கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப

This entry is part 4 of 11 in the series 3 ஜனவரி 2021

முனைவர் ம இராமச்சந்திரன்உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். மதுரை தியாகராசர் கல்லூரி பல சிறப்புகளைக் கொண்டு தனக்கான ஆளுமையை உருவாக்கிக் கொண்டது. அதற்குப் பல அறிஞர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இக்கல்லூரியில் நான் 1995-2000 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக்கொண்டு இருந்தேன். தியாகராசர் கல்லூரி சைவ மரபிற்கும் தமிழ் அறிஞர்களுக்கும் பெருமக்களுக்கும் பெயர்பெற்ற கல்லூரி. […]

மறக்க முடியாத மரக்காயர் மாமா

This entry is part 3 of 11 in the series 3 ஜனவரி 2021

(24.4.1991  “தேவி” இதழில் வந்தது. “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்”-இன் “அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       காலியாய்க் கிடந்த பக்கத்து வீட்டு மனையின் எதிரே வந்து நின்ற ஆட்டோவிலிருந்து, குஞ்சம் வைத்த அந்தக் காலத்துப்பாணித் தொப்பியுடனும், கையில் ஒரு தடியுடனும் இறங்கிய பெரியவரைப் பார்த்ததும், விசாலாட்சி, ‘பக்கத்து மனை யாரோ சாயபுக்கு சொந்தம்னு பேசிண்டாளே, அது இவராத்தான் இருக்கணும்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். ‘மனையை வெறுமனே பார்வையிட்றதுக்கு வந்தாரோ, இல்லேன்னா வீடுகீடு கட்டப் […]

அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்

This entry is part 2 of 11 in the series 3 ஜனவரி 2021

ஆயிரத்தொரு இரவுகள்  என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில்,  அதாவது திரைப்படத்திற்கான  காட்சிகள்  ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல். ஆயிரத்தொரு இரவுகள்  அரபிக் கதையல்ல.  இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால்  வியாபாரப் பொதிகளோடு எடுத்துச் செல்லப்பட்டது.  இப்படியான கதை சொல்லல் ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள […]

2021

This entry is part 1 of 11 in the series 3 ஜனவரி 2021

அண்டவெளியில் ஒரு உயிர் கோளமாய் சுழலும் பந்தில் சூரிய விழிகளின் சிமிட்டலாய் கருப்பு வெள்ளை ஒளி ஜாலம் ஒரே தாளத்துடன் ஒரே வேகத்துடன் காலச் சக்கரமாய் உருண்டு கொண்டு இருக்கிறது. வருடங்கள் வந்தும் போயும் இருக்கின்றன பூக்கடை முன்பு பறக்கிற அழுக்கு தூசிகள் போல வாழ்த்துக்களோடும் ஏச்சு பேச்சுக்களோடும். வருடங்கள் பிறந்து கொண்டே இருக்கின்றன வேறு வேறு வடிவங்களில் கொரோனா போல. பலரும் முகமூடிகளோடே திரிகிறார்கள். பலர் தற்காப்புக்காக முக மூடி போட்டுக் கொள்கிறார்கள். முகமூடிக்குள் பலருக்குள்ளும் […]