கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)

This entry is part 34 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கருங்கல் நீ !
காலியாகப் போன
மதுக் கிண்ணம் நான் !
நிகழ்வ தென்ன வென்று
நீ அறிவாய் நாம்
நெருங்கித் தொடும் போது !
சிரிக்கிறாய் நீ
உதிக்கும் பரிதி யானது
எரிந்து மங்கி
மரிக்கும் விண்மீனை நோக்கிச்
சிரிப்பது போல் !

+++++++++

காதல் எனது நெஞ்சின்
கதவைத் திறக்கிறது !
சிந்தனை
சிறைக்கு மீள்கிறது !
பொறுமையும் பகுத்தறிவும்
விடை பெற்றுப்
போகிறது !
உணர்ச்சி மட்டும் தங்கும்
என்னை
மெய் வருந்தி
மெலிய வைத்து !
விழுவார் சிலர் வீதியில்
எறியப் படும் குப்பை போல் !
பரிவின்றிப் பிறகு
பாய்ந்து செல்வர் மறுநாள்
பற்பல புதுக்
குறிக் கோளுடன் !

+++++++++++++

காதல் இயல் பானது
கவிதை அதை வரவேற்று
முரசடிக்கும் !
தனிமைக்கு வருந்தி
புகார் செய்து வாழாதே !
அஞ்சிடும்
அர்த்த மற்ற வார்த் தைகள்
ஆவி யாய்ப் போகும்
வெடியில் பிளந்து !
குருநாதர்
திரும்பி ஏறாமல்
இறங்கி வரட்டும் தனது
ஒய்யாரக்
கோபுரத் திலிருந்து !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 30, 2011)

Series Navigationஅவன் …அவள் ..அது ..எங்கிருக்கிறேன் நான்?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *