கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”

This entry is part 10 of 32 in the series 15 ஜூலை 2012

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தமிழிலக்கிய உலக மாநாடு 07.07.2012 சனிக்கிழமை ‘காப்பியங்கள் ‘ அமர்வில் ஆற்றிய தலைமை உரை   முன்னுரை : கம்பன் – கன்னித் தமிழுக்குக் காவிய மாளிகை கட்டி எழுப்பியவன்! பல்லாயிரம் வீரர்களோடு படையெடுத்துச் சென்று பல்லாயிரம் பேர்களைக் கொன்று புவிச் சக்கரவர்த்தியானவர் பலருண்டு! பன்னீராயிரம் பாடல்களால் படையெடுத்து வந்து பல்லாயிரம் பேர்கள் உள்ளம் புகுந்து கவிச் சக்கரவர்த்தி ஆனவன்.கம்பன் ! கம்பனின் காவியத்தை ஓரங்கட்டிவிட்டுத் தமிழிலக்கிய வரலாற்றை (ஏ) மாற்றி எழுதமுடியுமா? […]

நகரமும் நடைபாதையும்

This entry is part 9 of 32 in the series 15 ஜூலை 2012

கு.அழகர்சாமி ஒரு நகரின் நிலை நன்றா இல்லையா என்பதை எப்படித் தேர்வது? அந்த நகரின் நடை பாதைகள் நிலையைப் பாருங்கள். இப்படி ஒரு கருத்தை சென்னைக்கு வருகை தந்த ஒரு வெளி நாட்டு மேயர் ஒருவர் சொன்னதாய் இந்து நாளிதழில் எப்போதோ படித்த நினைவு. சொன்ன கருத்தில் ஒரு மேலை நாட்டுப் பின்னணியும் கண்ணோட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலை நாட்டு நகர் ஜனத் தொகையையும் , நம் நகரங்களின் ஜன நெரிசலையும் ஒப்பிட முடியாது […]

சிறிய பொருள் என்றாலும்…

This entry is part 8 of 32 in the series 15 ஜூலை 2012

கோமதி நான் வீட்டை விட்டுக் கிளம்பி பத்துநாட்கள் ஆகிவிட்டன. புறப்படும்போது வித்யா திரும்பத்திரும்பச் சொன்னாள். ”இரண்டு தோசை சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்றாள். என் வேலைகளின் நடுவில் நேரமேயில்லை. அதனால் எனக்கு எந்தச் சிற்றுண்டி சாப்பிடும்போதும் என் வித்யாவின் தோசையே மனதில் நின்றது. கண்ணன் பாட்டில் சொல்வார்களே, ‘பஞ்சுபோல் தோசைவார்த்து அஞ்சு தோசை வைத்து அதன்மேல் வெண்ணெய் வைத்து”, என்று. அப்படி அருமையாக வித்யா தோசை வார்ப்பாள். நான் மறுபடி ஊருக்குப் போகக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். […]

நட்ட ஈடு

This entry is part 7 of 32 in the series 15 ஜூலை 2012

    பொருள் வழிப்பிரிந்ததினால் சேர்ந்து களிக்காமல் மகன் கணக்கில் இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம் ஈடு செய்து கொண்டிருக்கிறார் முதுமையில், பேரனுடன் விளையாடும் தாத்தா. மேலும் கடனாய் முத்தங்களை வாங்கியபடி. லேசான மனங்களைப்போல் உயரே பறக்கிறது காற்றாடி வாலை வீசி… வீசி.

என் காவல் சுவடுகள் – புத்தக மதிப்புரை.

This entry is part 6 of 32 in the series 15 ஜூலை 2012

பவள சங்கரி ஓய்வு பெற்ற ஒரு சி.பி.ஐ. உயர் அதிகாரியின் மலரும் நினைவுகள்   ஆசிரியர் : கே.ஏ. ராஜகோபாலன் ஆங்கில மொழியின் தமிழாக்கம் : ராணிமைந்தன் பக்கம் :320 முதற்பதிப்பு – பிப்ரவரி 2000   நடுவண் புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigation)  பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகச் செயல்படுகிற, நாட்டுப் பாதுகாப்பு குறித்த முக்கிய விசயங்களை ஆய்வு செய்யும் இந்திய அரசாங்கத்தின் உயர்நிலை புலனாய்வுத் துறைதான் சி.பி.ஐ என்கிற இந்தத் […]

2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நியூ ஹொரைசன் விண்கப்பல் !

This entry is part 23 of 32 in the series 15 ஜூலை 2012

  (கட்டுரை -2) (New Horizon Spaceship) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு வீச்சில் வேகம் உந்திச் சென்று விரைவாய் உளவப் போகுது புளுடோ வையும் சேரன் துணைக் கோளையும் ! ஆயுள் நீடிக்க ஒய்வில் முடங்கிய கருவிகள் சோதிக்கப் பட்டன ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து கியூப்பர் வளையத்தின் கோள்களை உளவச் செல்லும் ! வால்மீன் மந்தைகள் வளர்ப்பிடத்தை நேராக உளவு […]

காத்திருப்பு

This entry is part 5 of 32 in the series 15 ஜூலை 2012

காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய தூசுப் படலத்தினுள் சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும் அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன பகல் முழுதும் தீக் கண்களால் பார்த்திருந்த வெயில் மேகக் கூட்டத்துக்கு மேலும் நீர் கோர்த்தது கதவுகளைத் திறந்தேதான் வைத்திருக்கிறேன் எந்த ஓவியனாவது வந்து வெயிலைப்போல அல்லது சாரலைப்போல ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும் ஒரு தபால்காரனாவது வந்து ஏதேனும் தந்துசெல்லட்டும் ஒரு வண்ணத்துப்பூச்சி பூக்களின் வாசனைகளோடு வந்துசெல்லட்டும் அன்றேல் மெதுநடைப் பூனையொன்றேனும் – எம்.ரிஷான் ஷெரீப் mrishanshareef@gmail.com

லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)

This entry is part 4 of 32 in the series 15 ஜூலை 2012

ஆங்கிலம் வழி தமிழில்: ராகவன் தம்பி பெரும் பாதகமான படுகொலைகளுக்குப் பின் தங்கள் உடல்களிலிருந்து ரத்தக் கறைகளைக் கழுவிய பின் பிரிவினையால் கிழித்துப் போடப்பட்ட இதயங்களின் மீது கவனத்தைத் திருப்பினார்கள் மனிதர்கள். ஒவ்வொரு தெருவிலும் சிறிய சந்து பொந்துகளில் கூட மறுவாழ்வுக் கமிட்டியை அமைத்தார்கள். ஆரம்பத்தில் மிகவும் உற்சாகத்துடன் வேலைகள் நடந்தன. பணி வாய்ப்பு முகாம்கள் வழியாக அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அகதிகளை பண்ணை நிலங்களிலும் வீடுகளிலும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்கள். ஆனால் […]

எனக்கு வந்த கடிதம்

This entry is part 3 of 32 in the series 15 ஜூலை 2012

ரமணி திண்டுக்கல்லிருந்து வெங்கடேச மாமா வந்து ரெண்டு நாளாகியிருந்தது. வெங்கடேச மாமா திண்டுக்கல் ஜங்க்ஷன் வி. ஆர். ஆர். என்றழைக்கப்பட்ட மரக்கறி உணவு சாலையில் வேலையில் இருந்தார். நல்ல வெங்கலக்குரல் அவருக்கு. தள்ளித் தள்ளி நட்டுவைத்த மரங்கள் போல சில பற்கள் மாத்திரம் இருக்கும் அவர் வாய்க்குள். எப்போது அவர் பொன்மலைக்கு எங்கள் வீட்டிற்கு வந்தாலும் எங்களுக்கு ஏதாவது தின்பதற்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். ” மாவு மில் மாதிரி என்னடா வாய் அரைச்சுண்டே இருக்கு ” என்று […]