இருத்தல் 

author
0 minutes, 11 seconds Read
This entry is part 3 of 7 in the series 16 ஜூலை 2023

ஆர் வத்ஸலா

திருமணத்திற்கு முன் 

அவசர அவசரமாக படித்த 

சமையல் புத்தகங்கள்  மானத்தை வாங்கவே 

மாமியாரிடம்  திட்டு வாங்கி 

கற்றுக் கொண்ட முதல்  பாடம் 

லட்டு செய்முறை

கண் திட்டத்தில் 

அரிசி மாவு 

கடலை மாவு 

சோடா உப்பு 

சர்க்கரை

கேசரி பவுடர்

தண்ணீர்

இரும்பு ஜாரணியை

பாணலி முன் வைத்த

உயரப் பலகையில்

‘டக் டக்’ என தட்டி

முத்து பூந்தி தயாரிப்பு 

பாகு கம்பி கணக்கு

லட்டு பிடிக்கும் சூட்டின் பதம்

கணவனின் பாராட்டை

‘லட்டு மாமி’ எனும் 

பட்டப் பெயரை

உறுதிப்படுத்தின

தீபாவளிகள் 

அன்று

இன்று

நான் சாப்பிட்டால் கொன்றே போட்டுவிடுவான் 

மருத்துவ பட்டம் பெற்ற மகன்

மகன் மருமகள் 

மகள் மருமகன்

லட்டு தொடா ‘டயட்’டில்

பெயர்த்தி  நம்மூர் பட்சணங்களுக்கு மட்டும்   

‘டயட்’டில்

பேரனுக்கு ‘மூட்’ வந்தால்   அரை  லட்டு

அலுத்துப்போய் கொடுத்துவிட்டேன் என்னுடைய 

இரும்பு ஜாரணியை

சமையற்கார மாமாவுக்கு

லட்டு சாப்பிடாமல் இருப்பது 

பழகிவிட்டது

ஆனால் 

நுழைந்தமர்கிறது மனதின் மூலையில்

எதையோ தொலைத்து விட்டது போன்றதோர்  உணர்வு

ஒவ்வொரு தீபாவளி அன்றும்

Series Navigationகடல் அலை அடிப்பில் மின்சக்தி உற்பத்தி, கடல் நீரைக் குடிநீராய் மாற்றும் யந்திரம்கனடா – சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்றுகூடல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *