தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “மைதிலி ! என்ன ஆச்சு? உடம்பு சரியாக இல்லையா? முகம் வாடி இருக்கே?” அறைக்குள் வந்ததும் மைதிலியைக் கட்டில்மீது உட்கார வைத்து கேட்டான் அபிஜித். மைதிலி மௌனமாக இருந்துவிட்டாள். கூஜாவிலிருந்து தண்ணீரை டம்ளரில் ஊற்றி எடுத்து வந்தான். “ரொம்ப களைத்துப் போய்விட்டாய். தவறு என்னுடையதுதான் என்று தோன்றுகிறது.” அவள் தலைமீது கையை வைத்து டம்ளரை கொடுத்தான். “ஆனால் இன்று எல்லாமே கிராண்ட் சக்செஸ். எதிர்பாராத விதமாக புதிய […]
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்! செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறு மருங்கல் நப்பின்னை நங்காய் திருவே! துயிலெழாய்! உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 20- ஆம் பாசுரமாகும் இது. கடந்த பாசுரத்தில் ‘தத்துவம் அன்று, தகவும் அன்று’ என்று நப்பின்னையைப் பிராட்டியைக் குறை கூறி விட்டோமே. அவளுக்குச் […]
மற்றும் சிலர்: * என் முதல் நாவல்.திமுக ஆட்சிக்கு வந்த பின் வேலை இழந்த இந்தி ஆசிரியர் ஹைதராபாத்திற்கு பிழைக்க வந்த கதை. நர்மதா..மருதம் இரு பதிப்பகங்கள் 3 பதிப்புகள் வெளியிட்டுள்ளன. அதன் ஆதரசம் போஜராஜன் என்பவர் அவரை 23 ஆண்டுகளுக்குப்பின் ஹைதராபாத்தில் சந்தித்தேன் * பிரகாஷ் நிறை இலக்கிய வட்டம் கூட்டம் நடத்த இடம் தருகிறார் உபசரிக்கிற தாய் உள்ளம்.நன்கு கதை சொல்கிறார். 0 ஹைதராபாத் சாந்தாதத்தின் முதல் மொழிபெயர்ப்பு நூல் தெலுங்கானா போராட்ட பெண்கள் […]
கிணறு கூப்பிடுகிறது. ஏர் கூப்பிடுகிறது. பானையில் உறங்கும் வேர்க்கடலை வித்து கூப்பிடுகிறது. எல்லாமே ஒரே கூப்பாடு தான். கொல்லையில் பனைமரத்தின் கீழே வேட்டியை வழித்து உட்கார்ந்திருந்த ஆறுமுகம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். நீல வானில் வெள்ளியிலே ஒரு கண் முளைத்த மாதிரி. விடிவெள்ளி தான். மழையெல்லாம் வராது என்று கிண்டலாக அது சிரிப்பது போலிருந்தது. கிணறு, ஏர், வேர்க்கடலை எல்லாக் கூப்பாட்டிற்கும் விடிவெள்ளியின் ஏளனச் சிரிப்பு தான் விடை. அவன் […]
வைகை அனிஷ் மனிதன் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து தொன்றுதொட்டு விளங்கி வருவது கலையாகும். இக்கலையானது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தினை வகிக்கிறது. கலையின் தன்மையை அறிய வேண்டுமானால் அதை ஏதேனும் ஒரு வகைப் படைப்பிலிருந்தே அறிந்துவிடமுடியாது. கவிதை, இசை, ஓவியம், சிற்பம், கட்டிடம் இன்னும் நுண்கலைகள் எத்தனை உண்டோ அவற்றையெல்லாம் கண்டும், கேட்டும், தொட்டும், துழாவியும் பார்த்தால்தான் கலையின் பரப்பையும் ஆழத்தையும் அது தோற்றுவிக்கும் உலகியலுக்கு மேம்பட்ட ரசானுபவத்தையும் நாம் ஒருவாறு உணரமுடியும். ஓவியக்கலையானது வரலாற்று […]
சோழகக்கொண்டல் ஒரு காடு ஒரு மிருகம் தானே அழித்த காட்டை தனக்குள் எப்போதும் வைத்திருக்கும் மிருகம் தன்னை வெளிப்படுத்த தனக்கெனவே மிருகத்தை வைத்திருக்கும் காடு தான் எப்போதும் பார்த்திராத ஆனால் எப்போதுமே போக விரும்பும் தனக்கான காட்டில் மிருகம் காலத்தின் சாம்பலை குழைத்து இறந்த காட்டின் அழகைப்போல இல்லாத காட்டில் வரைந்து பார்க்கையில் மிருகத்திற்குள் இருக்கும் காடு விழித்துக்கொண்டு காட்டிற்குள் இருக்கும் மிருகத்தோடு எரிகிறது வெளிப்பாயும் தீச்சுட்ட மிருகம் […]
நதியையும் புனித தாய் என்றாய் நாட்டை தாய் என்றாய் ஆனால் தாயை மொழியை அன்னை என்றாய் நீ ஒரு பெண் என்று பார்த்ததே இல்லை. தாய்.. அவள் சிரிப்பும் கண்ணீரும் உனக்கு அரச்சனைப்பூக்கள் தான். அவள் பிரமாண்டமாய் நிற்கிறாள் ஒரு பெண்ணாக..! ஆனால் உன் மனைவி எனும் பெண்ணுக்கு நீ அர்ச்சனை செய்ததையெல்லாம் அள்ளிக்கூட்டினால் இந்த ஆகாயமே சல்லடையாய் கிழிந்து தொங்கும். பெண் எனும் கோவில் உன் தாய் ஆனபோது நீ ஆத்திகன் ஆனாய். மனைவி […]
வாழ்க்கை சில நேரம் புதிய கதா பாத்திரங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. முன்பே அவர்கள் வேறு கதா பாத்திரங்களையும் முகத்தில் அணிந்திருப்பார். அம்மா, அக்கா, தங்கை, மனைவி, சிநேகிதி, விரோதி என்று ஒரே நபருக்குள் எத்தனை முகமூடிகள் ? அப்படியான ஒருத்தியை நான் சமீபத்தில் சந்தித்தேன். அவள் ஒரு புத்த பிக்குவைப் போலிருந்தாள். ஆனால் அவளை எனக்கு முன்பே தெரியும், இந்த புத்த பிக்கு வேடம் தரிப்பதற்கு முன்பே!. சமூகத்தில் திறமையான வழக்குரைஞர் ஒருத்தின் தாயார் […]
நாகராஜன் நல்லபெருமாள் மௌனபயம் கலந்த மயான அமைதி பூக்கப் பயந்தன செடிகள் கனிய பயந்தன காய்கள் பறக்கப் பயந்தன புட்கள் சிறையிட்டுக்கொண்டன யாவும் தமக்குத்தாமே முறையிட்டுக்கொண்டன மூடிய வெற்றறைகளுக்குள் எக்காளமிட்டு திரிகிறது தெருவெங்கும் பீதி நெஞ்சின் ஆழத்தில் விசும்புகிறது மரணஓலம் பேருந்து நிறுத்தங்களே வாழிடமாய் மண்ணில் புதைந்தன சாலைகள் நீரின்றி சோறின்றி திரைகடல் ஓடும் கூட்டம் இறந்தும் உயிர்த்திருக்கிறது சண்டிமையின் மிச்சம். 28.09.2014 ——————————- பிரளயத்தில் பெயர்ந்து தள்ளாடி மிதக்கும் மலையுச்சியில் ஏங்கி தவித்திருக்குது குருவி நனைந்த […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3F_o5YxNi00 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9EdAgdMwnDE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1-zqQSRw2-A http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013] +++++++++++++ ஊழி முதல்வன் மூச்சில் உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி சப்பி மீளும் ஒரு யுகத்தில் ! விழுங்கும் கருந்துளைக் களஞ்சியத்தியில் மீள் உயிர்க்கும் ஒளி மீன்கள் ! விண்வெளி விரிவை விண்ணோக்கி காண கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் பூமிபோல் தெரியும் பேரளவுக் கோள்கள் […]