சிறகு இரவிச்சந்திரன். 0 இந்தப் படம் திரிஷ்யத்திற்கு பெரியப்பா! பாபநாசத்துக்கு அப்பா! பிரேம் நாத் என்பவர் எழுதியிருக்கும் படு அசத்தலான திரில்லர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். இதை ஏன் தமிழில் எடுக்காமல் விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது தான் கோடி ரூபாய்க்கான கேள்வி. கிரி, டெம்போ வேன் ஓட்டும் டெலிவரி பாய். ஜாக்சன், தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்யும் கணக்கன். ஷெரின் ஒரு சிறிய மருத்துவமனையில் செவிலி. களம் ஊட்டி. அதனால் மலையாளத்தோடு தமிழும் கலந்து ஒலிக்கிறது. […]
வளவ.துரையன் சங்க இலக்கியங்களைத் தேடித்தேடி அலைந்து பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா மகாமகாபாத்தியாய டாக்டர் உ.வே.சா சாமிநாதையர் அவர்கள் ஆவார். அவரை மிகவும் கவர்ந்த காவியங்களில் ‘வில்லிபாரதமும்’ ஒன்றாகும். ’அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் அமைந்துள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன’ என்று அவரே எழுதியிருக்கிறார். வில்லிபுத்துரார் பாரதத்தில் கீழக்கண்ட பாடலைப் படிக்கும்போது அவருக்கு ஓர் ஐயம் தோன்றியது. ”தண்டார் விடலை தாயுரைப்பத் தாய்முன் அணுகித் தாமரைக்கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றித் தீண்டா னாகிச் செல்கின்றான் […]
சத்யானந்தன் பரிமாற்றங்களின் தராசில் ஏறுமாறாய் ஏதேனும் மீதம் இருந்து விடுகிறது நாட்காட்டியின் தாள்கள் திரைகளாய் அபூர்வமாய் நினைவின் பனிப் பெட்டகத்தில் உறைந்து போயிருந்த முகம் எப்போதோ எதிர்ப்படுகிறது எந்தத் தழும்பில் அந்தப் பரிச்சயம் இழையோடுகிறது என்றறிய வெகுகாலம் பிடிக்கிறது பகலின் பரிகாச முகங்கள் இரவில் ரத்தக் காட்டேரிக் கனவுகளாகின்றன மீறல்கள் வம்புச் சண்டைகள் அதிர்வுகளாய் எடுத்து வைக்கும் தப்படி ஒவ்வொன்றிலும் இடறுகின்றன கடந்து செல்ல சட்டை நீக்கிய பாம்பு போல் ஊர்ந்து செல்ல வேண்டும் பல்லில் துளி […]
[Narora Atomic Power Station] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா தவறுகளைப் புரிவது மானுடம்! ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம்! [To err is human! But erring less is Divine!] முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி […]
திண்ணையில் தொடராக வெளியான மறுபடியும் ஒரு மகாபாரதம் தொடர் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
1974-இல் பிறந்த பொ. செந்திலரசு எம். ஏ. பி. எல் படித்தவர். சேலம் மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர். 25 – க்கும் மேற்பட்ட இலக்கிய ஏடுகளில் இவர் கவிதைகள் பிரசுரம் கண்டுள்ளன. காத்திரமான கவிதை மொழி , புதிய சிந்தனைகள் வழிப் படிமங்கள் இவரது கவிதைகளின் முக்கிய இயல்புகள் எனலாம். ” சாமிக் குதிரை ” ஒரு நல்ல கவிதை. நுணுக்கமான வெளிப்பாட்டில் உரிய சொற்களால் கவிதை நகர்கிறது . காற்றைக் கிழிக்கும் கனைப்புகளினூடே காது நிறைந்த […]
-எஸ்ஸார்சி உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் இதுவா பிரச்சனை ஆகிவிடும். ஆகிவிட்டதே.முதுபெருங்களத்தூரில் ஒரு பகுதி புதியதாகத்தோன்றி வளர்ந்து வரும் பகுதி.சென்னை மா நகரோடுல் எங்கோ ஒரு மூலையில் ஓரமாகத் தொத்திக்கொண்டு நிற்கிறது. பெயர் சூட்டும் பெரிய மனிதர்கள் அந்தப்பகுதிக்குப்பெயர் நன்றாகத்தான் வைத்திருக்கிறார்கள்.ரெங்கபுரி.உடனே இங்கு ரெங்க நாதருக்கு ஆலயம் ஏதேனும் உண்டா என்று கேட்டு வைக்காதீர்கள்.இது வரை அப்படி ஒரு கோவில் இல்லை. இனி வரலாம். எந்த சாமிக்கு எந்த ஊரில் எழுந்தருளப் பிராப்தமோ யார் கண்டார்கள் […]
வாரத்திற்கு வாரம், வித்தியாசமான நிகழ்ச்சிகள். சினிமா பாடல்கள் என்பது இன்றைய கணணி உலகில் கண் சிமிட்டும் நேரத்தில் எது வேண்டுமானாலும் நீங்கள் தருவிக்க முடியும். எனவே இதை கருத்தில் கொண்டு வெவ்வேறு பயனுள்ள, கருத்துள்ள,சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் நிகழ்ச்சிகளுடன் வாரத்திற்கு வாரம் வித்தியாசத்துடன் வருகிறது உங்கள் ஹாங்காங் தமிழோசை. தயாராகுங்கள். நிகழ்ச்சியை கேட்கும் வழி முறை. DAB+ (DIGITAL AUDIO BROADCASTING) என்ற வகையான ரேடியோக்கள் கிடைக்கின்றன. அதன் மூலம் DAB +31 ல் கேட்கலாம். அல்லது […]
டாக்டர் ஜி. ஜான்சன் இரைப்பையிலிருந்து பெருங்குடல்வரையுள்ள பகுதி சிறுகுடல். இதன் நீளம் 6 மீட்டர் அல்லது 20 அடி. உணவை ஜீரணம் செய்யும் முக்கிய பணியை சிறுகுடல் செய்கிறது. இங்குதான் உணவின் சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தக் குழாய்களில் புகுந்து இருதயத்தை அடைந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. சிறுகுடலில் கட்டிகள் வருவது மிகவும் குறைவு. புற்றுநோய் வகைகளில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில்தான் சிறுகுடலில் உண்டாகிறது.பெரும்பாலானவை பெருங்குடலில்தான் ஏற்படுகிறது. ஆனால் உங்களுடைய தோழியைப்போல் ஒருசிலருக்கு சிறுகுடலிலும் கட்டிகள் […]
திருமதி. கிருத்திகா எழுதிய உ.ப (சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து) நூலை நான் ஒரே மூச்சில் இன்று காலை படித்து முடித்தேன். நான் அதிகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவள். இருந்தாலும் இன்று இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று தோன்றியதும், படித்தேன். உடன் அதைப் பற்றி எழுதவும் துணிந்தேன். நான் முனைவர் பட்டப் படிப்புக் காரணமாக சிங்கப்பூரில் நடந்த தகவல் தொழில் நுட்ப மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது சிங்கைத் தமிழ் மக்களைச் சந்திக்கும் ஆவலில் […]