உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

This entry is part 8 of 14 in the series 7 மே 2017

உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

[58]

இரவு, பகல் மீளும் சதுரங்க ஆட்டத்தில்

ஊழ் மனிதரோடு மீளா புரிக்கு விளையாடும்

இங்குமங்கும் நகரும், கூடும், கொல்லும், பின்

ஒவ்வொன்றாய்க் கல்லறையில் வைக்கும்.

[58]
‘Tis all a Chequer-board of Nights and Days
Where Destiny with Men for Pieces plays:
Hither and thither moves, and mates, and slays,
And one by one back in the Closet lays.

[59]
வெற்றியா, தோல்வியா எனும் வினா இல்லை

வலதோ, இடதோ, விளையாட்டுப் போட்டியில்

மைதானத்தில் உன்னைக் கீழே வீழ்த்தியோன்

அறிவான் எல்லாம் அறிவான், அவன் அறிவான்!

[59]
The Ball no Question makes of Ayes and Noes,
But Right or Left, as strikes the Player goes;
And he that toss’d Thee down into the Field,
He knows about it all – He knows – HE knows!

[60]

எழுதிச் செல்லும் ஊழியின் கை, எழுதிய பின்னும்

எழுதிக் கொண்டே போகும், உன் பக்தியும், யுக்தியும்

மறுமுறை அதை மாற்றாது, அரை வரி கூட நீக்காது;

அழுதாலும் தொழுதாலும் அழிக்கா தொருசொல்.

[60]
The Moving Finger writes; and, having writ,
Moves on: nor all thy Piety nor Wit
Shall lure it back to cancel half a Line,
Nor all thy Tears wash out a Word of it.

+++++++++++++++++++++++

Series Navigationகாணாமல் போனவர்கள்ஈரானியக் கவிதை. வாடகை வீடு.
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *