விரிவு நூலின் ஒரு முனை என் கையில் சுற்றப்பட்டிருக்க அந்தரத்தில் அலைகிறது காற்றாடி செங்குத்தாய்க் கீழிறங்குகிறது; சர்ரென்று மேலெழும்புகிறது வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது தென்றலின் வேகம் அதிகரிக்க தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம் அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின் பலகணிக் கம்பிகளில் சிக்கிக்கொண்டுவிடுகிறது. எத்தனை கவனமாக எடுத்தும் காற்றாடியின் ஒரு முனை கிழிந்துதொங்குவதைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. ஆனாலும் தரைதட்டாமல் தன் பறத்தலைத் தொடரும் காற்றாடியின் பெருமுயற்சி கையின் களைப்பை விரட்டியடிக்கிறது. காற்றாடிக்காக வானம் மேலே […]
ஏசு மகான் உயிர்த் தெழவில்லை சி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில் ஆணியால் அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி உயிர்த் தெழ வில்லை ! ஆணி அடித்த கைகளில் துளை தெரிகிறது ! ஆணி அடித்த பாதங்களில் துளை தெரிகிறது ! சிரத்தில் வைத்த முட் கிரீடத்தில் இரத்தம் தெரிகிறது ! குருதி சிந்தி, சிந்தி, கும்பி வெம்பி, வெம்பி, […]
1. கவிதை விற்றவனின் பிரதிகள் காலவிதை உருமாற்றிய பிம்பம் தன்னைத் தேடி காலம் தொலைத்து காலமாகி கரைந்துபோக… முடிவில்லா வெளியில் தானுமாகி அவையுமாகி அவளுமாகி … நீக்கமற நிறைந்த ஏதோவொன்றின் மறுபிரதி நான். 2. எனக்குள் இருக்கும் என்னை என்ன ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை எப்படி ஆனாலும் எனக்குள் இருக்கும் என்னை நான் அறிந்துகொள்ள அன்றாடம் மறவாமல் பேசும் அந்தப் படிகட்டுகளுக்கும் தெரியும் அவளோடு பயணித்த […]
குமரி எஸ். நீலகண்டன் காற்று போன உடல் மாயமாகலாம். உள்ளிருந்த இதழினும் மெல்லிய அன்பும் இதமான ஈரமும் வளமான இடம்தேடி வானுயர வளர்ந்து விடுகின்றன. அந்த ஆலமரங்களின் அகன்ற விழுதுகளில்தான் தலைமுறைகள் தணலினில் தொங்கி விளையாடுகின்றன. நல்ல மனிதர்களின் மரணம் நல்ல விதைகளை பலரிடம் தூவித்தான் செல்கின்றன. அவர்களுக்கு மரணமேது? ( மூத்த மொழிபெயர்ப்பாளரும் எனது ஆகஸ்ட் 15 நாவலை இந்தியில் மொழிபெயர்த்தவரும் சாகித்ய அகாதமி விருதாளருமான டாக்டர் ஹெச். பாலசுப்ரமணியம் […]
யார் நீ? ஓர் அதி அழகிய பசும் இலை அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _ அத்தனை இனிமையான பாடல் அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை யிலேயே அபஸ்வரமாக ஒலிக்கத் தொடங்குவதைப் போல் _ பட்டுப்போன்ற குட்டிப்பாப்பா மளமளவென்று வளர்ந்து பொறுக்கியாகி அலையத் தொடங்குவதுபோல் _ கட்டித் தொடுத்த மல்லிகைகள் கணத்தில் கொட்டும் தேள்கொடுக்குகளெனக் கூர்த்துக் கருத்துவிடு வதைப்பொல் _ சாலையோர நிழலின் கீழ் பாதுகாப்பாய் நடந்துகொண்டிருக்கும்போதே நேர்மேலே […]
