This entry is part 10 of 10 in the series 21 ஜூன் 2026

மாரி.கிருஷ்ணமூர்த்தி

1.

ஆயிரம் கால்கள்

கொண்டு

நகர்த்துகிறது காலத்தை

அதன்  வாழ்க்கை எது என

அறிந்த

மர வட்டை

2.

யாரோ விட்டுசென்ற

சென்ற காலனிக்கு

முன்னால் விழுந்திருக்கிறது

மர மள்ளி பூ

அவன் பயணத்துக்கு

நன்றி சொல்லி

3.

மரத்தை  சுற்றி

விரவியிருந்த

ஊதா  பூக்களை

நினைவின்

சுவடில் அள்ளிக்கொண்டு

போகிறாள்

Series Navigationமன்மதன்கள்