‘கலை’ந்தவை

This entry is part 11 of 19 in the series 31 ஜனவரி 2016

sathyanandan

 

தீற்றிய​ தெறிக்கப்பட்ட​

தோற்றமாய் வண்ணங்கள்

மறுமுறை காண​

புதிய​ தரிசனத்தில்

நவீன​ ஓவியம்

 

மாங்குயிலின் ஒரே சீழ்கை

மனதை வருடும்

ஒவ்வொரு நாள்

வெவ்வேறாய்

 

கொட்டும் மழை

பொருத்தும் இறந்த​ காலத்தின்

அரிய​ பக்கங்களில்

வேறொன்றை ஒவ்வொரு முறையும்

 

என்னைத் தவிர​

எத்தனை தேட​ இவருக்கென்று

சேணம் பூட்டாப் புரவியாய்

பயணங்கள்

 

வீட்டின் படிக்கட்டுகள்

அலுவலக​ நாற்காலி

பிடிப்பின் இறுக்கம்

அளவு குறையாத​ அன்றாடம்

 

ஜலதரங்க​ மேதையின்

முன்னே

குறைவாய் நிறைந்தே

இசைக்கும்

வேவ்வேறு அளவுக் கிண்ணங்கள்

 

Series Navigationவானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்“கீப்” வித் கான்ஃபிடென்ஷியல்”
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *