This entry is part 21 of 37 in the series 27 நவம்பர் 2011

பிறையின் முகங் காண தினந்தோறும் ஆசை

அது தேயும்போதும் வளரும் போதும்

இரவின் தனிமையில்

மேகங்கள் விலகியும் விலகாமலும்

அதன் மெளனப்பார்வை

என்னில் பதிவதாய் உணர்வேன்.

மழைநேரம் தூறலின் அசட்டுத்தனம்

துயர்ப் படுத்தும்போது

பார்க்கமுடிவதில்லை.

மீறி

மழையில் நனைந்து பார்த்தாலும்

வானில் நெளியும்

மின்னலைமட்டும் காணமுடிகிறது.

இருள் சூழ்ந்து

மழையைத்தவிர

எதுவுமற்றிருக்கும் வானம்.

Series Navigationவாவள்ளுவரும் பட்டுக்கோட்டையாரும்