அமீதாம்மாள் மருத்துவ உலகின் மாமன்னன் அவர் ஆராய்ச்சிக்காகவே ஆயுளைத் தந்தவர் உலகெங்கும் வாழ்ந்தாலும் ஜெர்மனியில் வசிக்கிறார் அங்குதான் வசிக்கிறார் என்னுடைய மகளும் எனக்கும் ஒரு முடக்கு நோய் ஊடு கதிர் ஊடாக் கதிர் ஒளிக்கதிர் ஒலிக்கதிர் ஆய்வுக் கணைகள் அக்னிப் பிரவேசங்கள் என்று ஏராள சோதனைகள்-ஆனாலும் நோய் நோயாகவே அத்தனை ஆய்வையும் மகளுக்கு அனுப்பினேன் அந்த மருத்துவரிடம் காட்ட ஆறேழு நாட்கள் அத்தனையும் ஆராய்ந்தார் நோயின் ஆணிவேரை […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கதவு திறந்திருந்தும் அவன் இன்னும் உள்ளே போகவில்லை பயணிக்கிறோம் என்ற நம்பிக்கையில் அவன் அதே புள்ளியில் நிற்கிறான் இலக்கிய தாகத்தில் அவன் சில வடிவங்களில் தன்னை நிரப்பிப் பார்த்தான் எங்கும் நிலைக்க முடியவில்லை அவன் மனத்தில் சில எழுத்துகள் இருக்கின்றன அவை சொற்களாவதில்லை சில சொற்கள் இருக்கின்றன அவை வாக்கியங்களாவதில்லை சில வாக்கியங்கள் இருந்தும் அவை கவிதையாவதில்லை அவன் கோப்பையில் நிரம்பி […]
பா.உதயன் உங்கள் வீட்டுப்பெண்களுக்குமார்புகள்வெட்டப்படவில்லை உங்கள் பிள்ளைகள்எவரும்தொலைந்து போகவில்லை உங்கள் பிள்ளைகளைஎவரும் வல்லுறவுசெய்யவில்லை உங்கள்சொத்து சுகங்கள்எதையும்நீங்கள்இழக்கவில்லை பசி பட்டினியால்நீங்கள்எவரும் இறக்கவில்லை இழந்ததுஎல்லாம்நாங்கள் மட்டுமே ஒரு பொல் பொட்டையோஒரு ஹிட்லரையேஒரு ஸ்டாலினையோஒரு முசோலினியையோஅந்த மக்களைமறக்கச் சொல்லுங்கள்நாமும் மறந்து விடுகிறோம். பா.உதயன் Oslo Norway
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு மூன்று வீடுகள் இரண்டு மூன்று அலுவலகங்கள் இரண்டு மூன்று ஆட்டோக்கள் இரண்டு கிலோமீட்டர் பொடிநடை இரண்டு மூன்று கடைகள் இரண்டு மூன்று தெருத்திருப்பங்கள் இரண்டு மூன்று மணிநேரங்கள் இவற்றிலெங்கோ எதிலோ என் அடையாள அட்டைகள் பறிபோயிருந்தன. நான் இப்போது நானே நானா யாரோ தானா…. விடுதலையுணர்வும் ஏதிலி உணர்வும் பாதிப்பாதியாய்….. இன்னும் சில நாட்கள் அலையவேண்டும் இன்னும் சில வரிசைகளில் நகர வேண்டும் இன்னும் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) விழுங்கக் காத்திருக்கும் கடலாய் நெருங்கிக்கொண்டிருக்கிறது உறக்கம். யாரேனும் துரத்தினால் ஓடுவதுதானே இயல்பு _ அது மரத்தைச் சுற்றியோடிப்பாடிக்கொண்டே காதலியைத் துரத்தும் சினிமாக் காதலனாக இருந்தாலும்கூட… ஓடும் வேகத்தில் கால்தடுக்கி விழுந்துவிடலாகாது. உறக்கத்தில் மரத்துப்போய்விடும் சிறகுகளைக்கொண்டு எப்படிப் பறப்பது..? உறங்கும்போதெல்லாம் சொப்பனம் வரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது…. எப்பொழுதும் வராது பீதிக்கனவு என்றும். தனக்குள்ளேயே என்னை வைத்திருக்கும் தூக்கத்திலிருந்து வெளியேறும் வழியறியா ஏக்கம் தாக்கித்தாக்கிச் சிதைவுறும் மனம் தன்னைக் கவ்வப் […]