். அப்படி முழங்காலிட்டு நகர்ந்த போது தான் அந்த பல்லி துடித்துக் கொண்டிருப் பதைப் பார்த்தேன். அதன் வால் துண்டிக்கப்பட்டிருந்தது. அதன் நிறமோ மரப்பட்டையின் வெடிப்பின் நிறம் கொண்டிருந்தது. ஒரு கண் பழுதடைந்து குருதி […]

தினம் என் பயணங்கள் – 43 பட்ட காயமும் சுட்ட வேலையும்.. !

This entry is part 22 of 28 in the series 22 மார்ச் 2015

  சற்று நேரம் அமைதியாய் இருந்த என் உடல் செல்கள் வலியினால் அலரத் துவங்கிக்கொண்டிருந்தது. என்னைக் கொண்டு போய் க்ளினிக் கட்டிலில் படுக்க வைத்தார்கள். அங்கு வந்த சங்கர் அண்ணாவிடம், என் அம்மா, கால்ல சுடுதண்ணி கொட்டிக்கிட்டாப்பா என்று கூற, என்னைப் பார்த்து, உனக்கேம்மா இந்த வேலை என்றார். நானே வேண்டும் என்று சுடுதண்ணீரை எடுத்து என் மேல் கொட்டிக்கொண்டதைப் போல.   அவ கொட்டிக்கலப்பா அவ பொண்ணு தவறிக் கொட்டிட்டா என்றாள் அம்மா.   அச்சோ […]

தினம் என் பயணங்கள் – 42 பாராட்டும் பட்ட காயமும் .. !

This entry is part 18 of 25 in the series 15 மார்ச் 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி சில்லென்ற காற்று உடல் தழுவும் உணர்வைப் போல மனம் ரம்மியமாய் இருந்தது அன்றைய பொழுது. திரு.வையவன் அவர்கள், “தமிழ்ச்செல்வி உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தப் போகிறோம். அன்னை நிர்மலா தொழிற்பயிற்சி மையத்தில்,” என்ற பொழுது, எனக்குள் உதயமான கேள்வி, நான் என்ன சாதித்து விட்டேன் எனக்கு பாராட்டுவிழா நடத்துகிறார்கள் என்பதுதான். இந்த பாராட்டு விழாவில் எல்லாம் எனக்கு நாட்டமில்லை. வேண்டாம் என்றேன். அவரோ “உன் சாதனை களைப் பற்றி உனக்கு தெரியா திருந்தாலும், உன்னைப் […]

தினம் என் பயணங்கள் – 41 எரிவாயுக்கு மான்யம் .. !

This entry is part 9 of 22 in the series 8 மார்ச் 2015

  வாழ்க்கை சில நேரம் புதிய கதா பாத்திரங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்பே அவர்கள் வேறு கதா பாத்திரங்களையும் முகத்தில் அணிந்திருப்பார். அம்மா, அக்கா, தங்கை, மனைவி, சிநேகிதி, விரோதி என்று ஒரே நபருக்குள் எத்தனை முகமூடிகள் ? அப்படியான ஒருத்தியை நான் சமீபத்தில் சந்தித்தேன். அவள் ஒரு புத்த பிக்குவைப் போலிருந்தாள். ஆனால் அவளை எனக்கு முன்பே தெரியும், இந்த புத்த பிக்கு வேடம் தரிப்பதற்கு முன்பே!. சமூகத்தில் திறமையான வழக்குரைஞர் ஒருத்தின் தாயார் […]

தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !

This entry is part 29 of 33 in the series 4 ஜனவரி 2015

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அன்று சனிக்கிழமை காலை. புதிய வருடத்தில் புதிய உறவைத் தேடிய பயணம் இது. நேற்றே துணை வட்டாட்சியர் திருமதி. மலர்க்கொடி அவர்கள், பாதி நேரம் வந்துட்டு போய்டும்மா என்று பணித்திருக்க, அலுவலகம் செல்லும் எண்ணத்தோடு எழுந்த எனக்கு காத்திருந்தது இறுக்க உணர்வு. துவைக்கப்படாத துணிக்காக அலுத்து, பழைய உடைகளை மாற்றி மாற்றி போட்டு எதுவும் சரிப்படாததால் இப்படி முடியாமைக்கு அலுத்துக் கொண்டேன். இந்த உலகத்தில் வாழ்வதை விட சாவதே மேல், கொஞ்சம் துணியை துவச்சிருக்கக் […]

தினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3

This entry is part 14 of 23 in the series 21 டிசம்பர் 2014

    திரு.வையவன் அவர்களின் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழ் வரும் போது, பல நாள் பழகிய உறவுகளை விட்டு விலகுவதைப் போன்றதோர் உணர்வு. செங்கை. சொர்ப்பனந்தலிலும் ஒரு இயக்கத்தை துவங்க வேண்டும் என்ற ஜானகி அம்மாவின் விருப்பத்தை நினைவுகூர்ந்தேன். அங்கிருந்து திரு.வையவன் அவர்கள் அன்றாடம் செல்லும் பார்த்த சாரதி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு எங்கள் தாயாரின் குலத் தெய்வமான பத்மநாப சுவாமிகள் கோவில். எப்பொழுதேனும் அவர் கோவிலில் இருக்கும் போது கைப்பேசியில் பேச நேரும் […]

தினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2

This entry is part 22 of 23 in the series 7 டிசம்பர் 2014

  சென்னையில் மழை! மேம்பாலத்தின் வழியே வழிந்து தரை எங்கும் பொட்டு பொட்டுகளாக தெரிந்து கொண்டிருந்த மழைத் துளிகள் கண்களுக்கு ரம்மியக் காட்சியை ஏற்படுத்தினாலும், மனதிற்குள் ஒரு திகில் உணர்வு. சென்னையிலிருந்து எடுத்து வரப் புறப்பாடு செய்தது புத்தகமும் கம்பியூட்டரும் பெற்றுக் கொள்ள. இரண்டிற்கும் மழை என்றால் அலர்ஜி அல்லவா ? கார் ஜன்னலின் வழியே காட்சியாக்கப்பட்டது மாற்றுத்திறனாளி ஒருவரின் மூன்றுச் சக்கர மோட்டார் வாகன பயணம். அது போன்றதொரு வாகனத்தை நானும் வாங்க வேண்டும் என்ற […]