உங்களில் யார் அடுத்த பிரபுதேவா

This entry is part 31 of 41 in the series 8 ஏப்ரல் 2012

இலக்கியச் சர்ச்சைகள், இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி ”போட்டிகள்” என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஏனோ பல நாட்களாக என் மனதுக்குள் ஓர் எண்ணம் இருந்து கொண்டே வந்தது. போட்டிகள் என்பதன் அர்த்தம் தோற்பது அல்ல என்ற கருத்துப்பட எழுதுவதற்கு ஏற்ற முன்னுரை தேடிக்கொண்டு இருந்த பொழுது அண்மையில் ஒரு நாள் விஜய் தொலைக்காட்சியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியை மாலைத் தேனீருடனும் […]

ஓ… (TIN Oo) ………….!

This entry is part 30 of 41 in the series 8 ஏப்ரல் 2012

காந்திய மண்ணில் வளர்ந்து, காந்தீய சிந்தனையை உள்வாங்கிக்கொண்டு, அகிம்சா வழியில், போராடி, வீட்டுச் சிறையில் பல்லாண்டுக் காலமாக, ராணுவ அடுக்கு முறையால்,அடைக்கப்பட்ட, ஒரு பெண் பறவை,இன்று அரசியல் வானில் சுதந்திரமாக பறக்க ஆரம்பித்துள்ளது- அனுங் சான் சூ குயீ. ( AUNG SAN SUU KYI) சமீபத்தில் மாயான்மாரில் நடந்த தேர்தலில், குயீ, ஜனநாயாக கட்சியிலிருந்து, பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று, ராணுவ அடக்கு முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மீண்டும் மயான்மாரிலும் காந்தியம் மலர்ந்துள்ளது. மாயான்மார், பல்லாண்டுக் […]

வார்த்தைகள்

This entry is part 29 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சில நேரங்களில் மௌனங்களில் அடைப்பட்டு விடுகிறது சில நேரங்களில் உச்சரிக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்படுகிறது சொல்ல வேண்டிய தருணங்களை கடந்து வெறுமையை நிறைத்து கொள்கின்றன சில நேரங்களில்.. ஒருசொல் போதுமானதாயில்லை எப்பொழுதும் வார்த்தையில் தொங்கிகொண்டிருப்பதிலேயே கழிந்து விடுகிறது வாழ்க்கை.

“சூ ழ ல்”

This entry is part 28 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சுறுசுறுப்பாக வேலை ஓடியது ராகவாச்சாரிக்கு.. சுற்றிலும் படர்ந்த அமைதி. வாசலில் அடர்ந்து பரந்து விரிந்திரிக்கும் மரத்தின் குளிர்ச்சியான நிழல். தலைக்கு மேலே சரசரவென ஓடிக் கொண்டிருக்கும் மின் விசிறி. அதன் சத்தம் மட்டும் துல்லியமாய் காதுகளில். கதவைச் சாத்திடு…யாருக்கும் நான் இருக்கிறதைச் சொல்ல வேண்டாம்…என்று விட்டு, தனது டூ வீலரையும் உள்ளே தூக்கி நிறுத்தியிருந்தார். விடுமுறை நாளில் வேலைக்கு வருவது நிலுவை வேலைகளை முடிக்க. அன்றும் யாரேனும் தேடி வந்து விட்டால் வேலை கெட்டுப் போகும். அதோடு […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நோக்கிய தோரண ஒளிவண்ணங்கள் (Aurora) !

This entry is part 27 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  (கட்டுரை: 71) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி துருவங்களில் நர்த்தனம் செய்யும் வண்ணத் தோரணங்கள் காணும் ! முன்பு சனிக் கோளின் வட துருவத்தில் தனித்துச் சுற்று கின்ற ஆறுகரச் சட்ட அலை வடிவம் கண்டது ! அது வாயு முகில் கோலமா ? பூதக்கோள் வியாழனில் செந்திலகம் போலொரு விந்தை முகில் குந்தி உள்ளது பல்லாண்டு காலமாய் ! நாசாவின் விண்ணோக்கி பரிதி மண்ட லத்திலே உருவில் […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20

This entry is part 26 of 41 in the series 8 ஏப்ரல் 2012

“அரசகுற்றத்திற்கு மரணதண்டனைபெற்ற அநேகருக்கு இங்கே தான் சமாதி. நேற்று அரசர் பரிவுடன் நடந்துகொண்டார்.இல்லையெனில் கணிகைப்பெண் சித்ராங்கியும் இந்தக்கிணற்றில்தான் பட்டினி கிடந்து செத்திருப்பாள். கொஞ்சம் இப்படி வாருங்கள். இந்த இடத்தில் காதை வைத்து கேளுங்கள். ” 22. சாம்பல் நிற கீரி ஒன்று முட்செடிபுதரிலிருந்து மெல்ல ஓடி வருகிறது. இவர்களைப்பார்த்ததும் அசையாமல் ஓரிரு கனங்கள் நிற்கிறது. தனது கூர்மையான கருத்த மூக்கை அரசமர சருகுகளைச் சீய்த்து எதையோ தேடுவதுபோல பாவனை செய்தது. நிமிர்ந்தபோது அதன்கண்களிரண்டும் இளம்வெயிலில் ஈரத்தன்மையுடன் ஒளிர்ந்தன. […]

மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!

This entry is part 25 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்! கவிஞர் கண்ணதாசனின் இனிய கவிமொழியில், டி.எம்.சௌந்தரராசன் அவர்களின் தேனினும் இனிய குரலில், பாசமலர் எனும் திரைப்படத்தின் பிரபலமான பாடல் இது. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது, நண்பர் கேட்ட ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ”ஒரு தங்கை உறங்குகிறாள், ஆனால் கவிஞர் மலரைப்போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்லாமல் ஏன் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்ல வேண்டும்” […]

புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்

This entry is part 24 of 41 in the series 8 ஏப்ரல் 2012

ம ந ராமசாமி >>> என் இலக்கியப் பணியை அங்கிகரிக்கும் நிமித்தமாக இங்கே எனக்கு விருது வழங்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். இது சம்பந்தமாக ஒரு விவரத்தை நான் தெரிவிக்கக் கடமைப்பட்டு உள்ளேன். விருது வழங்கப்பட்டதால் இனி நான் எழுதும் எழுத்தில் ஒரு தயக்கம் ஏற்படும் என்பதான ஐயம் என்னுள் எழுகிறது. பெற்ற பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே என்பதான அச்சம். அக்காலத்தில் கல்கி சொல்வார். ”ஒருவர் எழுதுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அவரை அழைத்து கழுத்தில் ஒரு பூமாலையைப் போடுங்கள். […]

விளையாட்டு

This entry is part 23 of 41 in the series 8 ஏப்ரல் 2012

பார்வையாளர்கள் குறித்த பதட்டங்கள் ஏதுமின்றி ஒரு விளையாட்டு துவங்கியது கேள்விப்பட்டிடாது புதிதாக இருக்க எல்லோர் நாவுகளிலும் பற்றிய தீ வரைபடங்களில் மிளிரும் நாடுகள் மீதும் நகரத் துவங்கியது தேச நலனுக்கு பெரும் குந்தகம் வந்ததென கமிட்டிகளை நியமித்தது அரசு புத்தி ஜீவிகள் கணிப்புகளை மேற்கோள்களின் நிழலில் வைத்தனர் குறிசொல்லி சாமியாடிகளும் அவிழ்க்கத் துவங்கினர் பொய் மூட்டைகளை சமூக அறிஞர்கள் சந்தோசங்களை பகிர்ந்தனர் வேப்ப மரத்தில் பால் ஒழுகுகிறதெனும் செய்தியென அசட்டையாக இருந்த என்னுள்ளும் ஆவல் பற்றிக்கொள்ள ஓடினேன் […]

அரிமா விருதுகள் 2012

This entry is part 22 of 41 in the series 8 ஏப்ரல் 2012

குறும்பட விருது அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன் வழங்கும் சிறந்த குறும்படங்களுக்கான ரூபாய் 10,000 பரிசு கடந்த 2 ஆண்டுகளில் வெளியான குறும்பட ஆவணப்பட, குறுந்தகடுகளை அனுப்பலாம். சக்தி விருது கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை இரு பிரதிகள் அனுப்பலாம். கடைசி தேதி: 20.5. 2012. ============================================================================== அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர்:திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 34,ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூர்.641 603 தொடர்புக்கு : 9443559215., 92445428888 அன்புடையீர் […]