மொழிபெயர்ப்பாளர்க்கான விருது

This entry is part 7 of 8 in the series 7 பெப்ருவரி 2021

அன்புக்குரிய திண்னை வாசகர்களுக்கு.

வணக்கம். 1.2.2021 அன்று மொழிபெயர்ப்பாளர்க்கான விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிந்துரையின் பேரில் தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழநிச்சாமி அவர்களால் (Voice of Valluvar, TirukkuraL, the Tamil Veda, Tamil Moral Quatrains – Naaladiyaar, All-time Adages of Avvaiyaar, the Tamil Poetess ஆகியவற்றுக்காக) எனக்கு வழங்கப்பட்டதென்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

ஜோதிர்லதா கிரிஜா 

Series Navigationஒரு சிறுகதை … சில க்ஷணங்கள் கேதார்நாத் சிங் கவிதைகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

 1. Avatar
  S. Jayabarathan says:

  கிரிஜா,
  ஓர் கோபுர விளக்கு

  சி. ஜெயபாரதன், கனடா

  கோவிலுக்கு ஒருவன்
  போகணும்
  கோபுர விளக்கை 
  இரவில் காண்ப தற்கு.
  குனிந்து போனவன்
  விளக்கை
  காண்ப தில்லை.
  நிமிர்ந்து செல்.
  உனக்குத் தலைவாசல்
  உயர்ந்துள்ளது.
  நிமிர்ந்தாலும் தெரியாது.
  நீ மேலே
  நோக்க வில்லை
  என்றால் !
  கீழே பார்த்து நீ
  மேலே ஏற முடியாது.
  எற்றி விடாதே ஏணியை
  நீ மேலே
  ஏறி நின்ற பிறகு.
  உச்சியைத் தொட்ட 
  ஒருவன் 
  கீழே இறங்க வேணும்
  ஏணி
  அப்போதும்.
  இவ்வுலக வாழ்வு ஏறி,
  இறங்கும் 
  பூங்கா எவ்வு கோல். 
  உயரத்தில்
  ஊஞ்சலில் தாவிப் பற்றும்
  ஓர் சர்கஸ் 
  விளை யாட்டு !
  காப்பு வலை
  தேவை,
  கீழே வீழ்ந்தால்.
  ஊரில்
  உழைக்க வேலை தருபவன்
  உயர்ந்தவன்.
  உண்ண உணவு அளிப்போன்
  உத்தமன்.
  சிறுபான்மை செல்வந்தர்
  மனம் விரும்பி,
  சிறுபான்மை
  ஏழைகட்கு உதவி செய்தால்
  வறுமை நீங்கும்,
  ஒருநாள்.
  குடிநீர் அளிப்பது 
  நாட்டில்
  நல்ல தோர்
  குடியாட்சி.

  பகுத்து உண்டு
  பல்லுயிர் காத்தல் 
  சிறப்பு.
  நிலத்தில் நீர் பாய
  உழுது,
  பயிர் விளைத்து
  கதிர் அறுவடை
  புரிவது நீ. 
  தொழில் செய்வது நீ.
  உலக வாழ்வு
  மீளும்
  ஒரு சுழற்சி !

  ==================

  ==================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *