author

வாழ்ந்து காட்டிய வழிகாட்டி

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

  ‘மரைக்காயருக்கு குழாய் வழிதான் எல்லாமுமாம்.  கடைசியாக தம்பி  பார்த்தபோது நான் எப்போ வருவேன் என்று கேட்டாராம். இரண்டு நாட்கள்தான் தாக்குப்பிடிக்குமாம். உறவினர்களுக்குச் சொல்லிவிடுங்கள் என்று டாக்டர் சொல்லிவிட்டாராம்.’ என்று சொல்லி தம்பி தொலைபேசியை வைத்துவிட்டான். மதியம் உண்ட சோறும் காளாமீன் கறியும் நெஞ்சுக்குழியை விட்டு இறங்காமல் மேலே வரவா என்று கேட்கிறது. மரைக்காயரை இந்த நிலையில்  போய்ப் பார்க்காவிட்டால் அது  மரணதண்டனைக் குற்றம் என்றது மனசாட்சி. மீண்டும் தொலைபேசியை எடுத்தேன். அடுத்த முனையில் தம்பி. ‘நாளைக் […]

சிங்கையிலிருந்து திருச்சி செல்லச் செலவில்லை

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

  ‘நாடகங்களின் வளர்ச்சி பற்றிய கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘சிங்கையில் நாடகங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தரமுடியுமா? எங்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியுமா?’ தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் அயல்நாடுகளில் தமிழ்க்கல்வித் துறையிலிருந்து அன்பு அழைப்பு. ஏற்றுக்கொண்டேன். உற்றாரையும் உடன்பிறந்தோரையும் பார்க்கலாம். ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்பது போன்ற வாய்ப்பு. தயாரானேன். பயணச்சீட்டு, விசா, கருத்தரங்கிற்கு கட்டுரை எல்லாம் தயார். முஸ்தபா கடையில் சில பேனாக்கள்,  மிட்டாய்கள், ரொட்டிகள், சில துணிகள் வாங்கிக்கொண்டு வெளியேறினேன். […]

பிச்சை எடுத்ததுண்டா?

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

‘பிச்சை எடுத்ததுண்டா?’ என்று உங்களைக் கேட்டால் கையில் கிடைத்ததை எடுத்து சாத்து சாத்து என்று சாத்துவோமா என்று நீங்கள் ஆத்திரப்படுவீர்கள். ஆனாலும் கேட்கிறேன். ‘பிச்சை எடுத்திருக்கிறீர்களா?’  இப்போது பதில் சொல்ல வேண்டாம். இந்தக் கதையை படித்து முடித்துவிட்டுச் சொல்லுங்கள். 70 களில் அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு பயணச்சீட்டு 1 ரூபாய் 10 காசு. நீங்கள் 1.25 கொடுத்தால் பயணச்சீட்டுக்குப் பின்னால் 1.25 என்று எழுதிக் கொடுத்துவிடுவார் நடத்துநர். அவர் ஞாபகமாகக் கொடுத்துவிட்டால் ஓர் அதிசய நிகழ்ச்சியாக நிச்சயம் உங்கள் […]

குலப்பெருமை

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

  கிழக்கு மேற்காய் 120- அடிக்கு 18 அடி அளவில் நீண்டு கிடக்கும் ஓட்டுக் கட்டிடம்தான் த.சொ.அ. தனுஷ்கோடி நாடாரின் வீடு. நான்காவது தலைமுறையாக அதில் வாழ்கிறார். கிழக்கு முனையில் இரண்டு தடுப்புகள் பூட்டியே கிடக்கின்றன. மேற்கு முனையில் மூன்று தடுப்புகளில்தான் புழக்கம். ‘த.சொ.அ. தனுஷ்கோடி நாடார் மரம் ஓடு வியாபாரம்’, ஏழெட்டு ஏக்கர் விவசாய நிலம் இவைகள்தான் வருமானம் தரும் சொத்து. மனைவி காமாட்சி அம்மாள். அவரின் ஒரே கொள்கை. ‘யார் எங்கு போனாலும் சாப்பிட […]

முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லை

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

எங்கள் வீடுதான் நடு. இடப்பக்கம் சித்தப்பா வீடு.. வலப்பக்கம் பெரியப்பா வீடு. சித்தப்பா வீட்டில் இரண்டு தம்பிகள் பெரியப்பா வீட்டில் இரண்டு அண்ணன்கள், நான் என் தம்பி ஆக  ஆறு பேரும் ஒரே துவக்கப்பள்ளியில்தான் படிக்கிறோம். காலை 8.30க்கு எங்கள் தெருவில் இருக்கும் மின்கம்பத்தின் கீழ் கூடிவிடுவோம். வேறு இரண்டு பையன்களும் சேர்ந்துகொள்வார்கள். நாங்கள் ஏழெட்டுப்பேர் ஒன்றாக பள்ளிக்குச் செல்வோம். எங்கள் தெரு தாண்டி பட்டுநூல்காரத் தெரு தாண்டி பழைய ஆஸ்பத்திரி தாண்டினால் எங்கள் பள்ளிக்கூடம். கிட்டத்தட்ட […]

