கி.பி. [1044 – 1123]
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
உமர் கயாம் பழம்பெரும் பாரசீகக் கவிஞர்; கணித. வானியல், சித்தாந்த விஞ்ஞானி. அவரது புகழ்பெற்ற ‘ருபியாத்’ என்னும் ஈரடிப் பாக்கள் பல மொழிகளில் பல கவிஞர்களால் மொழி பெயர்ப்பாகி உள்ளன. ஆங்கிலத்தில் பலர் மொழி பெயர்த்துள்ளார். அவற்றுள் தனித்துவம் பெற்றவை எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு [1809 – 1883] ஆக்கிய ஆங்கிலப் பாக்கள். அவரும் ஐந்து முறை சற்று மாறுபட்ட வரிகளில் மொழிபெயர்த் துள்ளார். உமர் கயாம் பாரசீக அராபிக் மூலப் பாக்களை மொழி பெயர்ப்பது கடினம். நான் பின்பற்றும் ஆங்கில ஈரடிப் பாக்கள் ஃபிட்ஜெரால்டு இரண்டாவது முறை எழுதியவை போல் தெரிகிறது. முதன்முறை செய்தவை என்றும் சில பதிப்புகள் கூறும்.
2. காலைக் கதிரின் இடதுகை வான்தொடக் கனவெ
காதில் விழுந்தது மதுக்கடைக் கூக்குரல் !
“எழுவீர் என் இளைஞர்காள் ! நிரப்புவீர் கிண்ணம்
உம்முயிரின் மது உடலில் வற்றும்
2. Dreaming when Dawn’s Left Hand was in the Sky
I heard a voice within the Tavern cry,
“Awake, my Little ones, and fill the Cup
Before Life’s Liquor in its Cup be dry.”
+++++++++++++
3. சேவல் கூவிட மதுக்கடை முன் நிற்போர்
சேர்ந்து கத்தினர் – “திறடா கதவை !
உம் அறிவு அற்பம், தங்கப் போவது நாங்கள்,
ஒருமுறை போனவர் மறுமுறை மீளார்.”
3. And, as the Cock crew, those who stood before
The Tavern shouted — “Open then the Door !
You know how little while we have to stay,
And, once departed, may return no more.”
+++++++++++
- காலநிலையும் அரசியலும்
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 12
- நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி முதன்முதல் சனிக்கோளின் சுற்று வளையத்தை ஊடுருவி ஆய்வு செய்கிறது.
- சரியும் தராசுகள்
- ரிஷி((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- இரு கோடுகள் (நான்காம் பாகம்) -நிறைவுப் பகுதி
- பூமிக்கு ஆபத்து? (அதிர்ச்சி தகவல்)
- கடன் அட்டை, ஏடிம் அட்டை ஹேக்கிங்
- அறிவியல் கதை – எனக்கு ஒரு மகன் பிறந்தான்
- கனவு : இலக்கிய நிகழ்வு
- பாரதியாரின் நவீனத்துவம்
- வெண்ணிற ஆடை
- சோ – மானுடத்தின் பன்முகம்
- தொடுவானம் 148. கலகலப்பான கிராமம்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 & 3
- திரும்பிப்பார்க்கின்றேன் படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க. சிவசங்கரன்
- இயக்குனர் மிஷ்கின் நடத்தும் ஒருநாள் பயிற்சிப் பட்டறை. 18-12-2016