Articles Posted by the Author:

 • நீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!

  நீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!

  ஜோதிர்லதா கிரிஜா      (21.1.2002  “பெண்ணே நீ” இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேதுஅலமி பிரசுரத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.)       ராஜாத்தி சாமி படங்களுக்கு முன்னால் இருந்த குத்துவிளக்கை ஏற்றிய பின், வழக்கம் போல் கண்களை மூடிய நிலையில், அவற்றின் முன்னால் நின்றுகொண்டு பிரார்த்தனை செய்தாள். பிரார்த்தனை என்பதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை அவளுடைய அப்பா அவளுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார்.        ‘அம்மா, ராஜாத்தி! கடவுள் கிட்ட,  எனக்குக் காசைக் கொடு, பதவியைக் கொடு, வீட்டைக்கொடு, […]


 • அதிர்ச்சி

  அதிர்ச்சி

    ஜோதிர்லதா கிரிஜா (5.7.1970 ஆனந்த விகடனில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன்  “அது என்ன நியாயம்?” எனும் தொகுப்பில் இடம் பெற்றது. சற்றே சுருக்கப்பட்டுள்ளது.))  முணுக் முணுக்னு எரிஞ்சிண்டிருந்த அந்தச் சுவரொட்டி விளக்கைச் சுத்திப் பறந்துண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில அதுக்குள்ள விழுந்தேபிடுத்து. விளக்கும் அணைஞ்சுது. விட்டில் பூச்சியும் செத்துப் போயிடுத்து. முட்டாள் பூச்சி. நெருப்பில போய் வலுவில விழுந்து இப்பிடிச் சாகுமோ? நான் படுக்கையில எழுந்து உக்காந்துண்டேன். வெளக்கு அணைஞ்சுட்டதால கூடத்துல இருளோன்னு […]


 • ம ன சு

  ம ன சு

    ஜோதிர்லதா கிரிஜா (1.2.1981 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  “மனசு” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.)                சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்றுகொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும் பூரித்துக் கிடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாதமாக இருந்தாள். சாவித்திரிக்கு மனசு பொங்கிற்று.  ‘அடிப் பாவிப்பெண்ணே! எவனையோ கல்யாணம் பண்ணிண்டு – கல்யாணமா அது முதல்லே? ஓடின்னா போனே? – ஒரு வளைகாப்பு நடந்திருக்குமா? சீமந்தம் […]


 • வேண்டுதலுக்கு ஓர் இலக்கணம்

  வேண்டுதலுக்கு ஓர் இலக்கணம்

    ஜோதிர்லதா கிரிஜா (கலைமகள் ஜூன், 1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  “மகளுக்காக” எனும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)       சுப்புரத்தினத்துக்கு அன்று காலையில் கண் விழித்த போது எப்போதையும் விட அதிகச் சோர்வாகவும் சலிப்பாகவும் இருந்தது. நகாசு வேலை செய்யப்பட்டவன் போல் ஆதவன் தகதகத்துக் கொண்டிருந்ததது சன்னல் வழியே தெரிய, கண்களின் கூசத்தில் அவற்றை மூடிக்கொண்டார். வெயிலின் சாய்விலிருந்து மணி ஏழரைக்கு மேல் ஆகி இருக்க வேண்டும் என்று கணித்துத் தமக்குள் வெட்கப்பட்டார்.       […]


 • ஆசாரப் பூசைப்பெட்டி

  ஆசாரப் பூசைப்பெட்டி

      ஜோதிர்லதா கிரிஜா   (1.5.1989 மந்திரக்கோல் இதழில் வந்தது. அன்பைத் தேடி எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்- இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)          அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர். எப்படித்தான் பெயர்?         “ஆசாரப் பூசைப்பெட்டி”        அப்படி ஒரு பெயரைத் தன் அலுவலகத் தோழர்கள்  தனக்கு இட்டிருந்தார்கள் என்பது அனந்தராமனுக்கு வெகு நாள்கள் வரையில் தெரியாதிருந்தது. கொஞ்ச நாள்களுக்கு முன்னால்தான் தனக்கு அவர்கள் வைத்திருந்த கேலிப்பெயர் தெரிய வந்தது. அது […]


 • நீறு பூத்த நெருப்பு

  நீறு பூத்த நெருப்பு

    ஜோதிர்லதா கிரிஜா (1.7.1975 மங்கை-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)       அந்தப் பெரிய வீடு தனது இயல்பான கலகலப்பை இழந்து சந்தடியற்று விளங்கிற்று. ‘சங்கு வாத்தியார்’ என்று ஊராரால் அழைக்கப்படும் சங்கர சாஸ்திரிகள் மாடியில் தம்மறையில் கண்களை மூடுவதும் திறப்பதுமாய்ப் பெருமூச்செறிந்த வண்ணம் குறுக்கும் நெடுக்குமாய் நடை போட்டுக்கொண்டிருந்தர்ர்.        ‘பாவி! சண்டாளி! இப்படிப் பண்ணிப்பிட்டாளே கடைசியிலே! இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமாங்கிறாப் போல குனிஞ்ச தலை […]


 • கண்ணிய ஏடுகள்

  கண்ணிய ஏடுகள்

                      ஜோதிர்லதா கிரிஜா (தீபம் இதழில் 1987 இல் வந்த சிறுகதை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் ‘உடன் பிறவாத போதிலும்’ எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)                எழுத்தாளர் துரையரசன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, சுவரை வெறித்துப் பார்த்தபடி கையுடைந்த தமது நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். தமது அறை என்று சொல்லிக்கொள்ள ஒரு மரத் தட்டியால் மறைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் யாரும் அதைத் தட்டாமல் […]


 • உலக நடை மாறும்

  உலக நடை மாறும்

    ஜோதிர்லதா கிரிஜா (நீலக்குயில், அக்டோபர் 1974 இதழில் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொகுப்பில் உள்ளது.) மாலை ஐந்து மணி அடித்ததும் நான் நாற்காலியை விட்டு எழுந்தேன். சந்திக்க வந்திருந்தவர்களுக்கான நேரம் அத்துடன் முடிந்துவிட்டது என்பதற்கு அடையாளாமாக நான் என் செயலர் பரந்தாமனைப் பார்த்துக் கையசைத்தேன். அந்த அசைப்பின் பொருளைப் புரிந்துகொண்டவனாக அவனும் வெளி வராந்தாவுக்குச் சென்று என்னைப் பார்க்க வந்திருந்தவர்களை மறு நாள் வந்து சந்திப்பதற்குரிய நேரத்தையும் இடத்தையும் தெரிவித்து அனுப்பி வைப்பதற்கு […]


 • மொழிபெயர்ப்பாளர்க்கான விருது

  அன்புக்குரிய திண்னை வாசகர்களுக்கு. வணக்கம். 1.2.2021 அன்று மொழிபெயர்ப்பாளர்க்கான விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிந்துரையின் பேரில் தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு. பழநிச்சாமி அவர்களால் (Voice of Valluvar, TirukkuraL, the Tamil Veda, Tamil Moral Quatrains – Naaladiyaar, All-time Adages of Avvaiyaar, the Tamil Poetess ஆகியவற்றுக்காக) எனக்கு வழங்கப்பட்டதென்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஜோதிர்லதா கிரிஜா 


 • அம்மாவுக்கு ஓய்வு

  அம்மாவுக்கு ஓய்வு

    ஜோதிர்லதா கிரிஜா (டிசம்பர் 1973 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் தொடுவானம் எனும் தொகுப்பில் இடம் பெற்றது.)       வழக்கம் போலவே லெட்சுமிக்குக் காலை நான்கு மணிக்கெல்லாம் தூக்கம் கலைந்துவிட்டது. அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்டு குளிரில் விறைத்துவிட்ட கைகால்களை இரத்தம் ஊறத் தேய்த்துவிட்டுக்கொண்டு சோம்பல் முறித்து ஒரு நீண்ட கொட்டாவியும் விட்டதன் பின் தன்னையும் அறியாமல் திண்ணைப் பக்கம் பார்வையை ஓடவிட்டாள். பழைய பாணியில் வெகு நாள்களுக்கு முன்னர் கட்டப்பெற்ற அந்தச் செங்கற்சுவர் வீட்டின் […]