திண்ணையில் எழுத்துக்கள்

This entry is part 26 of 29 in the series 12 ஜனவரி 2014

வணக்கம் திண்ணையில் எழுத்துக்கள் பழைய வடிவமைப்பில் குறியீட்டில் இருப்பதை மாற்றமுடியாதா.? இன்றைய தலைமுறையில் பல பேருக்கு விளங்காமல் போகலாம் உதாரணமாக     ணை, னை, லை, மற்றும்          றா, னா,ணா, நன்றியுடன் யூசுப் ராவுத்தர் ரஜித்

இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

காலையில் எழுந்தவுடன் முதலில் விழிப்பது இந்த திரைச்சீலையில்தான். திரைச்சீலை என்றால் புரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தூய தமிழில் சொல்லிவிடுகிறேன். ‘ஸ்க்ரீன்’. அதன் காதுகள் கழன்றுகொண்டு அரைக்கம்பத்தில் பறந்து துக்கத்தைச் சொல்லும் தேசியக்கொடிபோல் தொங்குகிறது. எழுந்து மீண்டும் அந்தக் காதுகளை ஒழுங்காக வைத்து அமுக்கிவிட்டால் இரவு படுக்கைக்குப் போகும்போது மீண்டும் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடியாகிவிடும். காலை எழுந்ததும் பல் தேய்த்து முகம் கழுவுவதுபோல் இந்தத் திரைச்சீலையைச் சரிசெய்வது வாடிக்கையாகிவிட்டது. ஒரு திரைச்சீலைக்கு ஏழு காதுகள். அந்தக் காதுகளின் […]

சில ஆலமரங்களுக்கு விழுதுகள் இல்லை

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

1   அது ஒரு முக்கியமான இரவு. மணி 11.15. பெருமழை நின்று தூறல் தொடர்ந்துகொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடிகளில் மழைநீர் பாம்பாக நெளிந்து இறங்கிக் கொண்டிருந்தது. கழுவப்பட்ட காற்று அறைக்குள் வியாபித்து விழித்துக்கொண்டே படுத்திருந்த மதியழகனின் உடம்புஉஷ்ணத்தை திருடிச் சென்றதில் அவருக்கு லேசாக குளிர் தட்டியது. கம்ப்யூட்டர், டிவி, மோடம் இத்யாதிகளின் பச்சை மஞ்சள் ஒளிப் பொட்டுக்கள் அசையாத மினுக்கட்டான் பூச்சிகளாய் மின்னின. பக்கத்தில் மனைவி வடிவு என்கிற வடிவுக்கரசி ‘தூங்ஙிவிடக்கூடாது’ என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போய் விட்டதை […]

இளைஞன்

This entry is part 3 of 29 in the series 3 நவம்பர் 2013

  யூசுப் ராவுத்தர ரஜித் ‘ஓ’ நிலைத் தேர்வு முடிவுடன் இதோ நம் இளைஞன். 6 பாடங்களில் 17 புள்ளிகள். 5 பாடங்களில் 13 புள்ளிகள். தொடக்கக் கல்லூரியா?  தடையில்லை. பல்துறைக் கல்வியா? அதற்கும் தடையில்லை. இந்தப் புள்ளிகளை வைத்துக் கோலம் போடவேண்டும். எந்தக் கோலத்தை எப்படிப் போடப் போகிறான். அதற்கு முன் அந்த இளைஞனைப் பற்றித் தெரிந்து கொள்வோம். இவன் பெயர் சசிகுமார். சுருக்கமாக சசி. ‘ரேப்’ பாடல்களில் அதிக ஈடுபாடு. ஆங்கிலத்தில் காதல் கவிதை […]

அத்தம்மா

This entry is part 11 of 31 in the series 13 அக்டோபர் 2013

யூசுப் ராவுத்தர் ரஜித் (புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமனாதபுரம் மாவட்டங்களில் இன்றும் வழக்கிலுள்ள சொல் அத்தம்மா. அத்தா என்றால் அப்பா. அத்தாவின் அம்மா அத்தம்மா.) சுப்ஹு தொழுத கையோடு சேர்ந்திருக்கும் அழுக்குத் துணிகளை அள்ளிக் கொண்டு அரசமரக் குளத்திற்குச் செல்வார் அத்தம்மா. கூடவே நானும் செல்வேன். அதிகாலை எழும் பழக்கம் எனக்கு அத்தம்மா கற்றுக் கொடுத்ததுதான். இரவு கொஞ்சம் வெளிச்சத்தைப் பிசைந்துகொண்ட அதிகாலை. அந்தக் குளத்தை ஒவ்வொரு பொழுதும் முதலில் பார்ப்பது சூரியனும் அத்தம்மாவும்தான். ஒரு செம்ப்ராங்கல்லுக்கு அருகில் […]