மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்
(THE CONQUEST OF HAPPINESS)
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்
(தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்)
பாகம் – 1
அத்தியாயம் – 9
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம்
(*சென்ற இதழ் தொடர்ச்சி)
எனவே, எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கெல்லாம் தங்களுடைய சமூகக் குழுவோடு இணக்கமற்றிருக்கும் இளைஞர்கள் தாம் எந்தத் தொழிலைச் செய்வது, எந்தப் பணியில் அமர்வது என்பது குறித்து கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் வருவாய் குறைவாக இருந்தா லும் பரவாயில்லை – பணியிடங்களில், பார்க்கும் தொழிலில் இணக்க மான நட்புறவு கிடைக்க வழியிருக்கும் துறைகளையே அவர்கள் தமது வாழ்க்கைத்தொழிலாக, வாழ்வாதார வழியாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இது சாத்தியம் என்பதையே அவர்கள் பல நேரங் களில் உணர்வதில்லை. உலகம் பற்றிய அவர்களுடைய அறிவு மிகவும் தங்களுக்கு உலகம் பற்றி அவர்களுடைய அறிவு மிகவும் குறுகியதாகவே இருக்கிறது என்பதால் தங்களுடைய நிலத்தில், சூழலில் தங்களுக்கு பழக்கமாகிவிட்ட பாரபட்சப் பார்வைகள் உலக மெங்கும் இருக்கின்றன என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் வயதில் பெரியவர்கள் இளையவர்களுக்கு எத்த னையோ உதவி செய்ய முடியும். ஏனென்றால், இதற்கு மனித இனம் சார் கணிசமான அனுபவம் கட்டாயத் தேவையாகிறது.
உளவியல் ஆய்வு குறித்து அதிகமாக பேசப்படும் இன்று, யாரேனும் ஓர் இளைஞர் தனது சமூகச்சூழலில் இணக்கமாக உணராமல், பொருந் தாமல் அந்நியப்பட்டு நிற்கிறார் என்றால் அதற்கான காரணம் ஏதாவது உளவியல்ரீதியான குறைபாடாகத்தான் இருக்க முடியும் என்று கருதப் படுகிறது. இது என்னைப் பொறுத்தவரை முற்றிலும் தவறான பார்வை; அணுகுமுறை. எடுத்துக்காட்டாக, ஓர் இளைஞன் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு தீங்கு விளைவிப்பது என நம்புகிற பெற்றோர் களை அடைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அறிவுத் திறன் இருந்தாலே போதும் – வேறெதுவுமே வேண்டாம், அந்த இளை ஞனுக்கு தனது பெற்றோர் மீது எந்தவிதமான அனுதாபமும் இல்லாமல் போய்விடும். ஒருவர் தான் வாழும் சமூகக் குழுவில், சமூகச் சூழலில் பொருந்தாமல் அந்நியமாகஅன்னியமாக உணர்வது கண்டிப்பாக வருந்தத்தக்க விஷயம்தான். அதற்காக, அது எப்போ துமே, எந்த நிலைமையிலுமே தவிர்க்கப்படவேண்டிய அளவு அவல மான, அபாயகரமான ஒன்று அல்ல. ஒருவர் வாழும் சமூகக் குழு, சமூகச் சூழல் அபத்தமானதாகவோ, பாரபட்சமானதாகவோ கொடூர மானதாக இருப்பின் அதிலிருந்து விலகியிருத்தல், அதில் பொருந்தா மல் அந்நியமாக உணர்தல் என்பது ஒருவரின் மேம்பட்ட தகுதிக்கான அறிகுறி. இந்தவிதமான குணாம்சங்கள், அணுகுமுறைகள், சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ, எந்தவொரு சமூகக்குழுவிலும் இடம் பெற்றிருப்பதைக் காண முடியும். கலிலியோவும் கெப்ளரும் (Galileo; Kepler) ‘அபாயகரமான எண்ணங்கள்’ கொண்டிருந்தார்கள். (ஜப்பா னில் அப்படித்தான் அவர்களைக் குறிப்பிடு வார்கள்). நாம் வாழும் காலத்தில் மிக அறிவார்ந்த மனிதர்களும் அதைத் தான் செய்திருக் கிறார்கள். சமூகவுணர்வு என்பது இந்த ரீதியில் வளர்த்தெடுக்கப்படு வது – அதாவது, தங்களுடைய அபிப்ராயங்கள் வரவாக்கக்கூடிய சமூக ரீதியான அழுத்தமான எதிர்ப்புணர்வை எண்ணி அவர்கள் அஞ்சுமளவு அத்தனை வலுவாக, தீவிரமாக வளர்த்தெடுக்கப்படுதல் உவப்பான தல்ல; ஏற்புடையதல்ல. மேற்படி எதிர்ப்புணர்வை எத்தனை சன்ன மானதாக்க முடியுமோ, எத்தனை வலுவற்றதாக்க முடியுமோ அதற் கான வழிமுறைகளைக் கண்டறிவதே ஏற்புடையது.
நவீன உலகில் இந்த பிரச்சனையின் மிக முக்கிய பாகம் இளைய சமுதாயத்தினரிடம் உருவாகிறது. ஒரு மனிதன் அவனுக்கு உகந்த சரியான தொழிலிலும் சரியான சுற்றுச்சூழல்களிலும் இடம்பெற்றால் அவனால் பெரும்பாலான விஷயங் களில் சமூகரீதியான தண்டனை யிலிருந்து தப்பிக்க முடியும். ஆனால், அவன் இளையவனாக இருக்கும் போது அவனுடைய தகுதித்திறனாற்றல் இன்னமும் பரிட்சிக்கப் படாத நிலையில், ஒன்றுமே தெரியாத நிலையில் இருக்கிறது என்ப தால், தங்களுக்கு எல்லாம் தெரியும், எதைப் பற்றியும் நல்லது கெட்டது அறிய தங்களுக்குத் தகுதியிருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிற வர்களின் ஆளுகையின் கீழ், அவர்களை அண்டி வாழவேண்டிய நிலை யிலிருப்பான். அந்த மனிதர்களுக்கு, உலகம் அனுபவம் அதிகம் பெற்ற வர்களாகத் தாம் இருந்தும் அந்த இளைஞனுக்குத் தங்களை விட அதிக விஷயங்கள் தெரியும் என்ற விஷயமே, அப்படியான அனுமானம், அபிப்பிராயமே பெரிய அளவில் மனக்குமுறலை, கொந்தளிப்பை ஏற் படுத்துகிறது. அறியாமையின் கொடுங்கோன்மையிலிருந்து ஒரு வழி யாக இறுதியில் தப்பித்து விடும் பலருக்கு அதற்கு எடுத்துக்கொள்ளும் நீண்ட காலமும், அதற்கு எதிர்கொள்ள வேண்டி யிருக்கும் எதிர்ப்பும் போராட்டங்களுமாக அவர்களை வெறுப்பும் கசப்பும் மிக்கவர்களாக ஆக்கி விடுகின்றன. அவர்களுடைய சக்தியெல்லாம் முடக்கப்பட்டு விடுகிறது இங்கே ஒரு வசதியான கோட்பாடு சுற்றில் விடப்பட்டிருக் கிறது. அதாவது, மேதமை எப்படியாவது தன்னை நிரூபித்துக் கொண்டுவிடும்; நிலைநிறுத்திக்கொண்டுவிடும் என்ற கோட்பாடு. இந்தக் கோட்பாட்டை, கண்ணோட்டத்தை வலுவாக பிடித்துக் கொண்டு பலர் இளைய வயதினரிடமான திறனாற்றலை பெரிய பாதிப்பு ஏற்படுத்தாது என்று கருதுகிறார்கள். Murder will out என்ற கருத் தாக்கம் போன்றதே இதுவும். நமக்குத் தெரிந்த கொலைகளைச் செய்த வர்ளெல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால், கண்டுபிடிக்கப்படாத கொலைகள், ஒருபோதும் கேள் விப்பட்டேயிராத கொலைகள் எத்தனை இருக்கின்றன என்று யாருக் குத் தெரியும்? இதேபோல்தான், எதிர்ப்புகளை தடைகளை யெல்லாம் தகர்த்து முன்னேறிய எத்தனையோ இளைஞர்களைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம் என்றாலும், அதனாலேயே அத்தகைய எதிர்ப்புகள் தடைகளை தகர்த்து முன்னேற முடியாமல் நிலை குலைந்துவிட்ட மேதமை மிக்க இளைஞர்கள் யாரும் இல்லை என்று எண்ணிவிட இயலாது. தன்னை நிரூபித்துக்கொண்டுவிடுவது, வெளிப்படுத்திக் கொண்டுவிடுவது என்பது மட்டுமல்ல விஷயம். அந்தப் போராட்டத் தில் கசப்பும் வெறுப்பம் சேர்ந்து விடாமல், சக்தித்திற னாற்றல் பழுத டையாமல் அந்த மேதமையை வெளிப்படுத்துவதும் முக்கியமான விஷயம். இந்த எல்லாக் காரணங்களுக்குமாக, இளைய தலைமுறை பின்பற்ற வேண்டிய வழி என்பது மிகவும் கடினமான ஒன்றாகச் செய்யப்பட்டுவிடலாகாது.
பெரியவர்கள் இளைய தலைமுறையினரின் விருப்பங்களை உரிய மரி யாதையோடு கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியது உகந்த போக்கு. அதேசமயம், இளைய தலைமுறையினர் முந்தைய தலை முறையைச் சேர்ந்த பெரியவர்களின் விருப்பங்களை உரிய மரியாதை யோடு அணுக வேண்டும் எதிர்கொள்ளவேண்டும் என்பது ஏற்புடைய தல்ல. காரணம் மிகவும் எளிமையானது மேற்குறிப்பிட்ட இரண்டு விஷயங்களிலுமே இளையதலைமுறையினரின் வாழ்க்கை, வாழ் முறைகள்தான் கவனத்துக்குரியதாக எடுத்துக்கொள்ளப்படு கிறதே தவிர வயதானவர்களுடையது அல்ல. இளைய தலைமுறை பெரியவர் களின் வாழ்வுகளை கட்டுப்படுத்த ஒழுங்குமைக்கு முயற்சிக்கும் போது, உதாரணத்திற்கு, கணவன் அல்லது மனைவியை இழந்த பெற் றோர் மறுமணம் செய்வதை ஆட்சேபிக்கும்போது, அவர்கள் பெரி யவர்கள் இளையவர்களின் வாழ்க்கையை ஒழுங்கமைக்க முற்படும் போது எந்த அளவுக்குத் தவறாகச் செயல்படுகிறார்களோ அதேயளவு தவறு செய்பவர்கள் ஆகிறார்கள். பெரியவர்கள் இளையவர்கள் இரு தரப்பினருமே தேவையான விவேகத்தை அடைவதற்கான வாழ்வ னுபவ வருடங்களை எட்டியவுடன் அவரவருக்குரிய தேர்வுகளை மேற்கொள்ள உரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவசியமா னால் அவரவருக்கு உரிய தவறுகளுக்கும் உரிமை பெற்றவர்களாகி றார்கள். இளைய தலைமுறையினர் எந்தவொரு முக்கிய விஷயத்தைப் பொறுத்த அளவிலும் அது குறித்து பெரியவர்கள் அவர்கள் மேல் பிரயோகிக்கும் அழுத்தத்திற்கு அடிபணிந்துவிடுகிறார்களென்றால் அவர்களுக்கு சரியான சிந்தனைத்திறன், அறிவாற்றல் இல்லயென்று பொருள். உதாரணத்திற்கு, நீங்கள் இளம் வயதினர். உங்களுக்கு மேடை ஏறும் ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய பெற்றோர்களுக்கு அது பிடிக்க வில்லை. மேடையில் தோன்றுவது ஒழுக்கக்கேடானது என்பது நினைப்பிலோ, அல்லது சமூகரீதியாய் அது அந்தஸ்து குறைந்தது என்பதற்காகவோ அவர்கள் உங்களுடைய மேடையேறும் விருப் பத்தை எதிர்த்து அந்த எண்ணத்தை கைவிடும்படி பலவகையான அழுத்தங்களை உங்களுக் குக் கொடுக்கிறார்கள். அவர்களை மீறி நீங்கள் மேடையேறினால் நீங்கள் அவர்களுடைய பிள்ளையே இல்லை என்கிறார்கள். அவர்க ளுடைய சொத்து-சுகம் என்று எதுவுமே உங்களுக்குக் கிடைக்காது என்று மிரட்டுகிறார்கள். சில வருடங்களிலேயே நீங்கள் எடுத்த முடிவை பற்றி வருந்தும் நிலைமை உங்களுக்கு ஏற்படும் என்கிறார் கள். அப்படி உங்களைப் போன்ற எண்ணத்துடன் செயல்பட்ட தங்க ளுக்குத் தெரிந்த இளைஞர்களுக்கு அதனால் ஏற்பட்ட பின்விளைவு களை, கஷ்ட நஷ்டங்களை எடுத்துச்சொல்லக் கூடும். உங்களுக்கு மேடை பொருத்தமானதல்ல என்றோ, அல்லது உங்களுடைய குரல் மேடைக்கு பொருத்தமானது அல்ல என்றோ, அல்லது, அது மேடை யில் சரியாக ஒலிக்காது என்றோ அவர்கள் நினைப்பது ஒரு வேளை சரியாகக்கூட இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை என்றால் நீங்களே விரைவில் அதை மேடை சார்ந்த நபர்களிடமிருந்து அறிந்து கொள்வீர்கள். வேறு வாழ்க்கைத்தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ள உங்களுக்கு போதுமான கால அவகாசம் இருக்கும். ஆனால், உங்களுடைய முயற்சியைக் கைவிட உங்களுடைய பெற்றோர்களின் வாதங்கள் மட்டுமே போதுமான காரணங்களாகிவிடக் கூடாது. அப்படி அவர்களுடைய ஆட்சேபணைகளயெல்லாம் மீறி நீங்கள் உங்களுடைய நோக்கத்தை செயல்படுத்தினால், நீங்களோ அவர்களோ ஊகிப்பதைக் காட்டிலும் சீக்கிரமாகவே அவர்கள் உங்களுடைய பாதையை ஏற்றுக்கொள்வார்கள். மாறாக, மேடையைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று உங்களுக்கு அந்த தொழில்முறைப்பட்டவர்களிட மிருந்து ஆலோசனை கிடைக்குமானால், அது வேறு விஷயம். ஏனெ னில், ஒரு துறையில் புதிதாக நுழைப்பவர்கள் அந்த துறை சார்ந்தவர் களிடமிருந்து கிடைக்கும் தொழில்ரீதியான அபிப்பிராயங் களை உரிய மதிப்போடும் கவனத்தோடும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக, வல்லுனர்களின் அபிப்பிராயங்களை தவிர்த்த அளவில், மற்றவர்களுடைய அபிப்ராயங்களுக்கு – அது பெரிய விஷயம் தொடர் பாக தரப்பட்டதானாலும் சரி, சிறிய விஷயம் தொடர்பாக தரப்பட்ட தானாலும் சரி, மிக அதிக அளவு மரியாதை தரப்படுவதா கவே எனக்குத் தோன்றுகிறது. ஒருவர் பொதுமக்கள் அபிப்பிராயத் திற்கு மதிப்பு கொடுக்கவேண்டியது அவசியமே. ஆனால், அது தேவை யான அளவுக்கு இருந்தால் போதுமானது. நாம் பட்டினி கிடப்பதைத் தவிர்ப்பதற்காகவும், சிறைச்சாலைக்கு போய்விடாமல் இருக்கவும் தேவையான அளவு. இதைத் தாண்டிய அளவில் போகும் எதுவும் தேவையற்றதொரு கொடுங்கோன்மைக்கு நம்மை நாமே விரும்பி ஒப்புக்கொடுப்பதற்கு சமம். இவ்வாறு நாம் செய்வது மகிழ்ச்சியை எல்லா விதங்களிலும் முடக்க, குலைக்க வாய்ப் புண்டு. உதாரணத் திற்கு, செலவு என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். மிகப் பலர் தங்க ளுடைய இயல்பான ரசனைகளின்பாற்பட்டு செயல்படுவதி லிருந்து மாறுபட்ட வழிகளில் மாறுபட்ட விஷயங் களுக்கு பணத்தை செலவு செய்கிறார்கள். காரணம், தங்களுடைய அக்கம்பக்கத்தார் தங்க ளிடம் சொந்தமாக கார் இருந்தால் மட்டுமே தங்களை மதிப்பார்கள், அவர்க ளுக்கு நல்ல விருந்து வைக்க தங்களால் முடிந்தால் மட்டுமே தங்களை மதிப்பார்கள் என்று அவர்கள் கருதுவதால்தான். சொல்லப் போனால், தன்னால் கார் வாங்க முடியும் என்றாலும் உண்மையாகவே பயணம் செய்வதை விரும்பும் எவரும், அல்லது ஒரு நல்ல நூலகத்தை விரும் பும் எவரும் இறுதியில், அவர் மற்றவர்களைப்போலவே நடந்து கொண்டிருந்தால் மதிக்கப்படுவதை விட மிக அதிகமாகவே மதிக்கப் படுவார்கள். வேண்டுமென்றே பொது அபிப்பிராயத்தை எதிர்த்து நடப்பதில் எந்தப் பயனும் இல்லை. அது, இன்னமும் ஒருவர் அதன் ஆளுகையின் கீழ் இருப்பதையே, ஒருவித தலைகீழான அளவில் இருந் தாலும், உணர்த்துகிறது. ஆனால், பொது அபிப்பிராயத்தை உண்மை யாகவே புறக்கணிக்க முடிந்தவர்கள், அதிலிருந்து விலகி இருத்தல், ஒரு பெரிய வலிமையும் மகிழ்ச்சிக்கான வழியும் ஆகும். அதிக அளவு வழி வழியான மரபுகளுக்கு தலை வணங்காத ஆண்களும் பெண்களும் இருக்கும் ஒரு சமூகம் எல்லோரும் ஒரேயளவாய் இயங்கக்கூடிய, எதிர் வினையாற்றக்கூடிய சமூகத்தை விட மிக அதிக அளவு சுவாரஸ்ய மான சமூகமாக இருக்கும். ஒவ்வொரு தனிநபரின் குணநலனும் தனித் தனியான அளவு வளர்த்தெடுக்கப்படும் ஒரு சமூகச்சூழல், வேறுபாடு கள் பேணிப் பராமரிக்கப்படும் சூழல், புதியவர்களை சந்தித்தல் பயனுள்ளதாக அமையும்படியான சூழல் – ஏனெனில், அவர்கள் நாம் ஏற்கெனவே சந்தித்தவர்களின் நகல்கள் கிடையாது. இது மேற்குடி வர்க்கத்தின் அனுகூலங்களில் ஒன்றாக காலங்காலமாக இருந்துவருகி றது. அங்கே பிறப்பினாலான நடத்தையைச் சார்ந்தே அந்தஸ்து இருக் கிறது என்ற நிலையில் அது வழக்கத்திற்கு மாறாய், வினோதமாயிருப் பது அனுமதிக்கப்பட்டது. நவீன உலகில் நாம் இந்த சமூகரீதியான சுதந்திரத்திற்கான வழியாதாரத்தை இழந்துகொண்டிருக்கிறோம்.
eனவே, ஒரேமாதிரியாயிருத்தலின் ஆபத்துகள் பற்றிய முன்பைவிட கூடுதலான, வேண்டுமென்றே கைக்கொள்ளும் உணர்தல் விரும்பத் தக்கதாகிவிட்டது. மனிதர்கள் திட்டமிட்டரீதியில் விசித்திரப் பிறவி களாக நடந்துகொள்ளவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அப் படியிருத்தல் மரபார்த்த மாக இருப்பதுபோலவே சுவாரஸ்யமற்ற விஷயம். மனிதர்கள் இயல்பாக இருக்கவேண்டும் என்பதே நான் சொல்வது. அவர்கள் இயல்பாக இருக்கவேண்டும், தங்களுடைய ஆற் றொழுக்கான ரசனைகளை, அவை, சமூக-எதிர் போக்காக திடமான அளவு இருக்காதவரை, பின்பற்றவேண்டும். நவீன உலகில், பயணத் தின் அதிவிரைவு காரணமாக, மனிதர்கள் முன்பு புவியியல் ரீதியாக அருகிலிருந்த அண்டை அயலாரைச் சார்ந்திருந்த அளவுக்கு இப்போது இல்லை. கார் வைத்திருப்பவர்கள் இருபது மைல் தொலைவுக்குள் வசிக்கும் எவரையும் அண்டைவீட்டாராகக் கருத முடியும். எனவே, தங்கள் சிநேகிதர்களைத் தேர்ந்தெடுப்பதில், முன்பு இருந்ததை விட இப்போது அவர்களுக்கு அதிக ஆற்றல் உள்ளது. மக்கள் நெரிசலாக வாழும் எந்தப் பகுதியிலும், இருபது மைல் தொலைவுக்குள் ஒருவ ரால் தனக்கு இணக்கமானவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை யென்றால், அவர் மிகவும் துரதிர்ஷ்டசாலியாகத்தான் இருக்க வேண் டும். மக்கள் தொகை அதிகமாக உள்ள நிலப்பரப்புகளில் ஒருவர் தன்னுடைய அக்கம்பக்கத்தாரைக் கண்டிப்பாகத் தெரிந்து வைத் திருக்க வேண்டும் என்ற எண்ணவோட்டம் மறைந்தாயிற்று. ஆனால், சின்ன ஊர்களிலும், கிராமப்புறங்களிலும் அந்தக் கண்ணோட்டம் இன்னமும் நிலைகொண்டிருக்கிறது.
சமூகக் கட்டமைப்புக்காக உடனடி அண்டை வீட்டாரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததால், அது ஒரு முட்டாள்தனமான எண்ணமாகிவிட்டது. அருகே வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமேயல்லாமல் ஒத்திசைவின் அடிப்படையிலும் நம்முடைய நட்பினரைத் தேர்ந்தெடுத்தல் அதிகதிகமாக சாத்தியமாகிக்கொண்டே வருகிறது.
ஒத்த ரசனைகளும் ஒத்த சிந்தனைகளும் கொண்ட நபர்களின் தொடர் புறவாடல்களால் மகிழ்ச்சி வளர்க்கப்படுகிறது;; மேம்படுத்தப்படு கிறது. சமூகப் பரிவர்த்தனைகள் இந்த வழிகளில் மேலும் மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தற்போது வித்தி யாசமாய் உள்ள மனிதர்களைத் துன்புறுத்தும் தனிமையுணர்வு படிப் படியாகக் குறைந்து அடியோடு மறையும் புள்ளியை எட்டும் என்று நம்பலாம்.
இந்த மாற்றம் கண்டிப்பாக அவர்களுடைய மகிழ்ச்சியை அதிக ரிக்கும். அதேபோல், இது மரபார்ந்த மனிதர்கள் இப்போது அவர்களிட மிருந்து வேறுபட்டிருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதில், அவர் களை அடக்கியாள்வதில் அடையும் குரூர ஆனந்தத்தை கண்டிப்பாகக் குறைக்கும்.
என்றாலும்,, இந்த ஆனந்தத்தைப் பேணிப்பராமரிப்பதில் நாம் அதீத அக்கறை காட்டவேண்டியது அவசியம் என்று நான் கருதவில்லை என்பதையும் சொல்லியாகவேண்டும்..
மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று அச்சம் மற்ற எந்தவிதமான அச்சத்தையும் போலவே ஒருவரை அடக்கி ஒடுக்கி அவருடைய வளர்ச்சியை முடக்குவது. இவ்வகையான அச்சம் ஒருவரை வலுவாக ஆட்கொண்டிருக்கும்போது எவ்வகையான மேன்மையும் மகத்துவத் தையும் எட்டுவது கடினம். ஏனெனில் நம்முடைய வாழ்க்கை, வாழ் முறை என்பது நம்முடைய ஆழமான உள்ளுணர் வுகளிலிருந்து உரு வாக வேண்டுமே தவிர நம்முடைய அக்கம்பக்கத்தாராக யதேச்சை யாக அமையக்கூடியவர்களின், அல்லது, நமது உறவினர்களாக இருக் கக்கூடியவர்களின் ரசனைகள், விருப்பங்களால் அல்ல என்பது மகிழ்ச் சிக்கான அடிப்படை அம்சம்.
உடனடியாக அக்கப்பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி மக்களுக்கு இருந்த அச்சம் முன்பைவிட குறைந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், பதிலுக்கு ஒரு புதுவகை அச்சம் நிலவுகிறது செய்தித்தாள்கள் என்ன சொல்லக்கூடுமோ என்ற அச்சம். இது மத்திய கால ‘சூனியக் காரிகள் வேட்டை (witch hunt)யோடு தொடர்புடையவற்றைப் போன்று பெரும் பீதி உண்டாக்கக்கூடியதாகும் செய்தித் தாள்கள் அப்பாவின் மனிதராக இருக்கக்கூடிய ஒருவரை பலிகடாவாக்க முடிவு செய்யும் போது அதன் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்க வழி யுண்டு. நல்ல வேலையாக இந்த அவல விதியில் இருந்து பலர் தங்களு டைய ‘அறியப்படாத தன்மை’ காரணமாக தப்பித்துவிடுகிறார்கள். ஆனால், விளம்பரம் /பிராபல்யம் என்பது அதன் வழிமுறைகளில் அதிகதிகமாக துல்லியமடையும்போது சமூக ரீதியான தண்டனையின் இந்தப் புதுமையான வடிவத்தில் அதிகரித்துக்கொண்டேபோகும் அபாயம் இடம்பெறும். இதுவும், அதனால் பாதிப்படையும் தனி நபரால் அலட்சியமாக நடத்தப்படவேண்டிய மிக மோசமான விஷய மாகும் .பத்திரிகை சுதந்திரம் என்ற மகத்தான கோட்பாடு குறித்து நாம் என்ன நினைத்திருந்தாலும் இப்போது இருக்கும் அவதூறு சார் சட்டங் களில் வரையறுக்கப்பட்டிருப்பதை விட அதிக தீர்க்கமான அதற்கான வரம்பில்லைக் கோடு வரையப்பட வேண்டியது அவசியம் .அப்பாவி தனிநபர்களுக்கு வாழ்க்கையை பெருஞ்சுமையாக்கும் எதுவும், அப்ப டியே அவர்கள் ஏதேனும் சொல்லி இருந்தாலும் அல்லது அவற்றை வன்பத்தோடு பிரசுரிக்கும்போது அந்தத் தனி நபர்களை சமூகத்தில் மதிப்பிழந்தவர்களாகும் எதுவும், பொதுவெளி யில் வைக்கப்படுவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட வேண்டும். இந்த தீமைக்கான ஒரே முடிந்த முடிவான நோய் – நிவாரணம் பொது மக்களிடம் சகிப்புத் தன்மை அதிகரிப்பதுதான். அப்படி சகிப்புத் தன் மையை அதிகரிக்கச் செய்ய சிறந்த வழி உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கும் தனி நபர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. அதாவது, உண்மை யான மகிழ்ச்சியை அனுபவிக்கும் காரணத்தால், சக மனிதர்களைத் துன்பப்படுத்தி அதன் மூலம் ஆனந்தம் அடைய முற்படாத தனிநபர்க ளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே.
(*நூலின் முதல் பகுதி நிறைவுறுகிறது. )

- காரிருளில் ஒரு மின்னல்
- காற்றுவெளி மின்னிதழின்(2026) ஆவணி மாத இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக
- முதுமை
- கொலுசு மாத இதழ்
- மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – பாகம் – 1 அத்தியாயம் – 9
- மீ உரை Hypertextual Literature டிஜிட்டல் யுகத்தின் புதிய இலக்கியப் பரிமாணம்
- டிஜிட்டல் இறையாண்மை பேசுபொருள் ஆகியிருப்பது ஏன்?
- காத்திருப்பவர்கள்
- மன்மதன்கள்
- கவிதைகள்